உயிருள்ளவரை உஷா ( Lifelong  with Usha ) “திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

1983 ஆம் ஆண்டு வெளியான காதல் அதிரடித் திரைப்படம் உயிருள்ள வரை உஷா”அப்போதே இந்த படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்த படம் இந்த படம் தெலுங்கிலும் இரண்டு வருடம் ஓடி வசூலை அள்ளியது

பிப்ரவரி 13, 2026-ல் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

சகல கலா வல்லவர் டி.ஆர் அவர்கள் உடன், சரிதா, கங்கா, நளினி, ராதாரவி மற்றும் கவுண்டமணி எஸ் . எஸ்.சந்திரன் .வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த காட்சிகள், தனித்துவமான முறையில் படமாக்கப்பட்டு உள்ளது.

இசை மற்றும் வசனங்கள் அதிகம். இந்த படம் TR இன் aesthetic sense மற்றும் சிறந்த எடிட்டிங்கிற்காக பாராட்ட படுகிறது. ரசிகர்களால் “5 ஸ்டார்” படமாக வரவேற்பு கொடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கதை.இன்றும்ரசிக்க வைக்கிறது.

இசை & இயக்கம்: TR இயக்கத்தில் பாடல்களும், திரைக்கதையும் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

T.ராஜேந்தர்

தமிழ் சினிமாவில் இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். இன்றைய ஜென் சி தலைமுறையினருக்கு இவரை சிம்புவின் தந்தையாக தான் தெரியும். ஆனால் 1980-களில் தமிழ் சினிமாவில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தன. ஒரு தலை ராகம் படம் மூலம் இவரின் திரைப்பயணம் ஆரம்பமானது. அடுக்கு மொழியில் வசனம் பேசி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு தனித்துவமான ஹீரோவாக இடம்பிடித்தார் டி.ஆர். இவர் இயக்கிய உயிருள்ளவரை உஷா திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பின் தற்போது ரீ-ரிலீஸ் ஆகிறது.

இன்றைய புதிய படங்களுக்கு சவால் விடும் வகையில் படம் படமாக்கி இருக்கிறார்

இதில் செயின் ஜெயபாலாக டிஆர் நடித்திருந்தார். இப்படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி, அதற்கு இசையமைத்ததும் டி.ராஜேந்தர் தான். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
ராணிகாந்த் நாகைச்சோமன்
ஒளிப்பதிவு அருமை
தேவன் ,
படத்தொகுப்பு
கச்சிதமாக இருக்கிறது .

நடிகர், நடிகையர்

டி. ராஜேந்தர் – செயின் ஜெயபால்
சரிதா
கங்கா
நளினி
ராதாரவி
வெண்ணிற ஆடை மூர்த்தி
மனோகர்
கவுண்டமணி
எஸ். எஸ். சந்திரன்
செல்வராஜ்
உசிலைமணி
காந்திமதி
சாவித்ரி
கலைச்செல்வி
சந்தரா ஆகியோர்
தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்

“அடி என்னடி”பாடலை மலேசியா வாசுதேவன்
பாடி பரவசபடுத்தியிருந்தார்.

“உன்னத்தானே பாடலை “ஜானகி
அவர்கள் பாடி இளைஞர்களுக்கு கிளுகிளுப்பு பூட்டிஇருந்தார்.
நளினியின் நவரச நடிப்பும், இந்த பாடலை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்க்கும்படி படம் ஆக்கி இருந்தார்
இயக்குனர்.

“மோகம் வந்து” பாடலை
எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
இருவரும் பாடி அந்த பாடலுக்கு நாயகனும், நாயகியும் தொடாமல் நடித்து காட்சிகளை கண்ணியப்படுத்தியிருந்தார்கள்.

“இந்திரலோகத்து சுந்தரி இராத்திரி”
என்ற பாடலை
எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. எஸ். சசிரேகா
பாடி இருந்தார்கள் படத்தில் இந்தப் பாட்டு மிகவும் கிளாசிக்காக பரதநாட்டிய மங்கையாக நாயகி நளினி நடனமாட, நாயகன் கங்கா அபிநயம் காட்டி ஆச்சரியத்தில் ரசிகர்கள் விழிகளை வியக்க வைத்தார்கள்.

“கட் அடிப்போம்”
என்ற பாடலை
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடி ரசிகர்களை விசில் அடிக்க வைத்து ஆட்டம் போட வைத்தார்.

