நாயகன்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4-8/5

“நாயகன்” இதயத்தை தொட்ட சினிமா அற்புதமான திரைக்கதை, எத்தனை சிறப்பான பவர்ஃபுல்லான வசனங்கள், அருமையான நடிப்பு, இசை.. சொல்லவே வேண்டாம் இளையராஜாவின் இசை குறிப்பாக பின்ணனி இசை இந்த படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது.
ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டமாக மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்தது “நாயகன்”

விண்வெளி நாயகன்” கமல்

கமலஹாசனின் திரை உலக வாழ்க்கையை நாயகனுக்கு முன் நாயகனுக்கு பின் என்று பிரிக்கலாம் பிரமாதமாக நடித்திருக்கிறார். மகன் இறந்து விட்டான் என்னும் செய்தியை அவர் அறிந்து கொள்ளும் அந்த காட்சி.. “என்ன ஆச்சு? யாருக்காவது அடி பட்டு விட்டதா?” என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டே வருவார் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் கோலி என்பவர், “மை சன் இஸ் யுவர் சன்” என்றதும் ஏதோ புரிய எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பாரே? அப்பா! அதற்குப் பிறகு அந்த நடை.. ஓ மை காட் !

அதே போல அவருடைய நண்பன் செல்வாவை கைது
செய்து அழைத்துச் சென்றிருப்பது தன் மகளின் கணவன் தான் என்பது தெரியாமல் அசிஸ்டன்ட் கமிஷனர் என்று நினைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று அங்கே புகைப்படத்தில் தன் மகளோடு அந்த அசிஸ்டன்ட் கமிஷனர் இருக்கும் போட்டோவை பார்த்து அவர் கொடுக்கும் அந்த ரியாக்ஷன்.. அங்கே அந்த குழந்தையின் குரலை கேட்ட பிறகு ஒரு முறை பார்க்கிறேன் என்று வசனம் இல்லாமல் அவர் மகளிடம் கண்களால் இறைஞ்சும் அந்த காட்சி… ப்பா! என்ன நடிகன்! செல்வா ரோலுக்கு ஜனகராஜ் தவிர வேறு யாரையும் கற்பனை செய்ய முடியவில்லை.

வேலு நாயக்கர் நீலாவை(சரண்யா) மணந்து கொள்ளும் காட்சியும், அவருடைய மகன் அவரை மிமிக் பண்ணும் விளையாட்டு காட்சியும் ரசனையான கவிதைக்

படம் முழுவதும் கமல்ஹாசன் தான் ஆனால் உறுத்தவில்லை
அவர் நடிப்பு இமயம் தொட்ட நடிப்பு உலக நாயகனாக இருந்து இன்று விண்வெளி நாயகனாக உயர்ந்திருக்கிறார். நடிப்புச் சக்கரவர்த்தி என்றால் அது நமது உலகநாயகன் தான். என்பதை இந்த படம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

மணிரத்னம் இப்படத்திற்கு பிரம்மாதமாக திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் என்பதில் ஐயமில்லை… ஆனால், இசையால் ஒரு திரைக்கதை எழுதி இதனை இழைத்து இழைத்து இயக்கியுள்ளார் இளையராஜா என்றால் அது மிகையில்லை.

“நாலு பேருக்கு உதவனும்னா எதுவும் தப்பில்ல” என்ற வசனத்தை அதனோடு இணைந்தே வரும் தென்பாண்டி சீமையிலே தொடக்க இசையோடு மட்டுமே நம்மால் நினைவில் கொள்ள முடியும். அதே போலதான் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்ற வசனம் வரும் இடமும். அந்த வசனம் வெறுமனே பேசப்பட்டதல்ல. இசைக்கப்பட்டது. மணிரத்னம் படங்களில் வசனம்கூட பேசாத உணர்வுகளை இருளும் ஒளியும் மௌனமும் பேசிவிடும். அப்படி எந்தெந்த இடங்களில் நிசப்தத்தை மட்டுமே இசையாகத் தந்து நம் ஆன்மாவை கிளற வேண்டும் என்பதை நன்கறிந்தவர் இசைஞானி. முக்கிய வசனங்கள் வரும் பெரும்பாலான இடங்களில் பின்னணி இசை இருக்காது. ஆனால் அதன் முடிவிலோ தொடக்கத்திலோ செதுக்கிய அளவில் இசை மீட்டியிருப்பார், அவ்விசை படம் முழுதும் நம் மனதை மீட்டும்.
“விட்டுடுங்க அப்பா… எல்லாத்தையும் நிறுத்துங்க” என வேலு நாயக்கரின் மகள் அவரிடம் கெஞ்சும்போது, ”இவர்களையெல்லாம் நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்” என்று பேசுவார் கமல். Iconic காட்சி அது என்றே சொல்லலாம். அதில் எந்த பின்னணி இசையுமில்லாமல் ஒரே டேக்கில் கமல் இந்த வசனத்தை பேசுவார். கடைசியாக “உங்க அம்மாவை நடு ராத்திரி ஒருத்தன் சுட்டுக் கொன்னான் பார், அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்” என்று கமலின் குரல் உடையும்போது புல்லாங்குழல் பின்னணியில் தென்பாண்டி சீமையிலே உருகி ஓடும். யாராலும் இந்தக் காட்சியை சற்று கலங்காமல் பார்க்க முடியாது

இப்படி படம் முழுக்க நம்மை பிரமிக்க வைத்தது.கமல் நடிப்பு.

கதை ,திரைக்கதை இசை, என்னும் பிரம்மாண்டத்தோடு ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் நடத்தி இருக்கும் ராஜாங்கம் தனி .மும்பை கடற்கரையை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா ?என்று வியப்பில் வாழ்த்துகிறார்.

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி படத்தை உருவாக்கி இருக்கிறார் படத்தொகுப்பாளர்.

அரங்க அமைப்பாளர், மற்றும் சண்டைக் காட்சி அமைத்தவர், ஒப்பனையாளர், காஸ்ட்யூமர், என ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு இந்த பெருமைமிகு படைப்பை கொடுத்து படம் பார்ப்பவர்களை விழிகளில் ஆனந்தத்தையும் தென்பாண்டி சீமையிலே என்ற பாடலின் சோகத்தையும் கலந்து திகட்டாத தேன் தந்து இருந்தார்கள்.
இந்த நாயகன் எத்தனை முறை பார்த்தாலும், காலத்தால் அழியாத காவியம். கமல் என்னும் விண்வெளி நாயகனால் வியப்பை மட்டுமே தர முடியும் .அதற்கு உதாரணமாக படம் வந்திருக்கிறது.

மக்கள் தொடர்பாளர்கள்
டைமண்ட் பாபு ,
சாவித்திரி