இரண்டு சகோதரிகள், ஒரு கவித்துவமான காதல், உடன் தெருக்கூத்து என 80-களில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள படம் “ஆர்ய மாலா*
படத்தின் தயாரிப்பாளர்
வடலூர் J சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் தயாரிப்பில் ஜனா ஜாய் மூவீஸ் மற்றும் குழுவின் சார்பில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய போராட்டங்களையும் பல பேரின் துரோகங்களையும் தாண்டி ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை வெளிக்கொண்டு வந்திருக்கும்
சுதா ராஜலட்சுமி அவர்களை முதலில் பாராட்டுவோம். அவருக்கு உறுதுணையாக இருந்த ஜேம்ஸ் யுவன் ,அவரையும் பாராட்டிவிட்டு இந்த விமர்சனத்திற்குள் போவோம் …..
‘பீச்சாங்கை’ புகழ் ஆர்.எஸ்.கார்த்தி கதாநாயகனாக
நடிக்க, கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். மற்றும் ஜேம்ஸ் யுவன், மறைந்த நடிகர்கள் மாரிமுத்து, தவசி, உஷா எலிசபெத், சிவசங்கர் மாஸ்டர், மணிமேகலை, மற்றும் கூத்து கட்டும் கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்
நாயகி மனிஷா ஜித்
எண்பதுகளில் நடக்கும் விதமாக தெருக்கூத்து கலையை மையப்படுத்தி அதன் ஊடாக ஒரு அழகான காதல் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. ஆர்யமாலா-காத்தவராயன் என்கிற புராண நாடகத்தை பின்னணியாக கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.என்றாலும் பெண்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய பிரச்சனையை இந்த படம் சொல்லி இருக்கிறது
கதாநாயகி (மலர்)என்கிற கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மனிஷா ஜித். இவர் சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் அவரது மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
அழகான நடிகையாக வலம் வரும் மனிஷா நன்றாக நடிக்கிறார் தான் பெரிய மனுசி ஆக முடியவில்லை என்று ஏங்கும் பொழுதும் தன்னால் அம்மா ஊரார் ஏச்சிக்கும் பேச்சுக்கும், ஆளாகிறார் என்று பொங்கும் போதும் அய்யனார் சாமி இடம் சென்று கெஞ்சும் போதும், தான் காதலித்த வனை விரட்டி அடிக்கும் போதும், மருத்துவர் கொடுத்த அந்த மருந்தால் 48 நாளில் பூ பெய்து விடுவோம் என்று குழந்தை போல் சுவற்றில் கோடு போட்டு காத்திருக்கும் போதும் ,தன் தங்கை நன்றாக வாழ வேண்டும் என்று சாமியிடம் வேண்டும் போதும், மனிஷாவின் நடிப்பு மேலும் மேலும் உயரம் தொடுகிறது .
பீச்சாங்கை புகழ் கார்த்தி
பீச்சாங்கை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆர்.எஸ்.கார்த்திக் இந்தப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கண்ணியமான காதல் காட்சிகள் என கண்கள் மூலம் பேசும் காதல் கவிதை பேசுகிறார்.
மனிஷா கனவில் வரும் அரசாங்க வேலை கிடைத்த அந்த கதாபாத்திரம் மற்றும் தெருக்கூத்துவில் வரும் அந்த கதாபாத்திரமும் இரண்டும் வேறுபட்டு காட்டி இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில், தன் காதலிக்காக, தன் உயிரை கொடுக்கும் அந்த உன்னதமான கதா பாத்திரம் மனதில் நிற்கிறது.
