கம்பி கட்ன கதை திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7 /5

‘பண த்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணும் அறிவு (நட்டி)

அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’ என்று அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறேன் என்று, நீங்கள் பணம் தர வேண்டாம் முதல் மாத சம்பளம் உங்கள் மனைவிக்கு, இரண்டாவது மாத சம்பளம் உங்கள் குடும்பத்திற்கு, மூன்றாவது மாத சம்பளம் உங்கள் நண்பனுக்கு, நாலாவது மாத சம்பளம் மட்டும் எனக்கு கொடுங்கள் என்று ஒவ்வொருவரையும் உடல் செக்கப்புக்கு அனுப்புகிறார்.
அங்கு டாக்டரிடம் கமிஷன் வாங்கி ஏமாற்றும் இவரை மக்கள் புகார் கொடுக்க,போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அங்கு இன்ஸ்பெக்டருக்கு கமிஷன்,
இப்படி சமூகத்தை ஏமாற்றும் கிரிமினலாக உருவாகும் அறிவு, ஒரு வைரத்தை கடத்துவதற்காக காவல்துறை அதிகாரி (கராத்தே கார்த்தி)அவரை பயன்படுத்த அவரிடமிருந்து எப்படி அந்த வைரத்தை திருடுகிறார்.
என்பது
ஒன்லைன்தான். ஆனால், போலி சாமியார்களின் ஃப்ராடு’களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கும் டீட்டெய்லிங்… அசத்தல்!

அறிவானந்தம், பெண்களை ஏமாற்றுவது சாமியார் என்ற பெயரில் காமலீலை நடத்துவது, பணத்துக்காக எல்லோரையும் நம்ப வைப்பது, எம்.எல்.ஏவிடம் 25 கோடியை ஆட்டை போடுவது, இதெல்லாம் செய்திகளில் கடந்துபோன சம்பவங்கள்தான். அந்த மோசடிகளையே கதைக் களமாக்கி, செஸ் காய் நகர்த்தல் ட்ரீட்மென்ட்டில் திரைக்கதை அமைத்து, இறுதியில்
ஒயிலாசாவை வாங்குவது போலபெருவெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் அறிமுக இயக்குநர்
ராஜநாதன் பெரியசாமி.
ஒரு மனிதனின் பணத் தேவை எப்படி ஒருவனை ஏமாற்றுபவனாகவும், மற்றவனை ஏமாறுபவனாகவும் மாற்றுகிறது, பேராசைப் பேர்வழிகளை மோசடி மன்னர்கள் எப்படி சைக்காலஜி தூண்டில் வீசி கவிழ்க்கிறார்கள், ஏமாற்றி அபகரித்த பணம் எப்படி நிம்மதியை ஆக்கிரமிக்கிறது என்று ‘கேண்டிட் சினிமா’வாக சொன்ன விதம்… பளீர் பொளேர்!
இயக்குனருக்கு இப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஹீரோ நட்ராஜுக்கு பணமே பிரதானம். வைரக் கடத்தல் ‘சினிமாநடிகை
சங்கமித்ராவை வளைப்பது,
எம்எல்ஏவிடம் வேலை செய்யும் வெற்றியை வளைப்பது ,
சலூன் கடை வைத்திருக்கும் சிங்கம்புலியை என்று வலை விரிப்பது, எனத் தில்லுமுல்லு தகிடுதத்தங்கள் செய்கிறார். எதிர்பாராத ஒரு திருப்பத்தில், வைரத்தை திருட ,ஒரு நிர்பந்தத்தில் சிக்கிக்கொள்கிறார் நட்ராஜ். அதன் பிறகு சாமியார் , வேஷம் போட்டு ஃப்ராடுத்தனங்களை மிஞ்சும் மெகா மோசடியைத் திட்டமிடுகிறார். அந்த ஆன்மிக லெக்சர்… செமத்தியான சிக்ஸர். கணக்கில் இரண்டாவது இண்ணிங்ஸ் நட்டி! சார்.
சிங்கம் புலி (சண்முகம்) என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க நட்டியுன் வந்து லூட்டி அடிக்கிறார்.
கிளி உயிரோடு இருக்கிறதா? என நட்டிகேட்க ,அது அப்பப்ப பறக்கும் என்று டபுள் மீனிங் காமெடி தியேட்டரில் சிரிப்பொலி!

முகேஷ் ரவி (வெற்றி) என்ற கதாபாத்திரத்தில் அடுத்த ஹீரோவாக அசத்தியிருக்கிறார்
ரிப்போட்டர் பால் பாயாசமாக டி.எஸ்.ஆர் ,
எம்எல்ஏ நியாயப்பிரகாஷ் கதாபாத்திரத்தில் முத்துராமன் ,
பூனை சுல்தான் என்று காமெடி வேடத்தில் கோதண்டம், அவருக்கு மொழிபெயர்ப்பாளர் ஜாவாசுந்தரேசன்,
மற்றும் கொத்தனார் கல்லறையாக நடித்திருக்கும் வெற்றி வேல் ராஜன், எனஅனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.
கலகலப்பு.

