கிறிஸ்டினா கதிர்வேலன்”திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

லட்சுமி திரை கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும் ஸ்தபதி டாக்டர் ஆர் பிரபாகர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரை ப்படம்
‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படப்பிடிப்பு முழுக்க கும்பகோணம் அருகில் தாராசுரம்
பகுதியில் அதைச் சுற்றிலும் படமாக்கப்பட்டு இருக்கிறது.

‘பவுடர்’ படத்தின் இயக்குந‌ர் விஜய் ஸ்ரீஜியிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய
எஸ் .ஜே அலெக்ஸ் பாண்டியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குந‌ராக அறிமுகமாகி இருக்கிறார்.
படத்தை இயல்பாக எளிய மனிதர்கள் உணர்வுகளை அழகாக சொல்லி இருக்கிறார். கரிகாலன்,
கீதா என்ற இருவரையும் சாதிய மோதலில் மோதவிட்டு ,எங்கே ஆணவ கொலையை சொல்லிவிடுவாரோ என்று பயந்து கொண்டு இருந்த நமக்கு அதை பாசிட்டிவாக காட்டி இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தது.

படம் முழுக்க எதார்த்தம் நிறைந்த காட்சிகளாக இருப்பதால் நம்மோடு ஒன்றி போக முடிந்தது. கிளைமாக்ஸ் காட்சியில், பரபரப்பான ட்விஸ்ட் வைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நடிகர் & நடிகைகள்

காலங்களில் அவள் வசந்தம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கௌஷிக் ராம் நாயகனாக நடித்துள்ளார்
இயல்பான கிராமத்து முகம் .அலட்டல் இல்லாத நடிப்பு காதலுக்காக உருகுவது, அப்பாவின் மறைவுக்காக வருந்துவது, லைப்ரரியில் காதலிக்காக ஒரு இரவு முழுக்க காத்துக் கிடப்பது, கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடியான சண்டை போட்டு காதலியை மீட்பது, என்று ஒவ்வொரு காட்சியிலும் நாயகன் முத்திரை பதித்திருக்கிறார்.

நாயகியாக புவனேஸ்வரி.
கிறிஸ்டினா, என்ற கதாபாத்திரத்தில் அமைதியாக அழகாக வந்து போகிறார். பாராட்ட வேண்டிய நடிப்பு, ஓடிப்போன அக்கா வால் ,அம்மா மீண்டும் மனம் உடைந்து போக கூடாது என்று நாயகனை பார்த்தும் பார்க்காமல் ,ஒரு தலை ராகம் படத்தின் நாயகியை போல ஓர பார்வை பார்த்து புன்னகைப்பது, காதலனை அவரது மாமா அடித்து உதைக்கும் பொழுது மனம் வருந்துவது, கிளைமாக்ஸ் காட்சியில் காதலனை தேடி வருவது ,இப்படி படம் முழுக்க அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் நாயகி.

இவர்களுடன் ரவி, சிங்கம்புலி, சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி எஸ் ஆர் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்
அனைவர் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது..

கதை களம்

கும்பகோணம் மாங்குடி கிராமத்தைச் சார்ந்தவர் கதிர்வேலன் பிளஸ் டூ முடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது கோவில் திருவிழாவில் நாயகி புவனேஸ்வரியை சந்திக்கிறார் .அவர் மீது காதல் கொள்கிறார். அதன் பிறகு கல்லூரியில் நாயகி கிறிஸ்டினா படிப்பதைக் கண்டு அவரும் அந்த கல்லூரியில் சேர்கிறார் .காதலை சொல்ல முடியாமல் பல முறை தடுமாறுகிறார். நாயகியின் அக்கா ஓடிப்போய் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் நாயகனின் காதலை நாயகி ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். இப்பொழுது நாயகிக்கு திருமணம் நடத்த வீட்டில் முடிவு செய்கிறார்கள். அப்பொழுது ஒரு டுவிஸ்ட் ,நாயகனும் நாயகியும், திருமணம் செய்து கொண்டார்கள் என்று சர்டிபிகேட் காட்ட, இதனால் நாயகியின் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்தை எல்லாம் மீறி இவர்களின் காதல் வெற்றி பெற்றதா? அதோடு தன் நண்பன் கரிகாலன் மாற்று சமூகத்தை சேர்ந்த கீதாவை காதலிக்க, அவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறான் கதிர்வேலன், அந்த முயற்சி வெற்றி பெற்றதா? முடிவு என்ன ஆனது என்பதை அற்புதமாக தெளிவாக எந்த குழப்பமும் இல்லாமல் சொல்லி இருக்கிறது இந்த “கிறிஸ்டினா கதிர்வேலன்”

தொழில் நுட்ப கலைஞர்கள்

பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார் தயாரிப்பு மேற்பார்வையாளராக .நமஸ்காரம் சரவணன் பணியாற்றி இருக்கிறார்

இத்திரைப்படத்தின் கலை இயக்குந‌ர் நந்தகுமார்
சிறப்பாக செய்திருக்கிறார் .

நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்பை பாண்டியன் கவனித்து இருக்கிறார். படத்தொகுப்பை குணா கச்சிதமாக செதுக்கி இருக்கிறார்

என் ஆர் ரகுநந்தன் இசையில்
அப்பா மறைவுக்கு பின் “நான் காணும் கடவுள் நீ “என்ற பாடலும் ,
செல்லோட்டியே என்ற பாடலும் ,
உறுமி வரும், என்ற கோயில் குத்தாட்ட பாடலும், ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை பரபரப்பாக இருக்கிறது.

மொத்தத்தில் இந்த “கிறிஸ்டினா கதிர்வேலன்” எத்தனை காதல் படங்கள் வந்தாலும், இந்த படம் ரசிக்க வைக்கிறது. எதார்த்தமாக இருக்கிறது. இயக்குனர் இயல்பு மீறாமல் ,லாஜிக் மீறாமல், படத்தை கொடுத்திருப்பதால் படம் இளைஞர்களைக் கவரும், பெற்றோர்களை கவரும், என்ற நம்பிக்கை இருக்கின்றது .

காதல் படங்கள் சோகமான திரைப்படமாக முடிந்திருந்தாலும் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்ட படமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக படத்தின் திரைக்கதை, வசனம், மேக்கிங் புதுமையாக இருந்தது

படத்தில் மிக முக்கியமாக ஹீரோவின் உணர்வுகளையும், அவர் நினைக்கும் எண்ணங்களையும் பிரதிபலிபாக வைத்து படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது, இளைஞர்களை கவும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது