கதை களம்
*செல்லம்மா(அபிராமிகுடும்பம் தென்காசி மெய் ஞான புரம் பகுதியில் தந்தை ஒய் ஜி மகேந்திரன்
பவானி, ஷிவானி,
சைனி ஆகியோர்
உடன்
பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்கள். எம்.எல்.ஏவிடம் இருந்து பெரிய ஆர்டர் அவர்களுக்கு கிடைக்கிறது.
சாப்பிட்டு விட்டு
, அதற்கான பணம் இரண்டு லட்சம் ரூபாய் தராமல் எம்.எல்.ஏவின் ஆட்கள் பவானியின் தாத்தாவை தாக்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்டுகிறார்.
அப்பாவை காப்பாற்ற
சுரேஷ் இடம் பத்திரம் வைத்து பதினைந்து லட்சம் வாங்கி யும்
கடையை நடத்த முடியாமல் பவானி தவிக்க, தாத்தாவின் யோசனைப்படி வழக்கறிஞர் பூங்குன்றனின் உதவியை நாடி பவானியின் குடும்பம் செல்கிறது.
அங்கு அடைக்கலம்
பூங்குன்றன், இருவருக்கும் பிரச்சினை அதனால்
பூங்குன்றனை
அடைக்கலம்
கொலை செய்துவிட,
அந்த கொலை பழி
தங்கள் மேல் விழுந்துவிட்டதோ என பயந்து அவரது உடலை வெளியேற்ற பவானியின் குடும்பம் முயற்சிக்கிறது.
ஒரு ஜாதி போராட்ட
த்தில் சிக்கி கொள்ள
அங்கிருந்து பிரபு தேவாவை பிணமாக காரில் கடத்தி வந்து
மலை உச்சியின் மேல் இருந்து உருட்டி விட திட்டமிடுகிறார்கள் அப்பொழுது பிரபு தேவாவின் தோழியான கன்னிகா 10 கோடி ரூபாய் பற்றி கொடைக்கானல் வங்கியில் இருந்து எடுப்பது பற்றி போன் செய்கிறார் இதை கேள்விப்பட்ட பவானியின் குடும்பம் அந்த 10 கோடியை எப்படியாவது ஆட்டை போட திட்டமிடுகிறார்கள்
அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் மீதி கதை .
சுருக்கமாக சொன்னால்* ஒரு பாடியும் நாலு லேடியும்* என்று கூட பெயர் வைத்திருக்கலாம்
: *பிரபு தேவா (பூங்குன்றன்)*
பிரபுதேவா படம் முழுவதும் சடலமாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் ஒரு நல்ல காரியம் செய்ய முயற்சிக்கும்போது கொல்லப்படுவது ஹார்ட் டச்சிங்.
[
பிரபுதேவா சடலமாக நடித்திருக்கிருப்பது. இது கொஞ்சம் வருத்தத்தை அளித்தாலும் தனக்கு கொடுத்த வேலையை கணக்கச்சிதமாக பிரபுதேவா செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. படத்தினுடைய ஆரம்பத்திலேயே
அவர் வழக்கறிஞராக வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது அந்த முதல் பாடல் ரோஸி ரசிக்க வைக்கிறது பிரபுதேவா கிளைமாக்ஸ் காட்சியில் பொம்மலாட்டம் போல கையிலும் காலிலும் கயிற்றை கட்டிக்கொண்டு போடும் சண்டைக் காட்சி ரசிக்க வைக்கிறது
ரோபோ போல அவரை சித்தரித்து பவானி குடும்பம் நடிக்க வைப்பது நன்றாக இருக்கிறது
மைக்கேல் ஜாக்சன் போல நடனமாடும் பிரபுதேவா படம் முழுவதும் ஒன்றரை மணி நேரம் பிணமாக நடித்திருப்பது ஆச்சரியமான விஷயம் தான்
: அதேபோல் தான் ஜான் விஜய், ரோபோ ஷங்கர், எம்.எஸ்.பாஸ்கர்
யோகி பாபு, இவர்கள் வரும் காட்சியும் கலகலப்பாக இருக்கிறது
இவர்களின்
கதாபாத்திரங்களும். எல்லோரும் நம்மை சிரிக்க வைக்க ரொம்பவும் மெனக்கெடுகிறார்கள்.
*அபிராமி*
செல்லம்மாவாக வரும்
அபிராமி அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுகிறார். மடோனாவை விட அபிராமி தான் படத்தின் பல இடங்களில் கலகலப்பூட்டுகிறார்
மூன்று பேருக்கு அம்மாவாக நம்ப முடியாத தோற்றம் அவ்வளவு இளமையான அம்மா
அவரின் முகபாவம், மற்றும் ரியாக்சன், அதிர்ச்சி, என எல்லா வகையிலும்
அபிராமி தான் பெஸ்ட்
.: *மடோனா (பவானி)*
போலீஸ்காரனை கட்டிக்கிட்டா
பாடல் மூலம் எல்லோரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறார்.