படத்தின் பெரும் பலமும் பெரும் பங்குக் கைதட்டலும் குவிப்பவை… வசனங்களே! ‘
இயக்குனர் முருகானந்தம், திரைக்கதை ,வசனம் எழுதியிருக்கிறார் சபாஷ்!
படீர் படீர் என வெடிக்கிறது ஒவ்வொரு துண்டு வசனமும். ஒவ்வொன்றிலும் அவ்வளவு நையாண்டி டபுள்மீனிங்
இதில் எளிய இனிய நகைச்சுவையும் உண்டு.

கிடைத்த கொஞ்சூண்டு இடத்திலும் அழுத்த முத்திரை பதிக்கிறார்
ரஞ்சனி. பெரிய விழிகள், பெரிய கன்னம், மருண்ட பார்வை… என்று முகமொழியிலேயே உணர்வுகளைக் கடத்திவிடுகிறார்.
நடிகைசங்கமித்ராவாக தமிழ்த் திரைக்கு ஒரு புது ராணி!

ஷாலினி நடிப்பு நன்றாக இருக்கிறது இவருக்கு இரண்டு பாடல்களைத் தவிர அதிக வேலை இல்லை.


அறிமுகத் தோரணைகளுக்குப் பிறகு நட்ராஜிடம் ஒவ்வொரு கேரக்டரும் எப்படியும் ஏமாந்துவிடுவார்கள் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும், அது எப்படி என்பதில் கடைசித் திருப்பம் வரை சுவாரஸ்யம் சேர்த்து ‘லப்டப்’ எகிறவைத்திருக்கிறது ஸ்மார்ட் ஸ்கிரீன்ப்ளே!

அறிவானந்த ஆசிரமம் பிரமாண்ட செட் , அசத்தல் வெளிநாட்டில் லொகேஷன்கள் , .. என விதவித ஆங்கிள்களில், வித்தியாச வியூக்களில் கண்களை நிறைக்கிறது ஒளிப்பதிவு.
ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.எம்.ஜெய்
சுரேஷ்.

மூளையை மழுங்கடிக்கும் பாலீஷ் பேச்சுகள், ஆன்மிக மந்திரங்களின் போலித்தனம், கும்பலாக ஏமாற ஆள் சேர்ப்பது அல்லது கும்பல் இருந்தால் ஏமாறத் தயாராக இருப்பது,. எனச் செய்திகளும் சைக்காலஜியுமாகப் படம் நெடுக உண்மையின் அரசியல்.

சதீஷ் செல்வன் இசையில், பாடல்கள் பின்னணி படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
பா.ராஜா, மற்றும் கு.கார்த்தி இருவரும் பாடல் எழுதி இருக்கிறார்கள், பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது. பாடல்களை பாடி இருக்கிறார்கள் பென்னி தயால், ஆண்டனி தாசன்,
வி. வி. பிரசன்னா, பத்மலதா, சஹானா, மற்றும் சதீஷ் செல்வன், ஆகியோர் குரலில் பாடல்கள்
திகட்டாத தேன் விருந்து என்று சொல்லலாம்.

எஸ்.என் பாசில் படத்தொகுப்பு, படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவுகிறது.

ஆர்ட் டைரக்டராக சிவா யோகா, பணிபுரிந்து இருக்கிறார் அறிவானந்த சாமியாரின் அந்த ஆசிரமம், எம்எல்ஏ வீடு ,ஆரம்பக் கட்சியில் வரும்
சந்திப் லால் வீடு, மற்றும் தூங்கும் துறவி ஆலயத்தின் சிறப்பு, எல்லாமே
ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம்

மற்றும் காஸ்ட்யூமர், மேக்கப் மேன், டி ஐ செய்தவர்கள்,
கலர் கரெக்ஷன் செய்தவர்கள், உதவி இயக்குனர்கள், உதவி கேமராமேன்கள்,
என எல்லோரும் இந்த வெற்றி படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மக்கள் தொடர்பாளராக ஷேக், அவர்கள் மக்களிடம் கொண்டு போய் படத்தை சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த படத்தை தமிழக முழுதும் வெளியிடும்
உத்ரா புரொடக்சன்ஸ் ஹரி உத்ரா அவர்கள் படத்தை வெளியிடுகிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் .
தீபாவளி ரேஸ் கலகலப்பு, காமெடியும், நிச்சயம் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்பது உறுதி வெற்றி பட்டியலில் கம்பி கட்டின கதை.

இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள்

Music
Audio Rights: Mass Audios

Movie Credits
• Banner: Mangatha Movies
• Produced by: Ravi

வெற்றி பட்டியலில்
கம்பி கட்ன கதை 🙏🌷