“வைகைக்கரை காற்றே நில்லு”
என்ற அற்புதமான பாடலை
கே. ஜே. யேசுதாஸ்
அவர்கள் பாடி பரவசபடுத்தியிருந்தார்.
ஒளிப்பதிவாளர் அவர் பங்குக்கு அருமையாக காட்சிகளை படமாக்கி படத்தில் மிகப் பெரிய ஹைலைட் இப்பாடலாக அமைந்தது .
இந்த பாடல்
அடுத்து
“இதயமதை கோவில் என்றேன்”
என்ற அற்புதமான பாடலை
கம்பீரமாக, உருக்கமாக
டி. எம். சௌந்தரராஜன் பாட, மெய் மறந்து ரசிகர்கள் கண்டுகளித்தார்கள்.

இப்படி ,படத்தில் எல்லா பாடல்களும் தேன் அமுதாக, கற்கண்டாக இனித்தது. காலத்துக்கும் அழியாத இனிய இசையை வழங்கி இருந்தார். இசையமைப்பாளர் டி ராஜேந்தர் அவர்கள்.

சண்டைக் காட்சிகளில் பறந்து பறந்து, அவர் போடும் ஸ்டைலான சண்டை, செயினை கைகளில் சுற்றிக் கொண்டே நல்லதுக்கு மட்டும் இந்த செயின் ஜெயபால் குரல் கொடுப்பான். என்று நளினமான நடிப்பில் நம்மை பரவசப்படுத்தி இருந்தார்.

நாயகி நளினி, உஷாவாக, கல்லூரி பெண்ணாக அம்சமாக வந்து அனைவர் மனதிலும் இடம் பிடித்திருந்தார்.

சரிதா நளினியின் அக்காவாக வந்து, “வாழாவெட்டியாக இருந்தால் தப்பில்லை” ஆனால் வப்பாட்டியாக இருப்பதால் தப்பு” என்று உஷாவின் காதலுக்கு, ஊக்கம் தரும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

ராதாரவி” முத்து என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக வந்து சிங்கமாக கர்ஜித்து, ஜெயின் ஜெய்பாலுடன் மோதும் , போதும் சரி அம்சமாக நடித்திருந்தார்.

கவுண்டமணியும், எஸ் எஸ் சந்திரனும், இடிச்சுப்புலி செல்வராஜ் ,ராதாரவி யின் கையாட்களாக வந்து கலகலப்பை ஊட்டியிருந்தார்கள்.

வெண்ணிறாடை மூர்த்தி, கல்லூரியில் பேராசிரியராக வந்து கலகலப்பை ஊட்டியிருந்தார்.

நாயகன் கங்கா, காதலுக்காக ஏங்கும் கதாபாத்திரத்திலும், ரொமான்ஸ் காட்சிகளிலும், சண்டை காட்சிகளில், அடி வாங்கும் இடத்திலும், அப்பாவியாக அம்சமாக பொருந்தி இருந்தார்.

காந்திமதி, நாயகன் அத்தையாக, நவரசமான நடிப்பை வழங்கியிருந்தார்.

இயக்குனர் டி. ராஜேந்தர் அவர்கள்
ஒரு அற்புதமான காதல் கதையை, எதார்த்தம் மீறாமல், லாஜிக் மீறல் இல்லாமல் ,அன்றும், இன்றும், என்றும் ரசிக்கும் படியாக கொடுத்திருந்தார்.

கல்லூரியில் படிக்கும் கங்காவும், உஷாவும், அடிக்கடி மோதிக் கொள்வதும். தன்னை ஒருதலையாக காதலிக்கும் கங்கா மீது, உஷா பிரின்ஸ்பல் இடம், காதல் கடிதம் கொடுத்து மாட்ட வைப்பதும், அதன் பிறகு கங்காவை சஸ்பெண்ட் செய்வதும் ,பிறகு இருவரும் இணைவதும், அதற்கு ராதாரவி எதிர்ப்பு தெரிவிப்பது, காதலர்களை சேர்த்து வைக்க செயின் ஜெய்பால்
டி. ஆர் அவர்கள் சவால் விடுவதும், படத்தில் விறுவிறுப்புக்கு, பஞ்சம் இல்லாமல் கொண்டு சென்றிருந்தார் இயக்குனர்.

திரைக்கதை ,சீராக இருந்தது. வசனம் ரசிக்கும்படி இருந்தது. பாடல்கள் தித்திக்கும் படி இருந்தது. ஒப்பனை கச்சிதமாக இருந்தது. அரங்க அமைப்புகள் பாராட்டும்படி இருந்தது. ஸ்டண்ட் இயக்குனர் நன்றாக வேலை வாங்கி இருந்தார். நடன மாஸ்டர் நடன காட்சிகளுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்திருந்தார். இப்படி எல்லா வகையிலும் சிறப்பாக வந்திருந்த இந்த படம் இப்பொழுது இந்த ரீ ரீலீஸீலும் கலக்கும் என்பது உறுதி .

வெற்றி பட்டியலில் உயிருள்ளவரை உஷா”🌷