இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது மிகவும் உற்சாகப்படுத்தியது படக்குழுவுக்கு ,
இந்தப் படத்தில் ஆதித் சிலம்பரசன், மற்றும் காயத்ரி ரெமோ, அனு போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
மற்றும் பல புது முகங்கள் நடித்திருக்கிறார்கள்.
பிரபுவும் , முரளியும் நண்பர்கள், முரளி தேன்மொழியை காதலிக்கிறார்.
ஒரு சமயத்தில் மழைக்காலத்தில் தனிமையில் இருவரும் நெருங்கி விட,
, தேன்மொழி கர்ப்பம் ஆனதற்கு பிறகு நாயகன் சிங்கப்பூர் சென்று விட, அங்கிருந்து வந்து பார்க்கும் பொழுது நாயகி தேன்மொழி அடுத்தவன் மனைவியாகிறார்.
இதனால் மனமுடைந்த நாயகன் கவலையில் இருக்க ,நாயகனின் நண்பன் பிரபா, தன் தங்கை மாலதியை நண்பன் முரளிக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
ஒரு கட்டத்தில் நாயகி தேன்மொழி அதாவது காயத்ரி ரெமோ, இவர் மகன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் என்று நண்பன் வந்து சொல்ல நாயகன் முரளி பதறிப் போகிறார் .
அப்போது நாயகனின் மனைவி மாலதி கர்ப்பமாக இருக்கிறார்
நாயகனின் நண்பன் பிரபா இறந்து போனது உன்னுடைய குழந்தை தான் நீங்கள் இருவரும் காதலித்தபோது செய்த தவறு அந்த குழந்தை பிறந்தது இப்பொழுது இருந்து விட்டது என்று சொல்ல ,அந்த குழந்தை பெயர் கர்ணன் என்று சொல்ல பதறிப் போகிறான் நாயகன் முரளி .
இதை மறைவில் இருந்து கேட்ட மனைவி மாலதி, கணவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.
அதன் பிறகு காதலி தேன்மொழியை நாயகன் சந்தித்தாரா? முரளியும் மாலதியும் ஒன்று சேர்ந்தார்களா? அம்பலம், கிராமத்திற்கும் மஞ்சள் குப்பம் கிராமத்துக்கும், இருக்கும் பகையில் கொல்லப்பட்டது யார்?
நாயகன் முரளியின் மனைவி மாலதி ஏழு மாத கர்ப்பமாக இருந்து கீழே விழுந்து விடுகிறார்
அவர் மீண்டும் உயிர் பிழைத்தாரா?
என்பதை எதார்த்தமாக இயக்குனர் ஏ .பி ராஜீவ் சொல்லி இருக்கிறார்
பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாக இனித்தது தளபதி டைசன் ராஜ் இசையில் கிராமத்து பின்னணியில்
கற்கண்டு மழையே என்ற பாடலும்,
சிங்காரியே என்ற பாடலும் ,
வுட்டாலங்கடி கொய்யா ,
என்ற கரகாட்ட பாடலும் மிக ஜோராக இருந்தது. இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள். பின்னணி இசை பிரமாதப்படுத்தி விட்டார் .
இந்த படத்தில் காயத்ரி ரெமோ தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் வெள்ளந்தியாக சிறப்பாக நடித்திருந்தார் .
இவர் நடித்த படங்களிலேயே இந்த படம் அவருக்கு சிறப்பான பெயரை பெற்று தரும் கருப்புசாமி சத்தியமா என்று அவர் பேசும் அந்த வெள்ளந்தி தனம் ரசிகர்களை கவரும்.
ஆதித் சிலம்பரசன் சண்டைக் காட்சிகளிலும் ,நடன காட்சிகளிலும், சோக காட்சிகளிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கிராமத்து அழகு தனது கேமரா மூலம் பசுமையாக படமாக்கி ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்.
ஒரு யதார்த்தமான கிராமத்து பின்னணியில் உருவான இந்த படம் நிச்சயம் மக்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர்கள் ஆர். வி. உதயகுமார் பேசும்பொழுது.
நாயகன் கட்டிப்புரண்டு நன்றாக நடித்திருக்கிறார்.
இசை பிரமாதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குனர் பேரரசு பேசும்பொழுது ராஜா வீட்டு கன்னுக்குட்டி, அது கன்னுக்குட்டி ஆவதும் சிங்கம் ஆவதும் ,ஒரு தந்தை வளர்ப்பதிலே
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தன் மகன் பிரபுவை
முதலில் சங்கிலி படத்தில் ஒரு வில்லனாக அறிமுகப்படுத்தி பிறகு அவரை படிப்படியாகத்தான் கொண்டு வந்தார் சிங்கமாக மாற்றினார் .
