நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் சினிமாவில் உயரம் தொட்ட கலைஞர் எந்த வேடம் என்றாலும் சிறப்பாக நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு உயிரூட்ட கூடியவர் அவர் நிறைய வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் அவர் வெற்றிக்கு துணை நின்ற கதாநாயகிகள் 30 பேர் அவர்களை பற்றி தான் பார்க்க போகிறோம் வாங்க நிகழ்ச்சி குள்ளே போகலாம்
1952 ஆம் ஆண்டு வெளிவந்த பராசக்தி முதல் படமே முத்தான படமாக வெற்றியை பறைசாற்றியது இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர் பண்டரி பாய் பண்டரிபாய் சிவாஜி கணேசன் இருவரும் சேர்ந்து நடித்த தெய்வமகன் மீண்டும் பெரிய ஹிட் ஆனது அதன் பிறகு கௌரவம் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள் அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது அதன் பிறகு அந்த நாள் மற்றும் திரும்பி பார் படங்கள் எனவே சிவாஜிகணேசன் பண்டரிபாய் ஜோடி செம ஹிட்டான ஜோடி என்பது இதிலிருந்து தெரிகிறது. 
அடுத்து பானுமதி இவர்கள் இருவரும் ரங்கோன் ராதா அம்பிகாபதி கள்வனின் காதலி மணமகன் தேவை, அறிவாளி, மக்களைப் பெற்ற மகராசி இப்படி பல படங்களில் நடித்திருந்தாலும் மக்களைப் பெற்ற மகராசி சூப்பர் ஹிட் வெற்றி படமாக மாறியது இருவரும் நல்ல ராசியான ஜோடி என்று படம் பார்த்தவர்கள் கூறினார்கள் அடுத்து சிவாஜி அவர்களுடன் சாவித்திரி நடித்த படங்கள் 18 திரைப்படங்கள் பெண்ணின் பெருமை, அமர தீபம், வணங்காமுடி, காத்தவராயன், குறவஞ்சி, பாவ மன்னிப்பு, அன்னையின் ஆனை, கப்பலோட்டிய தமிழன், பாசமலர், ரத்த திலகம், நவராத்திரி, திருவிளையாடல், பிராப்தம் ,போன்ற படங்கள் நடித்திருந்தாலும் திருவிளையாடல், பாசமலர் திரைப்படம் காத்தவராயன் திரைப்படம் வணங்காமுடி வெற்றி பட்டியலில் இடம் பிடித்தது மிகவும் ராசியான ஜோடியாக எடுத்துக்காட்டியது.

சிவாஜி கணேசன், பத்மினி ஜோடியாக இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பணம் இதன் பிறகு. பிறகு சுமார் 60 படங்களுக்கு மேல் அவர்கள் ஜோடியாக நடித்தார் கள் தெய்வ பிறவி, உத்தமபுத்திரன் , குலமா குணமா, இருமலர்கள், பேசும் தெய்வம், தில்லானா மோகனாம்பாள், இப்படி பல வெற்றி படங்களை கொடுத்து மிகவும் ராசியான ஜோடி என்று பெயர் எடுத்திருந்தார்கள் இவர் இருவரும் இணைந்தாலே அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று அந்நாளில் பேசிக்கொண்டார்கள் அதேபோல இருவரும் போட்டி போட்டு நடித்து படம் பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்துவார்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தை மறக்க முடியுமா?

சிவாஜியும் சரோஜாதேவி இருவரும் சேர்ந்து 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்கள் எல்லா படங்களுமே வெற்றிவாகைசூடிய படங்கள் பாலும் பழமும், பாகப்பிரிவினை, இருவர் உள்ளம், அருணோதயம், என் தம்பி ,இரும்புத்திரை, அஞ்சல் பெட்டி 520, புதிய பறவை, இப்படி பல படங்கள் நடித்திருந்தாலும் புதிய பறவை என்றும் மறக்க முடியாத படங்களின் வரிசையில் சேர்ந்து இருவரையும் வெற்றி கூட்டணியாக பேச வைத்தது கோபால் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் தேடிக் கொடுத்தவர் சரோஜாதேவி இவர்கள் இருவரும் நடித்தாலே அந்த படம் ரசிக்கும் வண்ணம் இருக்கும் சிவாஜி கே ஆர் விஜயா இருவரும் இணைந்து 32 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்கள்இரு மலர்கள், சத்யம் சுந்தரம், ஜெனரல் சக்கரவர்த்தி, ரிஷிமூலம், நான் வாழ வைப்பேன், ஊட்டி வரை உறவு, திரிசூலம், செல்வம், தங்கப்பதக்கம், இப்படி பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தாலும் தங்கப்பதக்கம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக அமைந்தது அதேபோல் திரிசூலம் படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இவர்கள் இருவரும் இணைந்து ராசியான ஜோடி உண்மையான கணவன் மனைவி போல் அவ்வளவு அன்பு அதிகமாக நடிப்பார்கள் சிவாஜி கே ஆர் விஜயா ஜோடி பொருத்தம் தமிழ் சினிமாவில் அவ்வளவாக ரசிக்கப்பட்டது பாரத விலாஸ், சொர்க்கம், ஊட்டி வரை உறவு, என்று சொல்லி கொண்டே போகலாம்.

