கூலி திரை விமர்சனம் – 4-5/5

சென்னையில் தேவா மேன்சன் நடத்திவரும் தேவா, இவருக்கும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தனது ஆட்களுடன் தங்க கடத்தலில் ஈடுபட்டு வரும் நாகார்ஜுனாவுக்கும் நடக்கும் யுத்தம் தான் கதை

நாகார்ஜீனாவின், வலதுகை ஆன சோபின் சாஹிர் , போலீசுக்கு தகவல் சொல்பவர்களை கொன்று, பின்னர் அந்த உடல்களை அப்புறப்படுத்துகிறார்.

அந்த கூட்டத்தில் கூலியோடு கூலியாக ஒரு போலீஸ் உளவாளி இருப்பது தெரிய வருகிறது.

இதற்கிடையில் தனது நண்பர் சத்யராஜின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரும் ரஜினிகாந்த், அவரது சாவில் மர்மம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசன் துணையுடன் சத்யராஜை கொன்றவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்கிறார்.

அப்போது நாகார்ஜுனாவின் கூடாரத்துக்கே சென்று அவரை சந்திக்கும் சூழ்நிலை ரஜினிகாந்துக்கு ஏற்படுகிறது. அப்போது, துறைமுகத்தில் கொல்லப்படுபவர்களின் உடல்களை தான் கண்டுபிடித்த நவீன எந்திரத்தின் மூலமாக சத்யராஜ் சாம்பலாக்கி அப்புறப்படுத்தி வந்தது தெரிய வருகிறது. மேலும் சத்யராஜை, நாகார்ஜுனாவின் ஆட்கள்தான் கொலை செய்ததும் ரஜினிகாந்துக்கு தெரிய வருகிறது.

அதன் பிறகு தன் நண்பனை கொண்ட சைமன் என்கிற நாகார்ஜுனாவை, சூப்பர் ஸ்டார் பழிதீர்த்தாரா?

சத்யராஜின் மூன்று மகள்களை ரஜினி காப்பாற்றினாரா? என்பது கதை

சூப்பர் ஸ்டார்

ரஜினி, வழக்கம் போலவே தன்னுடைய மாஸ் நடிப்பை இதிலும் காட்டி இருக்கிறார். தன்னுடைய நண்பன் சத்யராஜை கொன்ற நபரை களமிறங்கி ரஜினி, அவரை கண்டுபிடித்து, சம்பவம் செய்யும் காட்சிகள்,

ஏன் சத்யராஜ் கொல்லப்பட்டார் ? என்று கண்டு பிடிக்கும் காட்சிகள், யார் ரஜினி ?என்ற கேள்வி்க்கு, நாகார்ஜூனா விடம் சொல்லும் ஃபிளாஷ் பேக் காட்சியில் அசத்தியிருக்கிறார்

ஹாஸ்டல் வார்டனாக வரும் ரஜினிகாந்த் கலகலப்பான நடிப்பால் கவர்ந்து இழுக்கிறார். நின்றால், நடந்தால், ஆடினால் என தான் வரும் ஒவ்வொரு அசைவுகளிலும் ஸ்டைல் காட்டி அசர வைக்கிறார் ரஜினிகாந்த். ஆக்சன் காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார் 30 வருடங்களுக்கு முன்பு அவரது தோற்றத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் காட்டி இருப்பது ரசிகர்களின் வெறிக்கு தீனியாக அமைந்துள்ளது

நடுவே ஒரு வில்லன் பட்டாளமே வருகிறது
Positives : ☑
✅ ரஜினி & Soubin performance
✅ First half
✅ First half Hostel fight (அந்த fight மட்டும்)
✅ Operation room காமெடி காட்சி
முதல் பாதியில் நேராக சென்ற திரைக்கதை இடைவேளைக்கு பிறகு வேகம் பிடிக்கிறது

நாகார்ஜூனா acting சூப்பர்

உபேந்திரா – வரும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தது படத்தில் 1000 பேர் மேல செத்து இருப்பாங்க. ஆனா police எட்டி கூட பாக்கல. இது மைனஸ் பிரச்சனைகளுக்கு காரணமான சத்தியராஜ் கண்டுபிடிக்கும் ஒரு machine – . அமீர்கான், உபேந்திராவின் வருகையும் கவனிக்க வைக்கிறது.

ஒரு பாட்டுக்கு மட்டுமே வந்தாலும் பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி குத்தாட்டம் மெருகூட்டுகிறது. சோபின் சாஹிரின் யூகிக்க முடியாத நடிப்பு மிரட்டலாக இருக்கிறது

ஸ்ருதிஹாசனின் நடிப்பு, உணர்ச்சிப்பூர்வமானது சத்யராஜின் பர்பாமென்ஸ் ரசிக்க வைக்கிறது.

இதர நடிகர் – நடிகைகள் அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு படத்துக்கு பலமாக இருக்கிறது. அனிருத்தின் அதிரச்செய்யும் இசை ஆட்டம் போட வைக்கிறது. படம் விறுவிறுப்பாக செல்ல படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
ஆர்ட் டைரக்டரின் அற்புதமாக வடிவமைப்பு பிரம்மாண்டமான முறையில் இருக்கிறது ஒப்பனையாளர் சிறப்பு, ஆடை வடிவமைப்பு சூப்பர், Di மற்றும் கலர் கரெக்ஷன் செய்தவர்கள் பணி சிறப்பானது, ஆக்சன் காட்சிகளை அன்பறிவு அசத்தியிருக்கிறார்

பரபரப்பான திரைக்கதை அமைத்து படத்தை வெற்றி படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் லோகேஷ் இயக்கத்தில் , வழக்கமான , புதுமையான திரைக்கதையில், பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளைக் கொண்டு ரசிக்கக்கூடிய படமாக இயக்கியுள்ளார்

இயக்குனர். கூலி – செம மிரட்டல் மக்கள் தொடர்பாளர்கள்- ரியாஸ் அஹமது, அவர்கள் மற்றும் பாராஸ் ரியாஸ், அஹமது அவர்கள்

கூலி -வெற்றி பட்டியலில் 🌷