படம் 1974 ல் ஆரம்பிக்கிறது. கருப்பு தங்கமான குருடு ஆயில், கரையோர பைப்,
இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்,
பின் போராட்டம் பின்னர் ,அந்த பைப் லைனில் இருந்து ஆயிலை திருடி மும்பைக்கு அனுப்பி அங்கிருந்து டீசல், மற்றும் பெட்ரோலியமாக வாங்கி, அதை
பணமாக்கி அந்த பணத்தை அங்குள்ள ஏழை குடும்பங்களுக்கு உதவும் மனோகர், அவரது மகன் டீசல் வாசு, மற்றும் மாஃபியாவின் நிழல் உலக விளையாட்டுகளை மையமாகக் ‘டீசல்’ திரைப்படம் முழுமையான ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாக்க பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் இல்லாமல் போனால் 24 மணி நேரத்தில் உலகம் ஸ்தம்பித்துவிடும்.
வடசென்னையில் நடக்கும் டீசல் எண்ணெய் திருட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
முதல் பாதி டீசல் கொள்ளை, மாஃபியாவுக்கும் காவல் துறைக்கும் நடக்கும் மோதல், விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் வழியாக சொல்லப்பட்டிருக்கிறது.
இரண்டாவது பாதி தேசிய வளங்களை குறித்த ஒரு மெசேஜூடன் முடிகிறது படம்.
முதல் பாதியையும் இரண்டாம் பாதியையும் சுவாரஸ்யமாக இணைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்
பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் உயர்ந்தால்கூட, ஒரு மாத வாழ்க்கைச் செலவில் பத்தாயிரம் ரூபாய் வரை மாற்றம் ஏற்படலாம். என்ற தகவல் உடன் ஆச்சரியங்களுடன் .
200 மீனவ குப்பங்களை அழித்து, தனி துறைமுகம் கொண்டு வர துடிக்கும் கார்ப்பரேட் முதலாளி, அந்த மீனவர்களை காப்பாற்றத் துடிக்கும் டீசல் வாசு, இவர்களுக்கு இடையே நடக்கும் போராட்டம் தான் மெயின் கதை, பதானின் ,சூழ்ச்சிக்கு துணை போகும் பாலமுருகனாக விவேக் பிரசன்னா, டி.ஜி.பியாக மாயவேலனாக, வினய் இவர் கள்இருவரும் டீசல் வாசுவை எப்படியாவது கொல்ல துடிக்கிறார்கள். அதிலிருந்து டீசல் வாசு, எப்படி தப்பிக்கிறார் ?எப்படி அந்த மீனவ குப்பங்களை காப்பாற்றுகிறார்? திருடு போன இரண்டு கோடி லிட்டர் ஆயிலை எப்படி மீட்க்கிறார்?
வஞ்சக சூழ்ச்சியால் தன் அப்பாவை சிறைக்குள் தள்ளிய மாயவேலை எப்படி பழி வாங்குகிறார்? தன் நண்பன் ரமேஷ் திலக் இறப்புக்கு எப்படி பழி தீர்த்துக் கொள்கிறார்.?
பாலமுருகனின் சூழ்ச்சியை எப்படி முறியடிக்கிறார்? தன்னை காதலிக்கும் அதுல் யாவை எப்படி கரம் பிடிக்கிறார்?
என்பதையும், ‘ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ், எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஆக்ஷன் என்டர்டெய்னர்படமாக வந்திருக்கிறது டீசல்’
நாயகன் ஹரீஸ் கல்யான்
சாக்லேட் பாய்ல இருந்து விலகி “ராக்கட் பாய்” லுக்கில் ஹரிஷ் கல்யாண் , அந்த முரட்டுத்தனத்துக்குள் தன்னை நிறுவிக்கொள்ள உடல் மொழியில் அவர் மெனக்கட்டு இருப்பது, ஆக்சன் காட்சிகளில் பளிச் என்று தெரிகிறது .
