பூகம்பம்”திரை விமர்சனம்

தேர்தல் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக வந்துள்ளது” பூகம்பம்”

அரசியல்வாதிகள் தங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை சமுதாய விழிப்புணர்வோடு சொல்கிறது “பூகம்பம்

: கதை களம் வெளி நாட்டில் படித்துக் கொண்டிருக்கும் லஷ்மன் இந்தியாவுக்கு வந்து தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி கல்லூரியில், சேர்ந்து
பிரபா என்ற பெயரில் மாணவர் சங்கத் தலைவராக இருக்கிறார்.

அரசியல்வாதியான பொற்கை பாண்டியன், தேர்தலில் நின்று வெற்றி பெற
தனது அடியாள் சத்யாவை வைத்து தனக்கு எதிர்ப்பாக பணி புரியும் பத்திரிக்கையாளர் ,
அரசியல்வாதி, என எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார்.

அவரது மனைவி சோனாவின் தங்கை பிரியாவை அடைய கனவு காண்கிறார்.

பிரியாவும், நாயகன் பிரபாவும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் ஒரு கட்டத்தில் எதிரிகளிடமிருந்து தப்பித்து ஓடும் போது ப்ரியா ஆற்றில் விழுந்து நனைய, அங்கு வரும் நாயகனுடன், வீட்டுக்குள் ஒன்றாக இணைகிறார்கள் .
அதன் பிறகு பிரியா பிரபாவின் குழந்தையை சுமக்க ஆரம்பிக்கிறார்.

இப்போது பிரபாவுடன் வெளிநாட்டில் படித்த ஜூலி அதே கல்லூரிக்கு ஆராய்ச்சியாளராக வருகிறார்.

ஒருபுறம் பிரபா, ஜூலி, பிரியா மோதல் அதன் பிறகு பிரியா, பிரபா காதல் என கதை சென்றாலும்

இன்னொரு புறம் பொற்கை பாண்டியன் தன் தம்பியையும், அப்பாவை
தேடி வருகிறார் ஏன்? சின்ன வயதில் அசிங்கமாக இருக்கிறார்.
என்று ஒதுக்கி விட்டார்கள் அவர்களை தேடிக் கொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவனது அப்பா ராஜசேகர் அவனுக்கு நல்லது தான் செய்து, உயில்எலாம் எழுதி வைக்கிறார். தன் மகன் அசிங்கமாக இருக்கிறார் என்று சொன்னதற்காக, சத்யாவின் அப்பா புருஷோத்தமனை ராஜசேகர் கொலை செய்கிறார். இது எல்லாம் தெரிந்த பிறகு பொற்கை பாண்டியன் மனம் மாறினாரா? தன் தம்பியாக பிரபாவை ஏற்றுக் கொண்டாரா?
பொற்கைப் பாண்டியன் உடன் கூடவே இருந்த சத்யா தன் அப்பாவை கொன்ற குடும்பத்தை பழி வாங்கினாரா ?
தனக்கு எதிராக ஓட்டு போடாத கல்லூரி மாணவர்களை பொற்கை பாண்டியனும் சத்யாவும் என்ன செய்தார்கள்? அவர்களிடமிருந்து கல்லூரி மாணவர்கள் தப்பித்தார்களா?
பிரியாவை அடைய நினைக்கும் பொற்கை பாண்டியன் கனவு நனவானதா ?
பிரபா, பிரியாவை மனந்தாரா? ஜூலிக்கு என்ன ஆனது?
என்பதை மிகவும் பரபரப்போடு, விறுவிறுப்போடு சொல்லி இருக்கிறது இந்த படம்

: இசாக் உசேனி. சிறந்த கராத்தே வீரரான அவர் பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்
இப்படத்தில்
பன்முகத் திறமை கொண்ட பிரபல கராத்தே வீரர் இசாக் உசைனி பூகம்பம் படத்திற்கு திரைக்கதை, வசனம் ,எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார். இது மட்டுமல்லாமல் இப்படத்தின் நாயகனாகவும்
இரு வேறுபட்ட நடிப்பில்
நடித்து அசத்தியுள்ளார். இதில் இஷாக் உசைனி, தில்சானா ,ஹேமா ரிஷ்ஷத் என இரண்டு கதாநாயகிகள் படம் முழுக்க வந்து கண்களுக்கு குளிர்ச்சி தருகிறார்கள். அவ்வப்போது நாயகிகள் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். எனக்குத்தான் நாயகன் என்று, இரண்டு கதாநாயகிகள் நடிப்பு நன்றாக இருக்கிறது.

இப்படத்திற்கு தாமஸ்ரத்தினம் இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்திற்கு பிரமாதமாக இருக்கிறது உயிரோட்டமாக வந்துள்ளது.

மற்றும் தேர்தலில் வெற்றி பெற்று பதவி பெற வேண்டும் என்ற வெறியுடன் அரசியல்வாதியாக என மாறுபட்ட கதைகளத்தில் முற்கைப் பாண்டியனாக நடித்திருக்கும் நடிப்பு ரசிக்க வைக்கிறது .
வெளிநாட்டில் இருந்து வரும் நாயகன் எடுக்கும் அதிரடி, முடிவு ஆக்சன் அதளம் பண்ணியிருக்கிறது.
சன்டை காட்சிகள்
கமாண்டர் கே.பாபு
சிறப்பாக அமைத்திருக்கிறார்..

தமிழகத்திலும், ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக போலந்து நாட்டில் அதிகமாக படபிடிப்பு நடத்தி
இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் கள்
தயாள் ஓஷோ & தேவராஜ் இருவரும்

ஆர்ட் டைரக்டராக,
பழனி வேல் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.

படத்தொகுப்பு;
நவீன் குமார் இரண்டு மணி நேரம் கச்சிதமாக படத்தை செதுக்கியிருக்கிறார்.
இணை இயக்குநர் மற்றும் அலுவலக நிர்வாகியாக என்.எம்
இலியாஸ் பணிபுரிந்து இருக்கிறார்.

இப்படத்தை தயாரித்து இருக்கிறது ஐ இண்டர் நேஷனல்.

இந்த படத்தை மக்களிடம் கொண்டு சிறப்பாக சேர்த்திருக்கிறார் திரு.என் . விஜய் முரளி அவர்கள்

மொத்தத்தில் இந்த பூகம்பம், போலி அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி அடைய நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன், என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
.