மிமிக்ரி வாய்ஸில்
அசத்தல் மடோனா
அந்த 10 கோடியை பேங்கில் இருந்து ஆட்டை போட
மடோனா கொடுக்கும்
சூப்பரான ஐடியாக்கள் அது சொதப்பிவிட்டால் என்ன செய்வது என்று அதற்கு பி பிளான் போடுவது புத்திசாலித்தனமான
கதாபாத்திரமாக ஜொலிக்கிறார் மடோனா செபாஷ்டி யன்
*எம் .எஸ் பாஸ்கர் &
ஜான் விஜய்*
படத்தில் இவர்கள் இருவரும் வரும் காமெடி காட்சி கள்
ஹை லைட்
ஜாதி கூடாது என்று சொல்லிக்கொண்டே எம் எஸ் பாஸ்கர் இது நம்ம ஜாதி நம்ம பெல்ட் 80% கொடைக்கானலில் இருக்கிறார்கள் என்று மார்தட்டுவது கலகலப்பான போர்ஷன்
நாஞ்சில் சம்பத் முதல்வராக வந்து பிரபுதேவாவை முடிக்க சொல்லுவது ஆர்டர் போட்டு கொண்டே இருக்க மந்திரி பதவியை கோதண்டத்துக்கு மாற்றிவிட அதனால் ஏற்படும் காமெடி செம கலகலப்பு
கொடைக்கானலில் பேங்க் மேனேஜராக வரும் இயக்குனர் சக்தி சிதம்பரமும் அவருக்கு அசிஸ்டெண்டாக வரும் சாம்ஸ் ரசிக்க வைக்கிறார் கள்
யோகி பாபு மூலநோயால் பாதிக்கப்பட்ட சர்ச் பாதிரியார் ஆக
சிரிப்பு வர வைக்க முயற்சி செய்கிறார்
அவரிடம் பாவ மன்னிப்பு கேட்க வரும் மடோனாவிடம் சிக்கிக் கொண்டு
விழிப்பது ரகளை
*தயாரிப்பு நிறுவனம்*
Produced By Rajan & Neela
Executive Producer: E. Suresh Prabakar, T. Kathiravan
Creative Head: Anddy K.
Banner: Transindia Media & Entertainment Pvt. Ltd.
*டெக்னீஷியன்கள்*
VFX: Lights On Media
CG Head: Venki Chandrashekar
Sound Designer: A Sathish Kumar
Sound Mixing: Siva, A.M. Studio
Di: Lixo Pixels
Colorist: Muthu
Lyric Video: I Mate
ஒளிப்பதிவாளர்
கணேஷ் சந்திரா
ஒளிப்பதிவு அருமை காட்சிகள் செம ரிச் ஆக இருக்கிறது
கிளைமாக்ஸ் காட்சியில் கொடைக்கானல் அழகு சூப்பர்
படத்தொகுப்பாளர்கள்
ராமன் & நிரஞ்சன் ஆண்டனி படத்துக்கு எடிட்டிங் செய்துள்ளார்கள் படம் செம விறுவிறுப்பாக சொல்வதற்கு படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
காஸ்ட்யூம் டிசைனர்
ஜெனிபர் ராஜ் ,
காஸ்டியூமர்
ரங்கசாமி ,
படத்தில் கண்ணை கவரும் ஆடை வடிவமை
தந்துள்ளார்கள்
: அஸ்வின் விநாயகமூர்த்தி யின் இசை யில்
போலீஸ் காரனை கட்டி கிட்டா பாடலும்,
ரோஸி ,பாடலும் ரசிக்க வைக்கிறது
பின்னணி இசை நன்றாக இருக்கிறது
*இயக்குனர் ஷக்தி சிதம்பரம்*
காமெடியில் கரைகண்ட அவரது இயக்கத்தில் வெளிவந்தவை 20 படங்கள்
‘‘எல்லோருக்குமே சிரிக்கப் பிடிக்கும். சிரிக்க விருப்பப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சினிமாவோட அடிநாதம் நகைச்சுவைதான் . தன் மெல்லிய, ஆனால் அழுத்தமான நகைச்சுவையில் ‘ஜாலியோ ஜிம்கானா’ வை
கொடுத்து இருக்கிறார்
குறைந்த பட்ஜெட்டில் நிறைவான காமெடி திரைப்படங்களை தமிழ் மொழியில் கொடுப்பதில்
சிறந்தவர்
சக்தி சிதம்பரம். சார்லின் சாப்ளின், மகா நடிகன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், போன்ற திரைப்படங்களே அதற்கு சாட்சி என்றே கூறலாம்.
ஜாலியோ ஜிம்கானா படத்தில் லாஜிக் இல்லாத மேஜிக் காமெடியை கொடுத்து இருக்கிறார்
ஒரு ஹீரோவை ஒன்றரை மணி நேரம் பிணமாக காட்டி அதை ரசிக்க வைப்பதற்கு தனி திறமை வேண்டும்
அபிராமி, மடோனா, அவரது தங்கைகள் மற்றும் கன்னிகா, ஒரு எல்லோரும் அழகு பாவைகளாக படத்தில் இயக்குனர் காட்டி இருக்கிறார்
பஸ் கண்டக்டர் ஆக வரும் ரெடின் கிங்ஸ்லி ஒரு காட்சியிலும் வந்தாலும் கலகலத்தை வைக்கிறார்
ஆர்ட் டைரக்டரின் அசத்தலான
வடிவமைப்பு பல இடங்களில் அற்புதமாக வந்துள்ளது
மக்கள் தொடர்பாளர்கள் சுரேஷ் சந்திரா அவர்கள்
அப்துல் நாசர் அவர்கள்
மொத்தத்தில் இரண்டு மணி நேரம் எதையும் எதிர்பார்க்காமல் வந்தால் காமெடிக்கு நாங்கள் கேரண்டி என்கிறார்கள் இந்த ஜாலியோ ஜிம் காணா படகுழு