எம் ஜி ஆர் சாதனையை எம் ஜி ஆர் முறியடித்து சாதனை

“உலகம் சுற்றும் வாலிபன்” மக்கள் திலகத்தின் 65 வது 100 நாள் மற்றும் 16 வது வெள்ளி விழா படமும் ஆகும்.
எல்லோரும் படம் எடுப்பார்கள்.
அது நாடகத்தனமாகவும், மோனோ ஆக்டிங் படமாகவும் இருந்தது. ஆனால் மக்கள் திலகம் மட்டும்தான் எப்படி ஒரு சினிமா இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக படம் எடுத்தார்.

இதற்கு முன்னர் வெளியான வெளிநாட்டில் ஷீட்டிங் செய்த படங்களை எல்லாம் டம்மி படங்களாக ஆக்கிய படம்தான் “உலகம் சுற்றும் வாலிபன்”. முதலில் இதற்கு வைத்த பெயர் ‘மேலே ஆகாயம் கீழே பூமி’. அது எதற்காக வைத்த பெயர் என்பதை யோசித்தால் புரியும், இந்த படத்துக்கு முன்னும் பின்னும் இது போல் ஒரு படம் எடுக்க முடியாது என்பதை உணர்த்த.

மேலும் இந்த படத்தின் வசூலுக்கு எல்லையே கிடையாது என்பதை குறிப்பால் உணர்த்தும் படமாக அமைந்தது இந்த “உலகம் சுற்றும் வாலிபன்”. சிவனின் பாதங்களை பார்க்க சென்ற பிரம்மா திருமாலின் கதையாக முடிந்தது‌ மாற்று நடிகர்களின் போலியான வசூல் விபரங்கள். ஒன்றிரண்டு காசுக்கு பல்லிளிக்கும் ஊடகங்கள் வாயிலாக ஒரு தரம் கெட்ட படத்துடன் ஒப்பிட்டு போலியாக சாதனை என்று அலறும் கைஸ்களின் நிலை இன்னும் பரிதாபகரமானது.

மேலும் “உலகம் சுற்றும் வாலிபனி”ன்
அருமை பெருமைகளை பலமுறை நாம் மட்டுமல்ல சினிமாவை அறிந்தவர்கள் அனைவரும் அறிந்ததே. “மதுரை வீரன்” தான் தமிழ் நாட்டில் அதிக திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம்.‌1956 ல் நடந்த அந்த
சாதனையை முறியடிக்க இன்று வரை படங்கள் இல்லை. 31 க்கும் அதிகமான அரங்கில் 100 நாட்களை கடந்து ஓடியது.

அதற்கப்புறம், சுமார் 17 ஆண்டுகள் கழித்து “உலகம் சுற்றும் வாலிபன்” அந்த சாதனையை சமன் செய்து உலகம் முழுவதும் இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் உட்பட சுமார் 32
திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி ஓடி மீண்டும் ஒரு புதிய சாதனையை செய்தது. (தமிழ் நாட்டில் மொத்தம் 20 + கர்நாடகாவில் 3 + இலங்கையில் 3+ மலேசியா 1+சிங்கப்பூர் 1+ தொடர்ந்த ஷிப்டில் 4
என்று மொத்தம் 32.) மற்றும் வேறு பல சாதாரண நடிகர்களின் படங்களில் ஒன்றை முக்கி முக்கி வடக்கயிறு சகிதம் ஒட்டியும் அதிகபட்சமாக 18 திரையரங்குகளில் மட்டுமே சொற்ப வசூலுடன் இழுத்து செல்லப்பட்டது வரலாறு.

இப்படி பல நம்பமுடியாத, நடக்க முடியாத பல சாதனைகளை செய்து முடித்த “உலகம் சுற்றும் வாலிபனி”ன் வெற்றி வரலாறை பரணி பாட ஒரு
புறநானூறு போதாது. 10 பாடல்கள் படத்தில். அந்த படத்தின் பாடல்களில் இசைக்கப்பட்ட இசைக்கருவி வேறு எந்தப் படத்திற்கும் இசைக்கப்பட்டதில்வை என்பது கூடுதல் சிறப்பு. சண்டைக் காட்சிகளில் வெரைட்டி மற்றும் புதுமையான ஸ்டைலிஷ் பயன்படுத்தப்பட்டிருக்கும். சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் 100 நாட்கள் மற்றும் அதிக நாட்கள் ஓடிய படம்தான் “உலகம் சுற்றும் வாலிபன்”.

நடிப்பு என்ற போர்வையில் மிகை நடிப்பை திணித்ததுடன் மக்களை
விதவிதமான முறையில் வதைத்த
வேதனையில் இருந்த மக்களுக்கு
ஆறுதல் தந்ததுடன் புது சொர்க்கத்தை காட்டிய படம்தான்
“உலகம் சுற்றும் வாலிபன்”. ( இந்த படத்தின் சிறப்பினை எழுத துவங்கியவுடன் உலகம் சுற்றும் வாய்ப்பு எனக்கும் வந்து விட்டது. லண்டனில் இருந்து எழுதினேன்.)