மணத்தி கணேசன் கதையை தழுவி, அதன் மூலம் பெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
கிட்டான் (துருவ்) மணத்தி என்ற ஊரில் வாழும் இளைஞன். வறுமை சூழல், ஊரில் நிகழும் வன்முறை, ஒடுக்குமுறை என பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகும் அவனுக்கு இதில் இருந்து மீள கிடைக்கும் ஒரே வழி கபடி. எப்படியாவது ஊரின் கபடி அணியில் சேர நினைக்கும் அவனின் முயற்சிகள், அவனது தந்தை வேலுச்சாமியால் (பசுபதி) தடுக்கப்படுகிறது.
ஆனால் பள்ளி ஆசிரியர் ஒருவரால் அந்த கனவு மெய்ப்படுகிறது. அதற்கு கிட்டான் அக்கா ,ராஜு கை கொடுக்கிறார்.
அந்த ஏரியாவில் பல வடிவங்களில் பரவி கிடக்கும் வன்முறையும், பகையும் இந்த கபடி போட்டியால் தூண்டப்படுமோ, மகனுக்கு ஆபத்து வருமோ என்ற பயம்
இன்று பசுபதி பயப்படுகிறார் தன் மகனை கபடி பக்கம் போக கூடாது என்று சத்தியம் வாங்குகிறார்.
அதன் உள்ளே அமீர், லால் பாத்திரங்கள் மூலமாக சில நிஜ சம்பவங்களை உள்ளே வைத்து வன்முறை பாதை எங்கே சென்று முடியும் என்பதையும் காட்டி இருக்கிறார் இயக்குனர்.
கிட்டானுக்கு பயத்தையும் தூண்டுகோளாகவும் அமையும் இரண்டு கதாபாத்திரங்கள்
கந்தசாமி (லால்), அவரை எதிர்த்து போராடும் பாண்டியராஜா (அமீர்) இருவரின் மோதல் ஊரை எப்போதும் ஒரு கலவரத்திற்கு தயாராக வைத்திருக்கிறது. இதனிடையே ராணியுடன் (அனுபமா) காதல், உறவுக்குள்ளேயே ஏற்படும் ஈகோ மோதல் இவையும் முளைக்கிறது. இந்த பிரச்சனை அனைத்தையும் தாண்டி, தான் நினைத்தது போல் கபடியில் கிட்டான் எப்படி சாதிக்கிறான் என்பதை சொல்கிறது.
இந்த பைசன் காளமாடன்.
அருமையான திரைக்கதை, எதார்த்தமான கதைகளும் ரசிக்க வைக்கும் நடிப்பு, உருக வைக்கும் எமோஷனல், ரசிகர்கள் எல்லா காட்சிகளிலும் தங்களோடு இணைத்துக் கொள்ளும் நெருக்கம். இவை யாவும் இந்த படத்திற்கு வெற்றிப் பாதை அமைத்திருக்கிறது. மிகப் பெரிய தீபாவளி ரேஸில் முந்திச் செல்லும் பைசன்.
: துருவ் நடிப்பு எப்படி
சொந்த ஊர் கபடி அணியிலேயே சேர்த்துக்கொள்ளப்படாத இளைஞன், இந்திய கபடி அணியில் இடம்பிடிக்கும் போராட்டத்தை
அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகன் கிட்டான்.
அந்த முயற்சிக்கு வரும் தடைகள்,
தாண்டி உதவிகள், முன்னால் நிற்கும் சவால்கள் என அனைத்தையும் நிதானமான
தீர்க்கமான பார்வையில் கடினமாக வெறிகொண்டு உழைத்து, வெற்றிக்காக தவம் செய்து ,தனது நடிப்பில் பட்டை தீட்டிய வைரம் போல ஜொலிக்கிறார். துருவ்.
இயக்குனர் மாரி செல்வராஜ்
பரபரப்பான திரைக்கதை மூலம் காட்சிப்படுத்தியுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் – கதைகளம் 90களில் நடைபெறுவதாகவும் மணத்தி கணேசனின் கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு புனைவு சேர்த்து எடுக்கப்பட்டிருக்கிறார்
அதில் சில முக்கிய நிஜ கதாபாத்திரங்களை கொண்டுவந்துள்ளார் இயக்குனர்.அது படத்திற்கு சிறப்பு. அதுவும் தென்மாவட்ட கதைகளம் என்பதால் 90 காலகட்டத்தில் நடந்த சாதி கலவரத்தை திரைக்கதை வாயிலாக காட்சிப்படுத்தியுள்ளதற்காக
கதை நம்பகத்தன்மையை அடைகிறது. அதற்காக வெங்கடேசன் பண்ணையார், பசுபதிபாண்டியன் கதாபாத்திரங்களை வேறு பெயர்களுடன், அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை வேறு வடிவிலும் பயன்படுத்தியுள்ளார்
பைசன் கபடி வீரரின் வாழ்க்கைப் படமாக இருந்தாலும் அதில் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடையாளத்திற்காக சண்டையிடுவதாக வசனம் பேசும் கந்தசாமி கதாபாத்திரம் சாதிக்க துடிக்கும் பட்டியலின இளைஞனுக்கு உதவும் வகையிலும், தன்முன் இருக்கும் தடைகளை உடைக்கும் பாண்டியராஜா கதாபாத்திரம், “எல்லாரும் சமம் என்று தொடங்கிய சண்டையை நைசா மறந்துடானுங்க” என வசனம் பேசும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது இரண்டு தரப்பில் இருக்கும் தவறுகளை அந்த கதாப்பாத்திரங்கள் வாயிலாக கூறியுள்ளார்.இயக்குனர் அதற்காக எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.
