‘ஆலன்’ திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/ 5

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்

கதை களம்

1986ம் ஆண்டு பூம்பாறையில் கதை தொடங்குகிறது தியாகு (வெற்றி)தாமரை (அனுசித்தாரா) என்ற அந்த சின்னஞ்சிறுசுகள் கள்ளங்கபடம் இல்லாமல் பழகுகிறார்கள்

வெற்றி யின் அப்பா மதன் மூத்த சகோதரனாக வருகிறார் அவர் தந்தை சொத்தை எல்லாம் அவர் மீது எழுதி வைத்துவிட்டு போய்விடுகிறார் மதனின் இரு தம்பிகளும் குடித்து ஊரைச் சுற்றிக்கொண்டு பணத்தை வீணாக்கி விடுவார்கள் என்று ஆனால் அதுவே அண்ணன் தம்பிகளுக்குள் மோதலை உருவாக்குகிறது ராமேஸ்வரம் செல்லும் மதன், அவரது மனைவி, அவரது அம்மா, விவேக் பிரசன்னாவின் மனைவி ,தியாகு, தாமரை, இவர்களெல்லாம் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது வேன் பள்ளத்தில் கலந்து பெரிய விபத்து ஏற்படுகிறது அதில் தியாகுவும் தாமரை மட்டும் உயிர் பிழைக்கிறார்கள்

விவேக் பிரசன்னா, தியாகுவை சென்னையில் உள்ள நண்பரின் மேன்ஷனில் தங்க வைக்கிறார் ஆனால் தியாகு அந்த விபத்துக்கு பின்னால் அடிக்கடி அதிர்ச்சி அடைந்து தூக்கத்தில் கண் விழிக்கிறான் அந்த மேன்ஷனில் தங்க முடியாமல் காசிக்கு வந்து விடுகிறார் இப்பொழுது 1999 இல் கதை காசியில் நடக்கிறது தியாகு அங்கே வளர்ந்து பெரியவனாகிறார் அவனுக்குள் இருக்கும் எழுத்து திறமையை ஊக்குவித்து தியாகுவை சென்னைக்கு அனுப்புகிறார் பெராடி

சென்னை வந்த தியாகு ஜெர்மனியில் இருந்து வந்த ஜனனி தாமஸ் என்ற(மதுரா) பெண்ணை பார்க்கிறான் இருவருக்கும் காதல் உதயமாகிறது அதன் பிறகு அந்த காதல் என்ன ஆனது ?தியாகு புதிய வாழ்க்கையை தொடங்கினாரா? சின்ன வயதில் காதலித்த தாமரையை கைப்பிடித்தானா? சாமியாராக ஊர் ஊராகத் திரியும் தியாகு வாழ்க்கையில் ஆனந்தம் திரும்பியதா?
தன் குடும்பத்தையே கொன்ற இரண்டு சித்தப்பாக்களையும் தியாகு பழி வாங்கினாரா? என்பது தான் இந்த படத்தின் மையக்கதை

பிரம்மாண்டமான லொகேஷன்கள்

இந்தத் திரைப்படம் ஜெர்மனி, காசி, வாரணாசி, ரிஷிகேஷ், காரைக்குடி, கொடைக்கானல், ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்
அத்தனை இடங்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது ஒரு கதைக்காக இவ்வளவு மெனக்கெட்டு படப்பிடிப்பை நடத்தி இருப்பது பாராட்டத்தக்கது தயாரிப்பாளரும் இயக்குனருமான சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

இந்த படத்தின் கதை யில் வன்முறையில்லாமல் தரமாக உருவாக்கி இருப்பது பாராட்டத்தக்கது கதையின் நாயகன் அந்த வன்முறையையும் கடந்து செல்கிறான். வாழ்க்கையை பார்வையிடுகிறான். அன்பும் காதலும் தான். அதுதான் அதிகம் தேவை. இயற்கையை கொண்டாடுகிறான் அன்பை கொண்டாடுகிறான் காதலை கொண்டாடுகிறான்.
நல்ல தரமான படமாக வந்துள்ளது