காத்தவராயன் வேஷம் போடும் தெருக்கூத்து கலைஞனாக இதில் நடித்துள்ளார்
அவர் பேசும் வசன உச்சரிப்பு தாயிடம், காதலிக்காக பரிந்து பேசுவது, கூத்து மேடையில் இருக்கும் பொழுது மனிஷா ஜித் தை காதலிப்பது என இவர் நடிப்பில் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறார் தான் உயிருக்கு உயிராய் காதலித்த மனிஷா அவரை அஞ்சுக்கும் பத்துக்கும் வேஷம் போடும் நீ வந்து எனக்கு தகுதியானவனா? என்று கேட்கும் பொழுது அப்போதே இறந்து போய் விடுகிறார். அப்படிப்பட்ட ஒரு நடிப்பை வழங்கி இருக்கிறார்
படத்திற்காக பணியாற்ற வந்த தெருக்கூத்து கலைஞர்களிடம் அவர்களுடைய நடை உடை பாவனைகள் குறித்து கொஞ்சம் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார் என்பது தெரிகிறது தன்னுடைய காதலி மனிஷா ஜித் அவருடைய பார்வையால் மயங்கி தவித்து ,காதல் தான் முக்கியம் என்று அவருக்காக உருகி, கூத்து கட்டும் இடத்தில் மனிஷா ஜித் தை பார்த்து கண்களால் காதல் செய்து அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆர்ய மாலா கதை என்ன?
கடலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை அக்கா மலர்விழி (மனிஷா ஜித்/ தங்கை கயல் இவர்கள் இருவரும் ஒரு தாய்க்கு பிறந்தவர்கள் என்றாலும் அப்பாக்கள் வேறு. ஆனால் கயல் 15 வயதிலேயே பூப்பெய்தி பெரிய மனுஷி ஆகிவிடுகிறார் இதற்கு முன்பு பிறந்த மலர் பூப்பெய்தல் காலம் தாழ்த்தி வருகிறார் கிராமத்து பெருசுகள் மலரை பார்த்து தேவையில்லாத விஷயங்களை பேசுகிறார்கள்
கயல் பூப்பெய்தி விட்ட விஷயத்தை கேட்டு அவரது தாய் மாமன் மாரிமுத்துவும், அவரது மகன் ,அவரது மனைவி ,மற்றும் சகாக்களுடன் வந்து என் மகனுக்கு கயலை திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார் அதற்கு எலிசபெத் என்னுடைய மூத்த மகள் இருக்கும் போது இளைய மகளை திருமணம் செய்து தர மாட்டேன் என்கிறார் எலிசபெத்
அண்ணன் ஜேம்ஸ் மாரிமுத்துவை அடித்து விரட்டுகிறார்
மலர் ஒரு கனவு காண்கிறார் அந்த கனவில் அவர் பூப்பெய்தி விட்ட தாகவும் கார்த்தி அவர் கனவில் காண்கிறார் கனவில் இருவரும் காதலிக்கிறார்கள் அந்த காதல் நிறைவேறியதா?
மலர் பூப்பெய்தினாரா? அய்யனார் அவருக்கு உதவி செய்தாரா? மாரிமுத்து அந்த இளம் ஜோடிகளை வாழ விட்டாரா? என்பது தான் கதை
இடைவேளை படம் ரெக்க கட்டி போகிறது இன்னொரு பாரதிராஜாவின் படம் போல அவ்வளவு இயல்பாக இருக்கிறது கிராமத்து மனிதர்கள், காதல் ஜோடிகள், என படம் அவ்வளவு சுவராசியமாக இருக்கிறது
இடைவேளைக்கு பிறகு படம் வேறு ஒரு திசையில் பயணிக்கிறது காத்தவராயன், ஆரியமாலா, இவர்களைப் பற்றியும் கூத்து கட்டும் கலைஞர்கள் அந்த கிராமத்தில் வந்து ஏழு நாட்கள் கூத்து நடத்துகிறார்கள் மலர் கண்ட அந்த கனவு கலைந்து கூத்துப்பட்டறையில் இருக்கும் ஆர்.எஸ் .கார்த்தி கண் முன் நிற்கிறார் இப்பொழுது அதிர்ச்சி அடைகிறார் மலர்
இனி அடுத்து என்ன நடக்கும் என்பதை படம் சுவாரசியமாக கொண்டு போகிறது. கிராமங்களில் ஒரு பெண் வயசுக்கு வராவிட்டால் அவள் படும் துன்பம் சொல்லி மாளாது! கல்யாண வீட்டில், காது குத்து வீட்டில், அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லோரும் எப்படி கேலி செய்வார்கள்! என்பதை இந்த படம் அற்புதமாக சொல்கிறது.