இயக்குனர் முதல்பாதியில் துருவ் விக்ரம், கபடி வீரராக சந்திக்கும் சவால்களையும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளையும், வலியுடன் கலந்த தவிப்பு என நகர்த்தியிருக்கிறார் அதேபோல் இரண்டாம்பாதி துருவின் இலக்கை நோக்கிய பயணம், அதில் இருக்கும் தடைகள், சம்பந்தமே இல்லாமல் அவன் மேல் வரும் சந்தேகம், அதன் பின் இருக்கும் அரசியல் என நகரத்தியிருக்கிறார்
வாழ்த்துக்கள் இன்னொரு சத்யஜித்ரேவை கண்முன் பார்ப்பது போல இருக்கிறது.
வெங்கடேச பண்ணையார் கதாபாத்திரத்தில் கந்தசாமியாக லால், பசுபதி பாண்டியன் கதாபாத்திரத்தில் பாண்டியராஜாவாக அமீர் நடித்துள்ளனர். அதேபோல் துருவின் தந்தைக் கதாபாத்திரத்தில் பசுபதி, அக்காவாக ரஜிஷா விஜயன், மாமன் பொண்ணாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர்
இதில் அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தாலும், தகப்பனாக மகனுக்கு எதுவும் நடந்தவிடக்கூடாது என்ற தவிப்பையும், மகனின் வெற்றியின் பின் இருக்கும் வைராக்கியம் கலந்த பூரிப்பையும் நிறைவாக தந்துள்ளார் பசுபதி.
அருவிமதன் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது அவரது நடிப்பு ,
மற்றும் உலகம் பெருமாள் அனுராக் இவர்கள் நடிக்கும் நன்றாக இருக்கிறது
தொழில்நுட்ப கலைஞர்கள்
தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஆகியவை கதைக்களத்திற்கு தகுந்தார் போல கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி ,இசை, ஓகே பாடல்களை மாரி செல்வராஜ், அறிவு ,எழுதி இருக்கிறார்கள். ரசிக்க வைக்கிறது.
எழிலரசு கேமரா, பசுமையான வயல் காட்டையும், கிராமத்து மக்களின் இயல்பான நடைமுறைகளையும், கபடி விளையாடும் விறுவிறுப்பான கட்டத்தையும் அருமையாக படமாக்கி இருக்கிறது.
குமார் ஞானப்பன் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார். கபடி ஆடும் இடம், பண்டிகை கால இடம், மற்றும் கிட்டான் வீடு, அமீர் கொல்லப்படும் இடம் ,லால் வீடு ,என எல்லாமே அசத்தலாக இருக்கிறது.
படத்தொகுப்பாளர் சக்தி திரு ,படத்தை எந்த அளவுக்கு விறுவிறுப்பாக என்டர்டைன்மெண்டாக கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
திலிப் சுப்பராயனின் ஆக்சன் காட்சிகள், நிஜமான ஒரு சம்பவத்தை பார்ப்பது போல இருந்தது.
கிட்டான் அடிக்கும் ஒவ்வொரு அடியும், நிஜம் என்று நம்ப வைக்கும் சண்டை காட்சிகள்.
சாண்டி மாஸ்டரின் நடன பயிற்சி, நன்றாக இருந்தாலும், படத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே நடனம் வருவதால் ஓகே தான்.
கலை அழகனின், ஒப்பனை நிஜ கிராமத்து மனிதர்களின் இயல்பான ஒப்பனை, எந்த இடத்திலும் மிகை இல்லாமல் இருக்கிறது.
தயாரிப்பாளர்கள்
Produced by Sameer Nair, Deepak Segal, PA. Ranjith, Aditi Anand
Co Produced by Sunil Chainani, Pramod Cheruvalath, Prasoon Garg, Manind Bedi
Banner : Applause Entertainment and Neelam Studios
Release by “Five Star” K.Senthil
மொத்தத்தில் பைசன் என்கிற காளைமாடன், இளைஞர்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக வந்துள்ளது. சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த படம் ஒரு பக்கபலமாக இருக்கும் .
இயக்குனர் மாரி செல்வராஜ் முந்தைய படங்களை போலவே இந்த படமும் சமுதாய விழிப்புணர்வு மிக்க படமாக அமைந்தது என்று சொல்லலாம். வன்முறை கூடாது, இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். என்று சொல்லி இருக்கிறது. படத்தை இயக்கிய இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும், மற்றும் நாயகன் துருவ்விக்ரம் அவர்களுக்கும், வாழ்த்துக்கள். வெற்றி பட்டியலில் “பைசன்”
மக்கள் தொடர்பாளர்கள் ,
சதீஷ் &சிவாAIM,
யுவராஜ் ,
குணா ,
இவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