கதை களம்
வட்டக்கானல்’ என்பது தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல் எனும் பகுதியிலிருந்து சிறிது தொலைவில் அமைய பட்டிருக்கும் நீர்வீழ்ச்சியுடன் கூடிய சிறு கிராமம் இந்த கிராமத்தின் பின்னணியில் நடைபெற்ற கேங்ஸ்டர்களின் உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. வட்டக்கானல் பகுதியில் காளான் உற்பத்தி அதிகம் இருக்கிறது அதை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும், கேங்ஸ்டர் நரேன், அவரிடம் டிரைவராக சேர்ந்து அவரையே வீழ்த்தி, அந்த போதைப் பொருள் கடத்தும் கேங்ஸ்டராக மாறும் ஆர் கே சுரேஷ், இவர் செய்யும் துரோகம் ஆடுகளம் நரேனை கொலை செய்கிறார். நரேன் மனைவியாக வித்யா பிரதீப், அவரையும் அந்த இடத்தை விட்டு அகற்றவும் செய்கிறார்
ஆர். கே சுரேஷ், ராதாவாக நடித்திருக்கும் வித்யா பிரதீப் , ஆர்.கே சுரேஷை வீழ்த்துவதற்கு , 20 வருஷமாக தவம் இருக்கிறார். ஆர்.கே சுரேஷ் அனாதை குழந்தைகளான சத்தியா, சூர்யா, சிவா என்ற மூன்று பேரை தத்தெடுத்து தன் குழந்தைகளாக வளர்க்கிறார் . தனக்கு ஆபத்து வரும் போதெல்லாம் இந்த மூன்று பேரை உபயோகித்துக் கொள்கிறார்.
நாயகி வர்ஷா சின்ன வயதில் அப்பாவோடு இருக்கும் பொழுது ஒரு மரம் விழுந்து மனோ இறந்துவிட வருஷ வாய் பேச முடியாத பெண்ணாக வளர்கிறார். அவருக்கு ஒரு ஆசை தன்னிடம் இருக்கும் 200 ஏக்கர் எஸ்டேட்டை ஏழைகளுக்கு எழுதி வைக்க வேண்டும் என்று, அப்பாவான மனோவும், அதை ஆமோதிக்கிறார். ஆனால் ஆர். கே சுரேஷ் அந்த இடம் போதை வஸ்துக்களான காளான் வளரும் இடம் .அது தன் கைக்கு வர ஆசைப்படுகிறார் இப்பொழுது சத்யாவும் வருஷாவும் காதலிக்கிறார்கள். அந்த இடத்தை ஏழைகளுக்கு எழுதிக் கொடுக்க
ஆர் .கே சுரேஷ் விட்டாரா? சத்யா வர்ஷா காதல் என்ன ஆனது ? என்பதை விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் நிறைந்து
சொல்லி இருக்கும் படம் “வட்டக்கானல்”
: ஆர் கே சுரேஷ்
: கதிரவன் என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான எதற்கும் அஞ்சாத பாதகம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிரட்டலான நடிப்பு சொந்த மகன் சத்தியா, சூர்யா, சிவாவை கொல்ல நினைக்கும் அவர் நடிப்பு , வர்ஷாவின் சொத்துக்களை அடையத் துடிக்கும் அந்த கொடூரமான முகம் ,என மிரட்டலான வில்லனாக கலக்கியிருக்கிறார் ஆர் கே சுரேஷ்.
துருவன்மனோ
: சத்யா என்ற கதாபாத்திரத்தில் பாடகர் மனோவின் மகன் நடித்திருக்கிறார். ஒரு தாதாவின் மகனாக அடிதடிகளுக்கு துணிந்து, வர்ஷாவை பார்த்த பிறகு காதலுக்கு மயங்கி, ஏழைகளுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், அவர் நடிப்பு மிக கச்சிதமாக இருக்கிறது.
இளம் கதாநாயகனாக பல படங்களில் வருவார் என்பது உறுதி
காதல், சோகம்,அடிதடி எல்லாம் நன்றாக வருகிறது.