அதேபோல கூத்து கட்டும் கலைஞர்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லல் படுகிறார்கள். அவர்கள் மேல் சாதி பெண்ணை காதலித்தால் அந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? நாடக காதல் என்று ஒரு இனத்தையே கேலி செய்து கொண்டிருக்கும் சில அறிவு ஜீவிகள் உண்மையான இந்த நாடக காதல் ஜோடிகளை வாழ விடுவார்களா? இப்படி சிந்தனையில் கொண்டு போய் இருக்கிறார் கதை ஆசிரியர்
சேரவே முடியாத இந்த காதல் ஜோடிகளை கடைசியில் சேர்த்து வைத்திருக்கலாமே
என்று நினைக்கிறது நம் மனசு
(இப்படி வைத்து கொள்வோம்)
நாயகி என் உடம்பில் பிரச்சினை இருக்கிறது என்று நாயகனிடம் சொல்கிறார். அதற்கு நாயகன் நான் உன் உள்ளத்தை தான் விரும்புகிறேன். நீ என்னோடு வா நாம் சேர்ந்து வாழலாம்
என் உயிர் உள்ள வரை நீ எப்படி இருந்தாலும் கடைசி வரை உன்னை காப்பாற்றுவேன் என்கிறார்
உறவுகளை துறந்து
அன்று இரவு இருவரும் அந்த ஊரை விட்டு ஓடுவது போல் அமைத்திருந்தால் பாஸிடிவாக இருந்திருக்கும். இந்த நாடகக் காதலும் ஜெயித்திருக்கும். சேரவே முடியாத அந்த காதல் ஜோடிகள் சேர்ந்து வாழ்வது தானே சிறப்பு
பரவாயில்லை இந்த கிளைமாக்ஸ் காலம் காலமாக சினிமாவில் சொல்லப்பட்டு வரும் கிளைமாக்ஸ் காட்சி என்றாலும் மனதை தொடுகிறது!
அந்த அய்யனார் எல்லா கொடுமைகளையும் பார்த்துக் கொண்டு சிலையாகவே நிற்பது ஏனோ?
எலிசபெத் நடிப்பு சூப்பர்
கோமதி என்ற கதாபாத்திரத்தில் ஒரு கிராமத்தில் அம்மா எப்படி இருப்பாரோ அப்படி பாந்தமாக இருக்கிறார் எலிசபெத். தன் மகள் (மலர்) பூப்பெய்தல் தாமதமாக போது கலங்கும் போதும், இளைய மகள் (கயல்) வயசுக்கு வந்து விட்டார் என்று சந்தோசப்படும் போதும், எப்படியாவது தன் மூத்த மகள் வயதுக்கு வந்து தன்னையும் தன் குடும்பத்தையும் இந்த ஊரையும் சந்தோசப்படுத்தி விட மாட்டாரா ? என்று ஏங்கும் அந்த கதாபாத்திரம் அற்புதமாக இருக்கிறது நன்றாக நடித்திருக்கிறார் .இனி நிறைய படங்களில் அவரை பாராட்டலாம்
தாய் மாமனாக ஜேம்ஸ்
படம் உருவாவதற்கு பக்க பலமாக இருந்து படத்தை முடித்து கொடுத்து படத்தில் மலர் கதாபாத்திரத்திற்கு மாமனாக ,வந்து ஆடிப்பாடி அசத்தி இருக்கிறார் ஜேம்ஸ் நல்ல கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது இளம் வயது ரஜினி போல் நல்ல தோற்றம் அவரை பார்க்கும் போதெல்லாம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி ஏற்படுகிறது
கிராமத்து உறவுகளில் தாய்மாமன் என்பது எப்பொழுதுமே பாசம் நேசமும் மிகுந்ததாக இருக்கும் அப்படி ஒரு கதாபாத்திரம் படம் முழுக்க வந்து மலருக்கும் அவரின் அம்மாவுக்கும் உறுதுணையாக இருந்து மலர் பெரிய மனுஷியாவதற்கு வைத்தியரை நாடி சென்று மருந்து வாங்கி தந்த அந்த குடும்பத்திற்காக உழைக்கும் நல்ல கதாபாத்திரம் இவர் இனி நிறைய படங்களில் நடிக்கலாம் நல்ல நடிகராக அவருக்கு வாழ்த்துக்கள்
