ஆராமலே”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5.0

மினி ஸ்டுடியோ சார்பில் எஸ் வினோத் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆரோமலே.

இந்த படத்தை இளம் இயக்குநர் சாரங் தியாகு.
இவர் தனது கற்பனை, கதாபாத்திர வடிவமைப்பு, உணர்ச்சி மையக்கதை ஆகியவற்றால்
படைப்பை கொடுத்திருக்கிறார் .
இவர்
கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்
தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை காமெடியாகவும், கலகலப்பாகவும், ரசிக்கும் வகையில் கொடுக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்🌷

இத் திரை படம் தயாரிப்பு தரம், காட்சியமைப்பு, இசை மற்றும் சினிமாட்டோகிராஃபி அனைத்தும் பெரிய படங்களுக்கு இணையாக அமைந்துள்ளது.
இந்த படம் ஒரு உணர்ச்சியால் நிரம்பிய பயணம். காதல், கனவு, வாழ்க்கை, தன்னம்பிக்கை என இவை அனைத்தையும் ஒரே கதையில் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர். ‘ஆரோமலே’ வெறும் பெயராக இல்லாமல், ஒரு உணர்ச்சியாக உருவாகியுள்ளது
இந்த “ஆரோமலே” படம் ஒரு ரோமான்டிக்-டிராமா வகையைச் சேர்ந்தது இதில் நகைச்சுவை, உணர்ச்சி, குடும்ப பாசம் அனைத்தும் கலந்திருக்கிறது
.

சித்து குமார் இசை
மற்றும் பாடல்கள் ரசிக்க வைக்கிறது .
அற்புதமான மெலடியில் மயக்குகிறது.
பாடல்கள் “” ஒரு நெகிழ்ச்சியான காதல் மெலடியாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர்
கௌதம் ராஜேந்தர் இயற்கை வெளிச்சம், மழை, கடல், மலை போன்ற இயற்கை அழகுகளைக் கலைநயத்துடன் படம் பிடித்துள்ளார்.

பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது

முதலும் நீ முடிவும் நீ’ புகழ் கிஷன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்
அவர் நடிப்பு பாராட்டுத்தக்க வகையில் சிறப்பாக இருக்கிறது.
தன் நடிப்பின் மூலம் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறார்
சிவாத்மிகா ராஜசேகர் (இயக்குநர் ராஜசேகர் – நடிகை ஜீவிதா தம்பதிகளின் மகள்) தன் நடிப்பின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடையே ஏற்கனவே பெயர் பெற்றவர். இவர்களின் ஜோடி திரையில் புதிய பசுமையைக் கொடுத்திருக்கிறது.

விடிவி கணேஷ் மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் கதை மையத்தை வலுப்படுத்தும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த வேடங்களில் தோன்றகிறார்கள்
மற்றும் ராஜசேகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்

ஹர்ஷத் கானின் நகைச்சுவை காட்சிகள் கதையோடு ஒன்ற வைத்து ரசிக்க வைக்கிறது
சச்சினாக, தான் வருகின்ற காட்சிகளில் எல்லாம் சிரிப்பு சத்தத்தைச் சேர்த்தே கொண்டுவந்து சிக்ஸர் அடித்திருக்கிறார் ஹர்ஷத் கான்

கதை சுருக்கம்

கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக உள்ளனர். கிசன் தாஷிற்கு பள்ளி பருவத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்த பிறகு அவருக்குள் காதல் மலர்கிறது. அதன் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காதல் செய்கிறார், ஆனால் அது தோல்வியில் முடிவடைகிறது. பிறகு அவரது தந்தையின் கட்டாயத்தின் பேரில் ஒரு பிரபல மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு பாஸாக வரும் ஷிவாத்மிகாவை பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. ஆனால் அவருக்கு காதல் என்றாலே பிடிக்காது. இந்த இருவரும் இறுதியில் சேர்ந்தார்களா இல்லையா? என்பதே ஆரோமலே படத்தின் கதை.
ஒரு பள்ளி மாணவன் இளைஞனாகும் வரை அவன் வாழ்வில் நடக்கும் காதல் சம்பவங்கள் தான் படத்தின் கதை
இந்த ‘ஆரோமலே’

இது 90ஸ் கிட்ஸ்களின் காதலையும், பல வருட காதல் அனுபவத்தையும் சித்தரிக்கும் ஒரு காதல் கலந்த படம்

படம் காதலின் பெயரில் தொடங்கினாலும், அது ஒரு சாதாரண காதல் கதை அல்ல காதலின் சிக்கல்களுடன் வாழ்க்கை நோக்கமும், சமூகச் செய்தியுமாக கலந்த கதை
மிகவும் அழகாக, நெகிழ்ச்சியுடன் சொல்லப்பட்ட கதை.
அந்த வகையில், “ஆரோமலே” படம் தமிழ் சினிமாவின் அடுத்த உணர்ச்சி கலந்த புதுமை படைப்பு
.
.கிஷன் தாசின் அப்பா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள இருவரும் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளனர். எங்கெல்லாம் படம் தொய்வாய்கிறதோ அங்கெல்லாம் விடிவி கணேஷ் கை கொடுக்கிறார். அவர் தொடர்பாக வரும் சில காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. கதாநாயகி ஷிவாத்மிகா ராஜசேகர் ஆரம்பக் காட்சிகளில் சற்று தடுமாறினாலும் போகப்போக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம். ஒரு மேட்ரிமோனி நிறுவனத்தின் முக்கிய பதிவில் இருப்பவர் எப்படி இருப்பாரோ அதேபோல சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் இளைஞர்கள் ரசிக்கும் வண்ணம் நல்ல படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
சிம்புவின் வாய்ஸ் ஓவர் நல்ல ஐடியா, வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் இப்படத்திற்கு வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர்கள்
ரியாஸ் அஹமது அவர்கள்,
பாராஸ் அகமது அவர்கள்.