மீனாட்சி கோவிந்தராஜன் வர்ஷா என்ற கதாபாத்திரத்தில், வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் ஏழைகளுக்கு தன் சொத்துக்களை எழுதி ,அந்த நல்ல உள்ளம் கொண்ட கதாநாயகியாக காதலனிடம் கனிந்து பேசி, அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் அவர் நடிப்பு ரசிக்க வைக்கிறது முடிவு பரிதாபமானது
ராதாவாக வித்யா பிரதீப், 20 வருஷ பகையை எப்படி தீர்ப்பது என்று அங்கங்கு உளவுத்துறை ஆட்களை வைத்து கதிரவனை வீழ்த்த துடிக்கும் அந்த கொடூரமான வில்லனை துடிக்கும் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது
: மற்றும் இந்த படத்தில் சதீஷ், முனியனாக வரும் ஜார்ஜ் விஜய், போன்ற கதாபாத்திரங்கள் சிறப்பாக இருக்கிறது
, பாடகர் மனோ நாயகியின் அப்பாவாக மகள் மீது பாசம் கொண்ட அன்புள்ளம் கொண்டவராக சில காட்சிகள் வந்தாலும் சிறப்பாக நடித்தி ருக்கிறார்.மற்றும்
ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி R K வரதராஜ்,ஆகியோர் நடித்துள்ளனர்..
துணை கதாபாத்திரங்களில்
முருகானந்தம், Vijay TV சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த்,பாத்திமா பாபு ஆகியோறும் நடித்துள்ளனர்…
. தொழில் நுட்ப கலைஞர்கள்
எம்.ஏ ஆனந்த்
ஒளிப்பதிவாளர், கேமரா கோணம் கொடைக்கானல் அழகை அள்ளி வந்திருக்கிறது .
இயக்குனர்பிதக் புகழேந்தி ,ஒரு தேவையான நல்ல மெசேஜ் இந்த இளைஞர்களை அழிக்கும் போதை பொருளான கஞ்சா எப்படி உருவாகிறது. மஸ்ரூம் காளானிலிருந்து எப்படி அதை உருவாக்குகிறார்கள். என்பதை எல்லாம் தெள்ளத் தெளிவாக காட்டி நல்ல ஒரு சமுதாய கருத்தை சொல்லி இருக்கிறார். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
மாரிஸ் விஜய் இசையமைத்திருக்கிறார்.
பாடல் காட்சியும் பின்னணி இசையும் மிரட்டி இருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான இந்த திரைப்படத்தை எம் பி ஆர் பிலிம்ஸ் மற்றும் ஸ்கைலைன் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஏ. மதியழகன், எம். வீரம்மாள் மற்றும் ஆர்.எம்.ராஜேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
பட தொகுப்பு – சாபூ ஜோசப், கலை – DON பாலா,
ஸ்டன்ட் இயக்கம் DON அசோக்,
நடனம் – ஷெரிப்
இப்படத்தின்
மக்கள் தொடர்பாக சாவித்திரி, அவர்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த வட்டக்காணல் பசுமையான அழகான அந்த கிராமத்தையும்,
அந்த கிராமத்தில் வளரும் இயற்கையான காளானை எப்படி போதை கும்பல் பயன்படுத்துகிறது என்பதையும்,
ஏழை மக்களுக்கு உதவி செய்யும் நல்ல எண்ணம் கொண்டவராக இருந்தாலும் துரோகம் கொண்ட சுயநலவாதிகள் எப்படி அவரை வீழ்த்துகிறார் என்றும். உண்மையான காதலர்கள் எந்த வகையிலும் சேர்ந்து விடுவார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறது தரமான மேக்கிங்,
தெளிவான திரைக்கதை,
குழப்பமில்லாத நேர்கோட்டில் பயணிக்கிறது.
மொத்தத்தில் இந்த “வட்டக்கானல்” வெற்றிக்கானலாக மாறும்