அந்த கரகாட்டக்காரி உடன் அவர் போடும் குத்தாட்டம் ரசிக்க வைக்கிறது கருப்பாக இருந்தாலும் பொறுப்பாக படத்தில் நடித்து பெயரை தட்டிச் செல்கிறார்
மாரி முத்து வில்லனாக மிரட்டினாரா
வில்லனாக வருகிறார் மாரிமுத்து அவர் இறந்துவிட்டாலும் அவருடைய நடிப்பு சாகவில்லை தன் மகனுக்கு (கயல் )தான் மனைவியாக வரவேண்டும் என்று (மலர்) என்ற கதாபாத்திரத்தை வெறுக்கும் அந்த குணாதிசயம் அவர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்
சிவசங்கர் மாஸ்டர்
கூத்து கலைஞர்களுக்கு வாத்யாராக வருகிறார். ஆர் .எஸ் .கார்த்தி தடுமாறும் பொழுது அவரை எச்சரிக்கிறார் அவருடைய அர்ப்பணிப்பு கூத்துக்காக அவர் காட்டும் அந்த ஈடுபாடும் அவர் கதாபாத்திரத்தின் மேல் அனுதாபம் கொள்ள வைக்கிறது ஆரியமாலா, காத்தவராயன் ,அந்த இரண்டு கதாபாத்திரங்களை அற்புதமாக வடிவமைக்கும் கூத்து கலைஞனாக சிவசங்கர் மாஸ்டர் நடித்திருக்கிறார் சிறப்பாக இருக்கிறது
மற்றும் படத்தில் ஊர் பெரியவராக வரும் தவசி, கரகாட்ட கன்னிகளை பார்த்து நாக்கை கடித்துக் கொண்டு குஷி மனிதராக அந்த ஊர் பெரியவர் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார் அந்த ஊர் பெண்களும் ,கூத்துக் கலைஞர்களும், தங்கள் நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள் .
மனிஷா ஜித் பாட்டி அடிக்கடி சொல்லும் கிராமத்து பழமொழி ரசிக்க வைக்கிறது சிரிக்க வைக்கிறது
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்
ஜெய்சங்கரின்
ஒளிப்பதிவு அருமை குளுமையாக இருக்கிறது கிராமத்து மனிதர்களை காட்சிப்படுத்தி, மற்றும் பசுமையான காட்சிகளை காட்டி, நாயகனின் தெருக்கூத்து கலைஞர்கள் வாழ்வியலை படம் பிடித்து காட்டியிருக்கிறார்
இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்
செல்வநம்பியின் , இசையமைப்பு ரசிக்க வைக்கிறது பாடல்கள் இசை ஞானி இளையராஜா பாடல்களை கேட்பது போல் இருந்தது ஆரம்பத்தில் வரும் கயல், ஆடிப்பாடும் அந்த பாடலும் மலர், ஆடிப்பாடும் பவதாரணி பாடலும் மற்றும் நாயகன்,நாயகி இருவருக்கும் காதல் உருவாகும் பொழுது வரும் அந்த பின்னணி பாடலும் செம்மையாக ரசிக்க வைத்தது சமீபத்தில் வந்த இசையும் அமைப்பாளர்களில் செல்வநம்பி நல்ல இசை அமைத்துள்ளாராக
ஒரு இனிமையான இசையை கொடுத்திருக்கிறார் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். செல்வ நம்பிக்கு சிறப்பான எதிர் காலம் காத்திருக்கிறது
படத்தொகுப்பு ; ஹரிஹரன்
படத்தொகுப்பு படத்திற்கு சீராக வந்துள்ளது தேவையில்லாத காட்சிகள் எதுவும் இன்றி படத்தை நன்றாக எடிட் செய்திருக்கிறார்
சிவயோகா