ஒவ்வொரு ஆக்ஷனும் ரசிக்க வைக்கிறது. அலட்டல் இல்லாத நடிப்பு. அமைதியான காதல், தன் அம்மா அப்பாவை பற்றி அவர்கள் காதலைப் பற்றி சொல்லும் பொழுது உருக்கம்.
கிளைமாக்ஸ் காட்சியில் பாலமுருகனை வெட்டி சாய்க்கும் கொடூரம், என ஹரிஷ் கல்யாண் அதகளம் பண்ணி இருக்கிறார். இனி ஆக்சன் காட்சிகளில், ஆக்சன் படங்களில் அவர் தொடர்ந்து நடிப்பதற்கு இந்த படம் கை கொடுத்திருக்கிறது,
டீசல் வாசுவாக ஸ்டைலிசாக, நிதானமாக நின்று அடித்திருக்கிறார், சிக்சரும், பவுண்டரியமாக வெளுத்து வாங்கி இருக்கிறார்,
அவர் பேசும் வசனத்திற்கேற்ப மொத்தப் படமும் , சட்டவிரோத கடத்தல் என விரியும் காட்சிகள், தமிழ் சினிமாவின் அரியக் காட்சிக் களத்தை அறிமுகப்படுத்துகிறது.ஹரீஸ்,
இனி செம மாஸ் ஹீரோவாக வருவார் என்று நம்பலாம்.
இயக்குனர்
சண்முகம் முத்துசாமி இயக்கியிருக்கும் இப்படத்தில் உலகின் பிரதான பிரச்சினை ‘பெட்ரோல் ‘’ என்ற கதை களம் ஒன்லைன் சுவாரஸ்யம். படத்தின் மையக்கதை
முதல் பாதி, விறுவிறுப்புடன் ஒருவித எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே செல்கிறது. இடைவேளைக்கு முன்பாக காட்சி படத்தின் மீதான நம்பிக்கையை கூட்டுகிறது.
ஆனால், அதற்கு முற்றிலும் மாறான இரண்டாம் பாதி. டீசல் தன் பின்புலக் கதையை சொல்லும் இடத்திலிருந்து படத்தின் வேகம் எடுத்து அந்த பின்புலக் கதை கோரும் பரிவை திரைக்கதை ஒன்ற வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர்.
‘தனியார் துறைமுகம் . அதற்கு எத்தனை மீனவ குப்பங்கள் அழிக்கப்பட்டிருக்கும் என்பதில் தொடங்கி, சராசரி மனுசன் வாங்குற பெட்ரோல் வரைக்கும் ஒவ்வொரு பொருளோட விலையை தீர்மானிக்கிறது கடல்வழி போக்குவரத்து தான்” என வசனத்திலிருந்த அழுத்தம்.
விறுவிறுப்படன் இயக்குனர் இயக்கி இருக்கிறார் “
அதுல்யா வழக்கறிஞர் பௌர்ணமி கதாபாத்திரத்தில் படம் முழுக்க வந்து அதற்கான நியாயத்தை நடிப்பில் சேர்த்திருக்கிறார்.
வினய் ராய்,
மாயவேல் ,என்ற காவல்துறை அதிகாரியாக அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். அமைதியாக தீர்க்கமாக அவர் பார்க்கும் பார்வையே அவரின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறது
டீசல், உடன் அவர் மோதும் காட்சிகள் விறுவிறுப்பின் உச்சம். இடைவேளைக்குப் பிறகு ஏனோ அமைதியாகி போய்விட்டார்.
சாய் குமார், மனோகர் என்ற வேடத்தில் நாயகன் படத்தில் வேலு நாயக்கராக கமல் வருவது போல இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது .மகன் டீசலுக்கு எதுவும் நடந்து விடக்கூடாது, என்று அவர் பதறும் காட்சிகள், பாசத்தை காட்டுகிறது. கருணாஸ் பொட்டு சேகராக டீசலுக்கு உதவும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார.
ரமேஷ் திலக்
மீனவ குப்பத்தில் டீசல் வாசு, செய்யும் பண உதவியை வாங்கி ஏழை மக்களுக்கு உதவும் பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
காளி வெங்கட்,
சில காட்சிகள் வந்தாலும் சிறப்பு.