அதேபோல நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும், ஆரம்பத்தில் நடிக்கும் பொழுது நிறைய அவமானப்பட்டார்கள் கஷ்டப்பட்டார்கள் சிவகுமார் அவர்கள் தலையிடவில்லை அப்படித்தான் அவர்கள் வளர்ந்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டார் .அந்த கண்ணு குட்டிகள் சிங்கமாக வந்தது என்று பேசினார் .
மக்கள் தொடர்பாளர் சங்கத் தலைவர் என். விஜய முரளி அவர்கள் பேசும் பொழுது ,
சினிமாவில் 26 வகையான வியாபாரம் இருக்கிறது யாருமே இதை கண்டு கொள்ளவில்லை நிறைய பேர் படம் எடுத்து சிரமப்படுகிறார்கள் நாங்கள் தமிழக அரசிலும், புதுச்சேரி அரசிலும் சென்று வரியை குறைக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறோம் என்றார்.
விநியோகஸ்த சங்கத் தலைவர் ராஜன் அவர்கள் பேசும்பொழுது,
இப்பொழுது குடும்பஸ்தன் ,டூரிஸ்ட் பேமிலி, போன்ற சின்ன படங்கள்தான் வெற்றியடைகிறது. லோகேஷ் கனகராஜ் அவர்கள், மாநகரம் என்ற சின்ன படம் எடுத்தார் அதன் பிறகு கைதிஎன்ற படம் எடுத்தார். ஆனால் அவரை கமலஹாசனும், ரஜினி அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். என்று பேசினார் .
நடிகை காயத்ரி ரெமோ என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு மிகவும் நன்றி என்று அவர் காலில் விழுந்து வணங்கி பொன்னாடை போற்றினார்.
இசையமைப்பாளர் டைசன் ராஜ் வின் அப்பா பேசும்பொழுது
சின்ன வயதில் இருந்தே என் மகன் இசை, இசை என்று சொல்லிக் கொண்டிருப்பான் நான் உருப்படற வேலையை பார் என்பேன். இப்பொழுது இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்கிறான் அவனுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
கில்டு சங்க தலைவர் ஜாகுவார் தங்கம் அவர்கள் பேசும் பொழுது ,
சின்ன படங்கள் வெற்றியடைய வேண்டும் அப்பொழுதுதான் சினிமா நன்றாக இருக்கும் என்று பேசினார்.
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ரசிகர் மணி பேசும் பொழுது, ராஜா என்று பெயர் வைத்தாலே படம் வெற்றி அடையும் அதற்கு உதாரணம் எங்கள் தங்க ராஜா, வெள்ளை ரோஜா, ரோஜாவின் ராஜா, எங்க ஊர் ராஜா, அவர்தான் தலைவர் திரை உலக ராஜா, சிவாஜி அவர்கள்
அதுபோல இந்த படமும் ராஜா வீட்டுக்கு கண்ணு குட்டி வெற்றியடையும் என்று வாழ்த்தினார்.
இசையமைப்பாளர் டைசன் ராஜா பேசும் பொழுது ,இந்த மேடைக்கு வருவதற்கு எனக்கு பத்து வருடங்கள் ஆகிவிட்டது இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி என்று கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
இயக்குனர் விவேக பாரதி பேசும் இப்பொழுது நான் ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் அந்த படம் போலவே இந்த படம் வெற்றி அடையும் என்று வாழ்த்தினார்.
இப்படி அனைவரும் ராஜா வீட்டு கண்ணு குட்டி சிங்கக்குட்டி போல வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்கள் அனைவருக்கும் நாயகன் ஆதி சிலம்பரசன் நன்றி கூறினார்.
இந்த விழாவை மக்கள் தொடர்பாளர் வெங்கட் அவர்கள்
மற்றும் ஹரி, உதய் அவர்கள்,
சிறப்பாக ஏற்பாடு செய்து அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கி சிறப்பாக நடத்தினார்கள்.
இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று எல்லோரும் வாழ்த்தினார்கள்.
நிச்சயம் படம் வெற்றி அடையும் பேசப்படும் ஒரு எதார்த்தமான நண்பர்களுக்கு, இடையான படமாகவும், முன்னாள் காதலியை இழந்து தவிக்கும் காதலன் பற்றியும், சந்தேகப்படும் மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல் அவதிப்படும் கணவனாகவும், இப்படி பல கதைகளை உள்ளடக்கிய இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அவர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கிளாசிக் சினிமா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது🙏