கப்பிள் ஃப்ரெண்ட்லி Couple Friendly (2026) – திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

கதை களம்

சென்னை பின்னணியில் உருவான, உணர்வுபூர்வமான காதல் கதை.இந்த படம் .
திருச்சியில் இருக்கும் சிவா, சைலஜாவுடன் பிரேக் அப்புடன் படம் தொடங்குகிறது.

வேலை வெட்டிக்கு போகாத சிவாவை அவர் அப்பா கண்டித்ததால் சென்னைக்கு வருகிறார்.

சென்னை வந்து பல கம்பெனிகளில் ஏறி இறங்கியும் இன்டீரியர் டிசைனரான அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

ரூம் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கும் சிவா, நாயகி மித்ராவை சந்திக்கிறார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த மித்ரா வேலை விஷயமாக சென்னை வந்து தனது தோழி ப்ரீத்தி உடன் தங்கி இருப்பதாக பொய் சொல்லிவிட்டு ஹாஸ்டலில் தங்கி இருக்கிறார்.

அப்பா அம்மா அழைப்பு ஏற்று திருநெல்வேலி செல்வதற்காக பைக் டாக்ஸி ஓட்டும் சிவா வண்டியில் பயணிக்க, இருவரும் மனம் விட்டு பேச, நண்பர்கள் ஆகிறார்கள் .

அந்த நட்பு காதல் ஆகிறது .லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்கிறார்கள். சிவாவும், மித்ராவும்.

சென்னை வரும் மித்ராவின் அம்மா, அப்பாவும், சிவாவின் அம்மா ,அப்பாவும், சிவாவும் மித்ராவும் செய்யும் லிவிங் டு வாழ்க்கையை கண்டுபிடிக்கிறார்கள். மித்ராவின் அப்பா ஜாதி வெறியராக , மித்ராவை சிவாவுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று மறுக்கிறார்.
அதன் பிறகு திருநெல்வேலி செல்லும் நித்ரா ஒரு பெரிய பிரச்சினையில் சிக்குகிறார் .அது என்ன? மறுபடியும் காதலர்கள் இணைந்தார்களா? மித்ராவுக்குஏற்பட்ட பிரச்சனை என்ன? ஜாதி வெறி பிடித்த மித்துராவின் அப்பா சிவாவை மருமகனாக ஏற்றுக் கொண்டாரா? என்பதை கவிதையாக சொல்லி இருக்கிறது இந்த காதல் படம்

தேடல்கள் இருந்தாலும் அதற்கான லட்சிய வேகமும் பொறுப்பும் இல்லாமல் சுற்றும் இளைஞன் வாழ்வில் குறுக்கிடுறாள் ஓர் இளம் பெண். தன்னுடைய மரணத்தின் மூலம் அவன் பொறுப்பை உணர்த்துகிறாள். அவ்வளவுதான் இதன் கதை.

இத்தனை மெல்லிய கதையை வைத்துக்கொண்டு தங்களின் இயல்பான திரைக்கதை மற்றும் காட்சிக்கோவைகளின் மூலம் இயக்குநர் ரசிக்க வைத்திருக்கிறார்.
இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர்.

மொட்டை மாடியில் இரவு பொழுதைக் கழிக்கும் சிவாவை சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்துவதுடன் இந்தத் திரைப்படம் ஆரம்பிக்கிறது. வெட்டி பாய் ஸ் ஆக இருக்கும் சிவா
இருபது இன்டர்வியூவு ,
என்று வேலை தேடும் ஆசாமியாகவும், வேலைக்கு ஏங்கும் மித்ரா அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான குணாதிசயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் வழக்கமாக அமர்ந்து பேசும் மொட்டை மாடியில் நட்சத்திரங்கள் அழகு . தமிழ் சினிமாவில் இளைஞர்களால் கிண்டலடிக்கப்படும் பெண்கள் நாணிக் கோணிக் கொண்டு செல்வார்கள். அல்லது கோபத்துடன் தங்களின் தோழிகளிடம் புகார் சொல்வார்கள். அல்லது கேவி அழுவார்கள். ஆனால் இந்த மித்ரா கிண்டலை மிக முதிர்ச்சியாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் எதிர்கொள்ளும் நாயகியாக மானஷாஇந்தப் படத்தில் காண்பதற்கு மிக சந்தோஷமாக இருக்கிறது

மிக சுவாரஸ்யமான காட்சி கள் நிறைய இருக்கு.படம் முழுக்க வே

ஒரு பெண், ஒரு இளைஞன் உடன் ஒரு கண்ணியமான நட்பைப் பேண முடியும் என்பதை அழுத்தமாகச் சொன்ன இந்தத் திரைப்படத்தில், வில்லன் என்று எவரும் கிடையாது. என்றாலும் ஹீரோயின் ,ஹீரோ மாதிரியான மெல்லிய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். இருவருக்கும் இடையில் இருக்கும் சொல்லி இருக்கிறது காதலும், அதிலிருக்கும் கண்ணியமும், மெளனமும் சோகமும் ரசிக்கத்தக்க வகையில் காட்சிகளாக விரிகிறது.

சுருட்டை முடி, களையான முகம் என்று சந்தோஷ் சோபன், ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறார், அழகான பல்வரிசையுடன் இவர் சிரிக்கும் போது அவர் முகம் முழுவதுமே சிரிக்கும் வகையில் இருக்கறது

மூக்கைச் சுருக்கி, தலையைச் சற்று உயர்த்தியபடி மானஷா சிரிப்பது அவரின் மேனரிசம். மிக இயல்பான தோற்றத்தில் கவருகிறார்.

இருவரும் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சி இருக்கிறார்கள். யோகி பாபு, கலகலப்புக்கும் கதையின் முக்கியமான திருப்பத்துக்கும் உதவுகிறார் ,

ஸ்ரீ ரஞ்சனி நாயகியின் அம்மாவாக வந்து குணச்சித்திர நடிப்பில் நம்மை கவருகிறார்.

கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்

அஸ்வின் சந்திரசேகர். மென்மையான ஒரு காதல் கதையை ஃபீல் குட் கதையாக சொன்ன விதத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். நாயகியின் நடிப்பும் அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு நாயகன் கதறிஅழும் நடிப்பும் இயக்குனரின் கைவண்ணத்தால் மெருகேற்ற பட்டு இருக்கிறது. இயக்குனர் கே பாலச்சந்தரின் “டச் “இந்த இயக்குனரின் இயக்கத்தில் தெரிகிறது.

போகிற போக்கில் ஜாதிக்கு எதிராகவும் சாட்டையை எடுத்து சுழற்றி இருக்கிறார்.

படத்தின் பாடல்கள், மற்றும் இசை ,ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு கேரளா அழகையும் ,சென்னை அழகையும், அழகாக காட்டப்பட்டிருக்கிறது

Produced by: UV Concepts – Ajay Kumar Raju.P
Presented by: UV Creations
DOP: Dinesh Purushothaman
Editor: Ganesh Siva
Music composed and programmed by: Aditya Ravindran
Vocals and harmonies performed by: Pratika Gopinath and Aditya Ravindran
Song Mixing: Nitin Muralikrishna
Art Director: Michael BFA
Costume Designer: Dinesh Manoharan
Publicity Designer: Gopi Prasannaa
DI Colorist

என, இந்த படத்தின் வெற்றிக்கு நடிகர், நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும், கடுமையாக உழைத்து இருக்கிறார்கள்.

அனைவருக்கும் இது ஒரு வெற்றி படமாக அமைந்தது என்று சொல்லலாம்.

மக்கள் தொடர்பாளர் சதீஷ்குமார் S 2 மீடியா