கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “அதர்ஸ்”
யூகிக்க முடியாத மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
ஜெட் வேகத்தில் பறக்கும் திரைக்கதை, அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் மாயாஜாலம். அற்புதமான மேக்கிங், என படத்தை எல்லா தரப்பு வகையினரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் 🌷
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில்
க்ரைம் திரில்லருக்கே உரிய கேமரா கோணம். இரவின் வெளிச்சம். கலர் கரெக்ஷன், ஒவ்வொரு ஷாட்டுக்கும் திகிலூட்டும் வண்ணம் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பின்னணி இசை, பிரமாதமாக இருக்கிறது .மிரட்டி இருக்கிறார் படத்தின் வேகத்துக்கு தகுந்தபடி அவர் கொடுத்திருக்கும் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். திகில் படத்திற்கு இசை தான் பிரதானம். அதை சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார் ஜிப்ரான்👌
புதுமுகம் ஆதித்ய மாதவன்,
அசிஸ்டன்ட் கமிஷனர் மாதவ் என்னும் கதாபாத்திரத்தில் ஒரு போலீஸ் அதிகாரியை நேரில் பார்த்து அவரோடு சேர்ந்து நாமும் இன்வெஸ்டிகேஷன் செய்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறார்.
ஆதித்யா மாதவன் அவரின் ஸ்டைலான நடிப்பு ,புதுமுகம் என்ற எண்ணமே இல்லாமல் இன்வெஸ்டிகேஷன் அதிகாரியாக வாழ்ந்து காட்டி இருக்கிறார். முகபாவனை அற்புதம். மனைவி உடன் அதிக நெருக்கமான காட்சிகள் இல்லை என்றாலும் அவர் காட்டும் அந்த பாசம், குற்றவாளியை யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தேடும் பயணம் கொலை காரணமிடமிருந்து மனைவி மதுவை காப்பாற்றும் அந்த காட்சி பரபரப்பாக இருந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் அவர் பக்கம் இருக்கும் நியாத்தை சொல்லிக்கொண்டு எதிரியை வீழ்த்துவது சிறப்பு .தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு ஆதித்யா மாதவன்.
கவுரி கிஷன்,
மருத்துவர் மதுவாக தான் பணிபுரியும் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் ஆணும் இன்றி பெண்ணும் இன்றி நடுநிலையோடு பிறப்பு கண்டு கலங்கிஅந்த மெடிக்கல் மாமியா கும்பலை எப்படி கண்டுபிடிக்கிறார்? அவருக்கு ஏற்படும் அந்த சிக்கல்களை முகேஷ், சார்லஸ், என்ற நபர்களின் முகமூடியை எப்படி கிழிக்கிறார்? என்பதில் பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கௌரி கிஷன்👌
அஞ்சு குரியன்
ஆதித்திய மாதவனுக்கு உதவியாளராக போலீஸ் அதிகாரியாக பீனா என்ற கதாபாத்திரத்தில் ஒரு நிஜ போலீசை பார்த்தது போன்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தன் உயிரைக் கொடுத்து நியாயத்தை காப்பாற்றி வில்லனை பிடிக்க நினைக்கும் அந்த விறுவிறுப்பான ஆக்ஷன் களத்தில் அதிரடி காட்டி இருக்கிறார். ஒரு இன்வெஸ்டிகேஷன் ஆபிஸர் எப்படி இருப்பாரோ! அப்படியே அஞ்சு சூரியன் பொருந்தி இருக்கிறார்.
மற்றும்
‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ‘நண்டு’ ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்
கதை களம்
ஒரு இரவில் மூன்று பெண்கள் பார்வையற்றவர்கள் வரும் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து அந்த மூன்று பேரும் மாண்டு போகிறார்கள் அவர்கள் யார்?
மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தவறான முறையில் அந்த குழந்தைகளை ஆணுமற்ற பெண்ணு மற்ற நிலையை உருவாக்கும் அந்த கருமுட்டையை செலுத்துவது யார்?
இந்த இரண்டுக்கும் முடிச்சு போட்டு கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குனர். திரைக்கதையில் அவ்வளவு தெளிவாக கொண்டு சென்றிருக்கிறார். இன்வெஸ்டிகேஷன் நடத்தும் நாயகன், மருத்துவமனையில் நடக்கும் தவறுகளை கண்டுபிடிக்கும் நாயகி ,அவருக்கு துணை நிற்கும் கதாபாத்திரங்கள் கதிரவன் , நாயகன் உடன் பணிபுரியும் பீனா, குற்றவாளிகளுக்கு துணை நிற்கும் சார்லஸ், குற்றவாளிகளை வழிநடத்தும் வேதா, மருத்துவமனையில் தவறு புரியும் முகேஷ், ஆதரவற்ற வர்களுக்கு உதவி செய்ய நினைத்து ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் கருணை கோயில் நிர்வாகத்தை சேர்ந்த மதர், இப்படி எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து திரைக்கதையில் மாயாஜாலத்தை ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன? அடுத்து என்ன ?என்று கேட்கும் வகையில் கதையை இயக்குனர் நகர்த்திச் சென்று கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு மனிதநேயம் உள்ள ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார் படத்தை தூக்கிப் பிடிக்கிறது. அந்த கிளைமாக்ஸ் காட்சி .
