இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இன அழிப்பை’ திரையில் தத்ரூபமாக காட்டும் “பேர்ல் இன் தி பிளட்”

இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இன அழிப்பை’ திரையில் தத்ரூபமாக காட்டும் “பேர்ல் இன் தி பிளட்” (PEARL IN THE BLOOD) படத்தின் அறிமுக விழா, படம் திரையிட்டு நடத்தப்பட்டது!

டாக்டர் காந்தராஜ், இயக்குனர்கள் பேரரசு, கென் கந்தையா, இ.வி.கணேஷ் பாபு, எழுத்தாளர் ஈஸ்வரன், நடிகர்கள் சம்பத் ராம், ஜெய சூர்யா, போண்டா மணி, ஆதேஷ் பாலா, ஜெய பாலன், சுலோச்சனா ஈவென்ட ஜனார்த்தனன், ஒளிப்பதிவாளர் சதீஷ், எடிட்டர் கணேஷ், ஆகியோர் கலந்துக் கொண்டு, இலங்கை தமிழர்களின் நிலை குறித்து, சிறப்புரை ஆற்றினார்கள்!

நிகழ்ச்சியை நந்தினி தொகுத்து வழங்கினார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

அடுத்த மாதம் பிரபல ஓடிடி தளத்தில், உலகத் தமிழர்கள் பார்வைக்கு வருகிறது. ஒடிடியில் வெளியிடும் தேதியை, இயக்குனர் கென் கந்தையா விரைவில் அறிவிக்க உன்னார்!

நெஞ்சம் பத பதக்க வைக்கும் காட்சிகள் ஏராளம். சிங்களர்கள் போட்ட வெறியாட்டம் இந்த படத்தில் காணும் பொழுது எல்லோருக்குமே ஒரு பரிதாபம் ஏற்படும் நிச்சயம் இது உலகத் தமிழர்களின் பார்வைக்கப்படும் இயக்குனர் பேரரசு பேசும்போது இன்று ஈழத் தமிழர்கள் அனைவரும் வெளிநாட்டில் தங்கள் உழைப்பின் மூலம் உயர்ந்துள்ளனர் ஆனால் தமிழர்களுக்கு கேடு விளைத்தவர்கள் இன்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் இது ஒரு சாபம் என்று பேசினார் இப்படம் நிச்சயம் உலகத் தமிழ் மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் ஆனால் இப்படி ஒரு சம்பவம் இது எந்த மண்ணிலும் எந்த பெண்ணுக்கும் நடத்தக்கூடாது என்பதே நாம் வேண்டுகோள் வைப்பது போண்டாமணி அவர்கள் பேசும்போது தன் தாய் அண்ணன் தம்பி என உறவுகளோடு படகில் வந்தேன் கொத்தோடு குண்டு போட்டு என் குடும்பத்தையே செய்து விட்டார்கள் ராஜயோகம் என்ற அந்த படகு இன்னும் ராமேஸ்வரத்தில் இருக்கிறது இன்னும் என் தாயை அங்கு போய் தேடி அழுது விட்டு வருவேன் என்று கண்ணீர் மல்க பேசினார் கேட்பவர்களுக்கு நெஞ்சம் உருகியது இந்த விழாவிற்கு வந்த அனைவருமே கனத்தை இதயத்தோடு சென்றனர்.