நாயகன் நிவாஸ் ஆதித்யா, (டேனி) இவரின் மனைவி ஜேனட், (எஸ்தர்) இவர்களுக்கு ஒரு குழந்தை சாமுவேல் டேனி, வேலைக்குச் செல்லாமல் ஆன்லைன் கேம்பிளிங் விளையாடி ஜெட் மணி ஆப்பிலிருந்து 68 லட்சம் 47 ஆயிரத்து 333 ரூபாய் கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் ஜெட்மனியில் இருந்து போன் வரும் போதெல்லாம் போனை கட் செய்கிறார்.
இந்த கடனை வசூலிக்க ஜெட் மணியிலிருந்து விஷ்வா, மற்றும் அசோக் இருவரும் டேனிவீட்டுக்கு வருகிறார்கள். ஜேனட் வேலைக்கு செல்ல, சாமுவேல் பள்ளிக்கு செல்ல, தனித்திருக்கும் டேனியலிடம் காலை 10 மணியிலிருந்து 6 மணிக்குள் அந்த கடனை எப்படி வசூலித்தார்கள்? என்ன நடந்தது? என்பதை இன்று நாட்டில் நடக்கும் ஆன்லைன் மோசடிகளை தோலுரித்துக் காட்டி இருக்கிறது இந்த “கேம் ஆப் லோன்”
இன்றைய இளைஞர்கள் ஆன்லைன் கேம் விளையாடி, உயிரையும் மாய்த்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் பார்த்து திருந்த வேண்டிய ஒரு அற்புதமான திரைப்படம். எந்த ஒரு ஆடம்பரமும் இல்லை. பாடல் காட்சிகள் இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் காட்சிகளை வீணடிக்க வில்லை. கதை ,கதை, கதை சொல்ல வந்த விஷயத்தை அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். வாழ்த்துக்கள் பட குழுவுக்கு
நடிகர் & நடிகைகள்
நிவாஸ் அதித்யா, காக்கா முட்டை உட்பட இதுவரை 28 படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் இருந்தது. இடைவேளைக்கு பிறகு மனுஷன் பிச்சு உதறிவிட்டார். வீட்டுக்கு வந்திருக்கும் கடன் வசூலிக்கும் அந்த இரண்டு பேரிடம் இருந்து மனைவியை எஸ்கேப் செய்வது, என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பது ,சீட்டாட்டத் தில் வெற்றி பெற்றதும் மகிழ்ச்சியால் துள்ளுவதும் என, படம் முழுக்க இவர் ராஜ்ஜியம் தான் அருமையாக நடித்தி ருக்கிறார்.
அடுத்து அபிநய் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த அபிநயா? இவர் என்று சொல்லும் அளவுக்கு அற்புதமான வில்லத்தனத்தை கொடூரமாக அரங்கேற்றுகிறார். விசுவா என்ற அந்த கதாபாத்திரத்தில் ஒரு ஹாலிவுட் நடிகரை பார்த்தது போல் இருந்தது அற்புதமான நடிப்பு .
அடுத்து விஷ்வாவிடம் வேலை செய்யும் அசோக், இவ ர்நடிப்பு அருமை. தன் மனைவி அபிராமியை அம்மு அம்மு என்று கொஞ்சுவது, சினிமாக்கு போக நேரமாச்சு ,என்று டேனியை கூல் செய்வது, என மனுஷன் நடிப்பில் பிச்சு உதறிவிட்டார் .
அடுத்து ஜெனட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தர், ஒரு குடும்பத் தலைவியாக வேலைக்கு செல்ல வேண்டிய டென்ஷன், கணவனுக்கு வேலை வாங்கி தர வேண்டும் என்ற தவிப்பு ,இ.எம்.ஐ கட்ட முடியவில்லை என்று சொல்லி புலம்பும் அந்த நடிப்பு எஸ்தர் ஒரு குடும்பத் தலைவியாக கண் முன்னால் அற்புதமாக தெறிகிறார்.
இந்த நான்கு கதாபாத்திரங்கள் தான் படத்தில் நான்கு பேரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
இயக்குனர் அபிஷேக் லெஸ்லி
அறிமுக இயக்குனர் முதல் படத்திலேயே சமூகத்திற்கு தேவையான அவசியமான ஒரு திரில்லர் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
ஹாலிவுட் படம் பார்ப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.முதல் பாதியிலேயே முடிச்சுகளை அவிழ்த்துவிட்டதால் (?) இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்றே தொய்வைச் சந்திக்கிறது. இருப்பினும் அடுத்து என்ன நடக்கும் என்று குற்றவாளியின் மனநிலையையும் ஆராய்கிற விதத்தில்
அபிஷேக் லெஸ்லி பொறுப்புள்ள எழுத்து பாராட்டுக்குரியது.
ஜோ கோஸ்டோபின்னணி இசை. இசை தேவையில்லையென நிசப்தமாக அவர்விட்ட இடங்களும் காட்சியின் அழுத்தத்தை மேலும் கூட்டி இருக்கின்றன. சவுண்ட் எஃபெக்ட்ஸ் பதற்றமடையச் செய்கிறது. கதையின் சூழல் தெளிவாக மனதில் பதியும் வகையில் கதையோடு ஒன்ற வைத்திருக்கும் சபரியின் ஒளிப்பதிவு சிறப்பு. பிரதீப் ஜெனிபர் படத்தொகுப்பு திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது
சாஜன் ஆர்ட் டைரக்டராக, வீட்டை நன்றாக வடிவமைப்பு செய்து இருக்கிறார்..
தற் கொலைக் காட்சிகளைத் தத்ரூபமாகக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அபிஷேக் லெஸ்லி சீரான ஸ்க்ரீன் ப்ளே
நீங்கள் தான் வலை விரிச்சீங்க அந்த வலையில் நீங்களே மாட்ட்டீங்க, போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. கூடுதல் வசனம் மற்றும் திரைக்கதை எழுதி இருக்கிறார்கள். சிவா சுப்பிரமணியம், அண்ட் வினோ மற்றும் இந்த வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள்
Dubbing – Aura Studios
Sound Engineer – Geeta Gurappa
Subtitles – Rekhs
Trailer cut – Abhishek Leslie
Teaser SFX – Shamir Mohammed
AI animation – Mrityunjay Bhardwaj
P.R.O – Mani Madhan
Producer – N. Jeevanantham
a JRG Production
மொத்தத்தில் இந்த படம் இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் தேவையான படம். இளைஞர்கள் இதை பார்த்து திருந்தினால், இந்த படத்துக்கு கிடைத்த த்த மாபெரும் வெற்றியாகும். வெற்றி பட்டியலில் இந்த “கேம் ஆஃப் லோன்ஸ்”
இடம் பிடிக்கும்.