படத்தின் நாயகன் வெற்றி நடிப்பு எப்படி

சின்ன வயதில் கதை எழுதி தாமரையின், இதயத்தை திருடி, காசியில் சாமியாராக சுற்றித் திரியும் வெற்றி ,அதன் பிறகு ஜெர்மன் பெண்ணை காதலித்து ,பரவசமாகும் அந்த காட்சிகள் ரசிக்க வைக்கிறது கருணாகரன் நடத்தும் அந்த மேன்ஷனில் இரண்டு காதல் ஜோடிகளும் அன்பை பரி மாற்றம் செய்து கொண்டு காதலிக்கும் காட்சி வெற்றி சிறப்பாக நடித்திருக்கிறார் சாமியாராக இருந்து விட்டு, மாமுல் வாழ்க்கையில் பேண்ட் சட்டையோடு அவர் வரும் பொழுது அவரின் உற்சாகம் நன்றாக இருக்கிறது காதலி இறந்த பிறகு கண்ணீர் விட்டு கதறி அழும் போதும் மனதை தொடுகிறார் ஒரு நல்ல படத்துக்கு தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார் வெற்றி. சாமியார் வேடத்துக்கு கட்சிதமா கபொருந்தி போயிருக்கிறார்

தாமரை யாக அனு சித்தாரா

தாமரையாக நடித்திருக்கும் அனுசித்தாரா லைப்ரரியனாக நடித்திருக்கிறார் தன் காதலன் எழுத்துத் துறையில் எப்படியும் ஜெயிப்பான் அவன் எழுதும் எழுத்துக்கள் தன்னை வந்து சேரும் என்பதற்காகவே அந்த பணியை தேர்வு செய்து காதலனுக்காக காத்திருக்கும் ஒரு கண்ணியமான வேடம் ஆலன்” என்ற புத்தகத்தை உலகறிய செய்வதில் அவர் பங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது கலையாண முகம் அழகாக நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சிகள் அவ்வளவு ரசிக்க வைக்கிறது

மற்ற கலைஞர்கள்

காசியில் சாமியார்களின் குருவாக வரும் ஹரிஷ் பெரடி அமைதியான நடிப்பில் சாந்தமாக நடித்து மனதை கவருகிறார்

கருணாகரன் சிவம் மேன்சன் என்ற மேன்சனை நடத்திக் கொண்டு நாயகனுக்கும், நாயகிக்கும் ,உதவும் கதாபாத்திரத்தில் எப்பொழுதும் போல ஜொலிக்கிறார்

ஜெர்மனியில் இருந்து வந்து தமிழக சிறப்பை வியந்து பார்க்கும் ஜனனி தாமஸ் ஆக (மதுரா) நடித்திருக்கிறார் அவர் சிரிப்பு அவர் மழலை கொஞ்சும் பேச்சு எல்லாமே நன்றாக இருக்கிறது அவர் முடிவு பரிதாபமாக இருக்கிறது

விவேக் பிரசன்னா ஆரம்பத்தில் சில காட்சிகள் வந்தாலும் அசத்தலான நடிப்பை தந்திருக்கிறார்

மதன்குமார் வெற்றியின் அப்பாவாக நடித்திருக்கிறார் தம்பிகள் இருவரும் இப்படி குடித்துவிட்டு குட்டிச்சுவராகி போகிறார்களே என்று மனம் வருந்தும் போதும் மகனின் எழுத்து திறமையை கண்டு ஆச்சரியப்படும் பொழுதும் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்

தயாரிப்பாளர் & இயக்குனர்

தயாரிப்பாளரும் இயக்குனருமான சிவா ஆர் அவர்கள் ஒரு நல்ல கதையை தேர்வு செய்து செலவை பற்றி கவலைப்படாமல் ஜெர்மன் ,காசி, ராமேஸ்வரம் ,என்று சிரமப்பட்டு படமாக்கி இருக்கிறார்

இந்த படத்திற்கு வன்முறை கதைக்களமாக இருந்தாலும் கவனமாக அதை தவிர்த்து தன் சித்தப்பாவை, தியாகு பழி வாங்காமல் அன்பால் மன்னித்து விடுவது போல் கதை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது

அவர் கைவண்ணத்தில் எழுதியுள்ள எழுத்தில்” படிப்பு உனக்கு தான் பயன்படும் நீ எழுதினால் இந்த எழுத்து உலகுக்கு பயன்படும்” என்று எழுதி இருக்கிறார் பாராட்ட தக்கது!

எதை நேசிக்கிறாயோ அதுதான் உன் ஆழ் மனதில் இருந்து வெளிப்படும் நீ எழுத்தை நேசிக்கிறாய் எனவே நீ போய் உலகுக்கு தேவையானதை எழுது என்று சொல்லி இருக்கும் தத்துவம் அருமையாக இருக்கிறது

கிளைமாக்ஸ் கட்சியில் அனுசித்தாரா, வெற்றி ,மதுரா, மூவரையும் இணைத்த அந்த புத்திசாலித்தனமான திரைக்கதை சூப்பர்!

உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சனையை “இடம் நிலம் எப்போதும் அது அப்படியே இருக்கும் ஆனால் மனிதர்கள் மட்டும்தான் மாறிக்கொண்டே இருப்பார்கள்” என்று வெற்றி சொல்லும் தத்துவம் நூற்றுக்கு நூறு உண்மை

நல்ல படத்தை கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது கண்களுக்கு குழுமையாக இருக்கிறது காசியில் எடுக்கப்பட்ட அந்த காட்சிகள் பிரம்மாண்டம் ரிஷிகேஷ் சென்று எடுக்கப்பட்ட அந்த காட்சிகளும் ஜெர்மனியில் எடுக்கப்பட்ட காட்சிகளும், பாண்டிச்சேரியில் எடுக்கப்பட்ட காட்சிகளும், ராமேஸ்வரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளும், படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது அருமையான ஒளிப்பதிவு கொடைக்கானல் பூம்பாறையில் அழகையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது கேமரா

படத்துக்கு பலம் படத்தொகுப்பாளர்

மு .காசி விஸ்வநாதன் படத்தை ரசிக்கும்படி சிறப்பாக செய்திருக்கிறார் காட்சிகள் தெளிவாக கொண்டு சென்றதில் படத்தொகுப்பாளரின் பங்கு மகத்தானது

இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா முதல் பாடல் நமச்சிவாய பாடல் அருமையாக இசையமைத்து இருக்கிறார் மற்றும் மெலோடி பாடல்கள் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை நன்றாக இருக்கிறது

ஆர்ட் டைரக்டர் உதயகுமார் அருமையாக வடிவமைத்து இருக்கிறார் பூம்பாறையில் தியாகு வீடு, செம்மொழி பூங்காவில் ஆலன் புத்தகத்திற்காக நடத்தும் விழா, அரங்க அமைப்பு

மேன்சனில் காட்டப்படும் அந்த அழகான ரூம் ,மற்றும் தாமரையின் சென்னை வீடு, எல்லாமே ரசிக்க வைக்கிறது

காஸ்ட்யூமர் சபீர் மெனக்கெட்டு இருக்கிறார் வெற்றி யின் சாமியார் உடைத்தோற்றமும், அதன் பின்பு நவீனமாக மாறும்பொழுது, மதுராவின் உடை வடிவமைப்பு அனுசித்ராவின் உடை வடிவமைப்பு என அசத்தியிருக்கிறார்

படத்தில் ஒரே சண்டை காட்சி என்றாலும் மெட்ரோ மகேஷ் சிறப்பாக பயிற்சி கொடுத்திருக்கிறார்

ஒப்பனையாளர் குப்புசாமி எல்லோருக்கும் அழகாக ஒப்பனை செய்துள்ளார் எந்த உறுத்தலும் இல்லாமல் மதுராவையும் அனுசித்ராவையும் அழகாக காட்டி இருக்கிறது இவரது ஒப்பனை

மற்றும் படத்துக்கு உழைத்த டெக்னீசியன்

Creative Head: Sri Balaji
Line Producer : Sakthivel Kalyani,
Executive Producer: Sahul Hameed
Production Manager: Nirmal Kannan, Thiruneelagandan

Still Photographer: Miracle Vishnu
Direction Team: Shivaji,Swaminathan,Senthil Andavar,Santosh Muniraj, K.Mani Giriesh, Ranjith Kumar.B

அனைவருக்கும் வாழ்த்துக்கள் :
மக்கள் தொடர்பாளர் யுவராஜ் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்ததற்காக இவர்கள் டீமையும் பாராட்டலாம்

படத்தை வெளியிடும் தனஞ்ஜெயன் அவர்கள் நல்ல தரமான படத்தை எப்பொழுதும் ஆதரிப்பார் அந்த வகையில் இந்த படத்தையும் வெளியிட்டு வெற்றி வாகை சூடுவார் என்பது உறுதி

படத்தில் சிறப்பு கௌரவத் தோற்றத்தில் வந்திருக்கும் திரு கேபிள் சங்கர்,
திரு. மனுஸிய புத்திரன் ,
திரு .ஞானம் சம்பந்தம் பேராசிரியர்
என் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த ஆலன் அன்பை போதிப்பவன்

வன்முறை வேண்டாம் என்று சொல்பவன்

உறவுகளுக்குள் பகை வேண்டாம் என்று சொல்பவன்

தவறு செய்பவர்களை காலம் பார்த்துக் கொள்ளும் என்று மன்னிக்க சொல்பவன்

காதலை அழகாகவும் அன்பாகவும் சொல்லி இருக்கும் இந்த “ஆலன் “நிச்சயம் வெற்றிப்பட்டியலில் இடம் பிடிப்பான்.