தவறு செய்யாத ஒரு சமூகத்தை இந்த மனிதர்கள் எப்படி தண்டிக்கிறார்கள்? அவர்கள் தண்டிக்க துணிந்து விட்டால் இந்த சமுதாயம் என்னவாகும் என்பதை யோசிக்க வைக்கிறது இந்த 🌷”அதர்ஸ்”
வேதா கதாபாத்திரம் படத்தின் மற்ற பகுதிகளுடன் முரண்படும்போது அது முற்றிலும் வேறுபட்டது.
. வேதா யாரும் கற்பனை செய்து பார்க்காத கதாபாத்திரங்களை இயக்குரின் பார்வையில்
ஒரு சமுதாய உறவுகள் மறைந்த பிறகு ஒரு புதிய உறவின் நடைமுறையை தற்காலிகமாக ஆராய்வது பற்றியது. மாதவ் ,வேதாவும் அருகருகே நடந்து சென்று தங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேசும் ஒரு காட்சி உள்ளது, மேலும் அவர்களின் வேதியியல் மிகவும் நிதானமாகவும், கொண்டதாகவும் இருக்கிறது, இந்த உரையாடலை நிறுத்தும் துண்டிக்கப்பட்ட ஃப்ளாஷ்பேக்குகளுக்குபின்னனி . ஒரு தொடர்-கொலைகார த்ரில்லரின் சிறந்த விசித்திரமாகத் தெரிகிறது
இந்த படத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. துப்பறியும் பணியும், மோதல்களும் உற்சாகமானவை மற்றும் சிறப்பாக செய்யப்பட்டவை, ஆனால் ஹாலிவுட்டைப் பற்றி அறிந்த எவருக்கும் இவை முற்றிலும் புதியவை அல்ல. ஆனால் அந்த சம்பவங்கள், விளிம்பில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் இயக்குனர்
கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் மாற்றி இருக்கலாமோ என்று என்ன தோன்றுகிறது அது இயக்குனருக்கு என்ன தேவைப்பட்டது அதை சரியாக செய்திருக்கிறார் என்று என்ன தோன்றுகிறது.
ஒரு கிரைம் திரில்லர் படத்தில் வில்லனுக்கு சிம்பதி ஏற்படுத்த நினைப்பது சரியா? என்ற கேள்வி நமக்கு ஏற்படுகிறது இயக்குனரின் பார்வையில் அப்படி ஏற்பட வில்லையோ?
தொழில்நுட்ப கலைஞர்கள்
ராமரின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தையும், விறுவிறுப்பையும், திரைக்கதையை சீராக கொண்டு செல்ல உதவியிருக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம் படத்தொகுப்பு
டிரெய்லர் கட்டில்
உதவி இருக்கிறார் இயக்குனர் அபின் ஹரிஹரன்.
ஆர்ட் டைரக்டராக உமா சங்கர், பணி புரிந்திருக்கிறார் நாயகனின் காவல் நிலையம், மருத்துவமனை, கிளைமாக்ஸ் காட்சியில் போடப்பட்டிருக்கும் செட், இப்படி எல்லா இடங்களிலும் அவர் கைவண்ணம் பளிச்சென்று தெரிகிறது.
சண்டை பயிற்சியாளராக பிரதீப், இரண்டு சண்டை காட்சிகளை விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார். ஆக்சன் களத்தில் அனல் தெறிக்க விட்டிருக்கிறார்.
நடனம் சந்தோஷ் ,
பாடல்களை ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார் எழுதி இருக்கிறார் மோகன ராஜன்.
ஒவ்வொருவருக்கும் உடைத்தெருவில் கச்சிதமாக தேர்வு செய்து இந்த கதாபாத்திரங்களை கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர் டினா ரெஸாரியோ.
Vfx And Publicity Design: Gokulraaj Bhaskar
Vfx Producer: Hari Raroth
Sound Fx: Sathish
Stills: Raj
Dubbing: K Jagan (Magic Lantern)
Di: Infinity Media
Colourist: G.S. Muthu
Sound Mix: Anand Ramachandran
Pro: Sathish (Aim)
Digital Promotions: Vivek Amirthalingam
Strategist: Arka
Co-Producer: Adhiraj Purushothaman, Kartik G
Executive Producer: Divya Mano
Production Executive: A.V. Palanisamy
Line Producer: Srinivasan
என இந்த வெற்றிப்படத்தில் பணிபுரிந்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் பிரமாதமான ரசிக்க வைக்கும் ஒரு கிரைம் ,திரில்லர் படத்தை கொடுத்ததற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த “அதர்ஸ் வெறுக்கபட வேண்டியவர்கள் அல்ல, நேசிக்க வேண்டியவர்கள்.
நேசிப்போம் புதிய சமுதாயம் உருவாகட்டும் மனிதம் தழைக்கட்டும்