விவேக் பிரசன்னா,
படத்தின் பிரதான வில்லன்களில் இவர் முக்கியமானவர் வஞ்சகம், சூழ்ச்சி செய்து மனோகர், டீசல் வாசுவின், இடத்தை பிடிக்க வேண்டும் என்று பதானியுடன் இவர் கைகோர்த்துக்கொண்டு ஆடும் ஆட்டம் சூழ்ச்சியின் சதுரங்க வேட்டை.
மற்றும்
சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
அனைவர் நடிப்பு சிறப்பாக இருந்தது .
தொழில் நுட்ப கலைஞர்கள்
தொழில்நுட்ப குழுவின் உழைப்பு பாராட்டத்தக்கது. ஒளிப்பதிவில் பரந்து விரிந்து இந்திய பெருங்கடலின் அடர்த்தியான நீலமும்,கடலின் அசல் முகமும் அசத்தல். பெரும்பாலும் மீனவ கரையோரம் நகரும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ரிச்சட் நாதன் ,தன் கேமரா மூலம் அழகாக வடித்திருக்கிறார். கண்களுக்கு குளிர்ச்சி, சண்டை காட்சிகளில் அனல் தெறிக்க படமாக்கி இருப்பது சிறப்பு.
திபு நினன்தாமஸ் இசை
ஓகே. பல இடங்களில் பாராட்ட வைக்கிறது. பாடல்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. சிம்பு பாடும் பாடல், கானா பாடல் ,மெலோடி என, காதல் பாடல் ரசிக்க வைத்தது.
சான் லோகேஷ், படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது . படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறது. ஸ்டண்டு சிவா, மற்றும் ராஜசேகர் இருவரும் மெனக்கெட்டு கடுமையான சண்டை பயிற்சிகளை கொடுத்திருக்கிறார்கள் .
சண்டைக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ஹரிஷ் கல்யாணுக்கு, எது பொருத்தமாக இருக்குமோ, அப்படி சண்டைக் காட்சி அமைத்திருப்பது சிறப்பு.
நடன பயிற்சி கொடுத்திருக்கிறார்கள், சோபி, மற்றும்
ராஜ் சுந்தரம் ,ஷெரீப் ,
பச்ச குத்தி பாடலுக்கு சிறப்பான நடனம் அமைத்திருக்கிறார்கள்.
ஒப்பணையாளராக கணபதியும்,
ஆடை வடிவமைப்பாளராக
செல்வ சேகரும், சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள் ,
மேக்கப், மற்றும் ஆடை வடிவமைப்பு, டீசல் வாசுவாக வரும் ஹரிஷ் கல்யாண், பௌர்ணமியாக வரும் அதுல்யாவுக்கும், வினைய்க்கும், மற்றும் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக பொருந்தி இருக்கிறது.
மற்றும் இந்த படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பாளர், மற்றும் தயாரிப்பில் உதவி,
.
Banner : Third Eye Entertainment
Produced by Devarajulu Markandeyan
Production by SP Cinemas
Executive Producer : V Kishore Kumar
Creative Producer : Naren
Production Designer : Scarecrow
Production Controllers : B.Jai Ganesh & C V Vijayan
மக்கள் தொடர்பாளர்கள் :
திரு. சுரேஷ் சந்திரா, அவர்கள் மற்றும் அப்துல் நாசர் அவர்கள்.
மொத்தத்தில் இந்த டீசல், மக்களுக்கு பெட்ரோல், டீசல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும், தனியார் துறைமுகம் அமைக்க பட்டால்,எத்தனை மீனவ குப்பங்கள் ,தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த நாட்டுக்குள்ளே அகதிகளாக வெளியேற வேண்டி வரும் என்ற சூழ்நிலையையும், நிழல் விளையாட்டான மாபியா கும்பலின் ஒட்டுமொத்த செயலையும், தோலுரித்துக் காட்டி இருக்கிறது.
இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும், இதில் நடித்த ஹரிஷ் கல்யாண் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பட்டியலில் “டீசல்”