இவரின் அரங்க அமைப்புகள் மலர், வீடு மற்றும் தெருக்கூத்து அரங்கம், அய்யனார் சிலை, என இவரின் கைவண்ணம் பாராட்டத்தக்கது
ஸ்டண்ட் ; மிரட்டல் செல்வா
கிளைமாக்ஸ் காட்சியில் விறுவிறுப்பாக சன்டை பயிற்சி கொடுத்து இருக்கிறார்
நடனம் ;
சின்னஞ்சிறு வர்களுடன் கயல்ஆடிபாடும் காட்சிகள் நடனம் ரசிக்க வைக்கிறது
மலர் பாடும் பாடல் அத்திபூவே, பாடலுக்கு நடனம் நன்றாக இருக்கிறது
ஆனால் கூத்து கட்டிநடிக்கும் பொழுது அவர்கள் ஆடும் அந்த ஆட்டம் மிஸ் ஆகிவிட்டது ஏனோ அதை அவர்கள் கவனிக்கவில்லையா?
ஸ்டாலின்; சாவிஸ் S ஆடை வடிவமைப்பாளர் ஆக பணி புரிந்து இருக்கிறார் மனிஷா ஜித்தை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அப்படி காட்டியிருக்கிறார் கிராமத்து பெண்களின் இயல்பான உடைத்தோற்றத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் ஆடை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது தெருக்கூத்து கலைஞர்கள் அணியும் ஆடை அமைப்பு நன்றாக இருக்கிறது
வேஷம் கட்டி முடித்ததும் அடுத்து நாள் காலையில் என்ன உடையில் இருப்பார் களோ அதை கண் முன்னே காட்டி இருக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர்
டிசைனராக செல்வா சிறப்பாக பணியாற்றி இருக்கிறார் வாழ்த்துக்கள்
மக்கள் தொடர்பு ; KSK செல்வா பணியாற்றியிருக்கிறார்
மக்களிடம் படத்தை கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
ஆக்ஷன் ரியாக்ஷன் படத்தை வெளியிடுகிறார் சிறப்பாக வெளியிடும் ஜெனீஷ் அவருக்கு வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இந்த ஆரியமாலா கிராமத்து கண்ணியமான காதலை சொல்லி இருக்கிறது .
கிராமத்தில் உரிய வயதில் பெண்கள் பெரிய மனுசியாக ஆகா விட்டாள்
அவர்கள் படும் வேதனையையும், துன்பத்தையும், வலியையும் ,சொல்லி இருக்கிறது
கூத்து கட்டும் கலைஞன் அவன் விருப்பப்பட்ட காதலியை அடையவிருக்கும் அந்த தடையை சொல்லி இருக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் வேஷம் போடும் ஒருவன் தான் விரும்பிய பெண்ணை அடைய தடையாய் இருக்கும் இந்த சமூக பேதங்களை சொல்லியிருக்கிறது
கிராமங்களில் ஒரு விசேஷம் நடக்கும் பொழுது உறவுகள் எப்படி பிரச்சனை செய்து நிம்மதியை கெடுக்கிறார்கள் என்கிற அந்த சித்தாந்தத்தையும் படம் சொல்லி இருக்கிறது
இடைவேளை வரை இயக்குனர் பாரதிராஜா படம் போலவும்
இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் பாலா படம் போடவும் இருந்தது என்று சொன்னால் மிகையாகாது
இது போன்ற தரமான படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றி அடையும் பொழுது தமிழ் சினிமா மேலும் உயரும் இந்த படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்பதே கிளாசிக் சினிமாவில் விருப்பம்