அடுத்து சௌகார் ஜானகி இவர் சிவாஜி கணேசன் உடன் 20 படங்களில் நடித்திருக்கிறார் ஜோடியாக ஏழு படங்கள் நடித்திருக்கிறார் படிக்காத மேதை, பாவை விளக்கு, பார் மகளே பார், மோட்டார் சுந்தரம் பிள்ளை, மகாகவி காளிதாஸ், புதிய பறவை, உயர்ந்த மனிதன், போன்ற படங்கள் 300 படங்களுக்கு மேல் இவர் நடித்திருந்தாலும் சிவாஜி அவர்களுக்கு இவர் ராசியான ஜோடி தான் இவர் புதிய பறவை படத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் சூப்பர் நடிப்பு.
சிவாஜி தேவிகா இருவரும் சேர்ந்து 17 படங்கள் நடித்திருக்கிறார்கள் இவர்கள் ராசியான ஜோடி என்று பேசப்பட்டது ஆண்டவன் கட்டளை, குலமகள் ராதை, பந்தபாசம், பாவ மன்னிப்பு ,போன்ற பல படங்கள் இருவருக்கும் வெற்றி படங்களாக ரசிகர்கள் கொண்டாடினார்கள் சிவாஜி கணேசன் ஜெயலலிதா இணைந்து நீதி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே,எங்க மாமா, சுமதி என் சுந்தரி, எங்கிருந்து வந்தாள், ராஜா, கலாட்டா கல்யாணம், தெய்வமகன், பாதுகாப்பு, இப்படி பன்னிரண்டு படங்கள் இணைந்து நடித்தனர் இதில் பட்டிக்காடா பட்டணமா, கலாட்டா கல்யாணம், தெய்வமகன், போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்து இருவரும் ராசி யான ஜோடியாக கருதப்பட்டது.
சிவாஜி கணேசன் அவர்கள் உடன் வாணி SRI இணைந்து உயர்ந்த மனிதன் , நிறைகுடம் , குலமா குணமா , வசந்த மாளிகை ( சிவகாமியின் செல்வன்), (வாணி ராணி) (ரோஜாவின் ராஜா (இளைய தலைமுறை) (புண்ணிய பூமி ), (வாழ்க்கை) மற்றும் (நல்லதொரு குடும்பம்) என மொத்தம் 11 படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் ஜோடி மிகவும் ராசியான ஜோடி என்றே சொல்லலாம் வசந்த மாளிகை, ரோஜாவின் ராஜா, சிவகாமியின் செல்வன் ,போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள் இந்த ஜோடியை ரசிகர்கள் மறக்க முடியுமா வாணிஸ்ரீ என்றாலே வசந்த மாளிகை தான் ஞாபகத்துக்கு வரும் இவர் நடிப்பில் வெளியான நல்லதொரு குடும்பம் திரைப்படம் மிகவும் பேசப்பட்ட படமாக இவர்கள் இருவரும் ராசியான ஜோடி என்று ரசிகர்கள் கருதினார்கள்.

சிவாஜி கணேசன் அவர்களுடன் மஞ்சுளா நடித்த படங்கள் எட்டு படங்கள் எங்கள் தங்க ராஜா, என் மகன் ,அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, அவன் தான் மனிதன், அவன் ஒரு சரித்திரம், மன்னவன் வந்தானடி ,இப்படி இவர்கள் இருவரும் நடித்த படங்கள் கமர்சியலாக வெற்றி பெற்றது ராசியான ஜோடியாக கருதப்பட்டத: அடுத்து சிவாஜி அவர்களுடன் சுஜாதா நீதிபதி ,திருப்பம், சுமங்கலி ,சந்திப்பு, வா கண்ணா வா, பரிட்சைக்கு நேரம்ஆச்சு, தியாகி, கருடா சௌக்கியமா, விஸ்வரூபம், அந்தமான் காதலி, அண்ணன் ஒரு கோயில், தீபம், என 18க்கும் மேற்பட்ட படங்கள் நடித்து இருக்கிறார் இதில் நீதிபதி ,திருப்பம், சந்திப்பு ,போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது அண்ணன் ஒரு கோவில், படம் பேசப்பட்ட படம் அந்தமான் காதலியும் பேசப்பட்டது, இருவரும் ராசி யான ஜோடியாக கருதப்பட்டனர்.

சிவாஜி அவருடன் ஸ்ரீபிரியா இணைந்து நடித்த படங்கள் ஏழு படங்கள் திரிசூலம், அமரகாவியம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ,மாடி வீட்டு ஏழை ,சங்கிலி, வசந்த் தில் ஒரு நாள், சிரஞ்சீவி, இந்த படங்களில் திரிசூலம் படம் இவர்களுக்கு ராசியான படமாக அமைந்தது
