மைலாஞ்சி”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கியிருந்தார். தற்போது ‘மைலாஞ்சி’ திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இரு உள்ளங்களின் காதல் உணர்வை அழகாக அம்சமாக சொல்லியிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும், இசையும், படத்தை கம்பீரமாக தூக்கி நிறுத்துகிறது. தெளிவான திரைக்கதை, அற்புதமாக இருக்கிறது.

கதை களம்

மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

போட்டோகிராபரான சூர்யா, இயற்கை சூழ்ந்த போட்டோக்களை எடுக்கவும் பறவை இனங்களில், அபூர்வ பறவைகளை படம் பிடிப்பதற்காகவும் மலை பிரதேசத்துக்கு வருகிறார்.

சென்னையில் இருந்து வந்தவர் தன் மாமன் வீட்டில் தங்குகிறார்.

நாயகி சா ரு தன் தோழன் ஜூட் உடன் கலகலப்பாக சுற்றித் திரிகிறார். அவரது சித்தி சாருவுக்கு குடிகார மைக்கேலை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். அதில் இருந்து தப்பிப்பதற்காக கதிரவனை காதலிக்கிறார்.

அந்த காதல் நிறைவேறாமல் போகிறது கதிர் என்கிற கதிரவன் சென்னைக்கு மாற்றல் ஆகிறார்.

அதன் பிறகு அங்கு வந்த சாருவும், சூர்யாவும்
ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் ஆனால் தங்களுக்குள், அதை மறைத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதைக்களம். அடுத்து என்ன நடக்கும் என்ற பாணியில் இடைவேளைக்குப் பிறகு படம் வேகமாக நகருகிறது.

காட்சிகள் ஒவ்வொன்றும் ஒளிப்பதிவாளர் செழியனின், பாலுமகேந்திரா அவர்களின் கைவண்ணத்தில் உருவானது போல இருக்கிறது படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர் தான்.

இள மனங்கள் ஒன்று சேர தடையாக இருக்கும் முயற்சிகளை, வென்று காட்டினார்களா? என்பது தான் கதைக்களம்.

‘கன்னிமாடம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மென்மையான போட்டோகிராபராக நாயகியை, ஒரு தலையாக காதலித்து, அவருக்காக உருகி தன்னையே தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தி ருக்கிறார்.

சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருதை ஸ்ரீராம் கார்த்திக் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கோலிசோடா 2’ புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் துருதுருவென சாரு, என்ற கதாபாத்திரத்தில் நாயகனை மட்டுமல்ல நம்மையும் கவர்ந்து விடுகிறார்.

தன் மாமன் மைக்கேல் இடம் இருந்து தப்பிப்பதற்காக கதிரவனை காதலிப்பது, கதிரவன் சென்னை சென்ற பிறகு தனக்கு உதவும் நாயகனிடம் தன்னை பறிகொடுப்பது, என ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

சிலநடிகைகள் மிக அழகாக இருப்பார்கள். ஆனால், நடிப்பு சுமாராகத்தான் வரும். சிலர் அற்புதமான நடிகைகளாக இருப்பார்கள். ஆனால், தோற்றம் சுமாராகத்தான் இருக்கும். ஆனால் அழகு + திறமை ஆகிய இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற பிரத்யேகமான நடிகைகளுள் கிரூஷ் குரூப் முக்கியமானவர்.

முனீஷ்காந்த்,

எத்திராஜ், என்ற கதாபாத்திரத்தில் நாயகனின் மாமனாக வந்து நகைச்சுவையாக நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். .

சிங்கம்புலி

குலாம் அலி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் இவர்
வரும் இடங்களில் நல்ல கலகலப்பு

இசை அமைப்பாளர் இளைய ராஜா

இப்படத்தில் நான்கு பாடல்களையும் இளையராஜாவே எழுதி இசையமைத்துள்ளார்.

பாடல்கள் மெலோடி ஆக காட்சிகளை ஏற்றவாறு ரசிக்க வைக்கிறது இசை இந்த படத்தின் மிகப்பெரிய பலம் டிரண்ட் மியூசிக். இப்படத்தின் பாடல்களை வெளியிடுகிறது

இயக்குனர் அஜயன் பாலா

காதல்’ படம் காதலைப் பற்றியது மட்டுமல்ல. காதல் என்னும் இயற்கை உணர்வு பல படங்கள் காதலுக்கு எதிரிகளாகக் கண்ணுக்குத் தெரிந்த தனிநபர்களை வில்லனாகக் காண்பித்துக்கொண்டிருந்த நிலையில், உறவுகள் என்னும் கண்களுக்குப் புலப்படாத சமூக யதார்த்தமே காதலின் முதன்மை எதிரியாக நின்று அது தோற்றுவிக்கும் படம்.

அஜயன் பாலா, இரண்டாவதாக இயக்கிய படமான இப்படம் ‘காதல்’ ஒரு படைப்பாளியாக அவருடைய முழுமையான வீரியத்தையும் தனித்தன்மையையும்

தெளிவான சமூகப் பார்வையையும் காட்டி இருக்கிறார்
தெளிவான திரைக்கதை, நறுக்கென்று வசனங்கள், காட்சி அமைப்புகளை ஒரு கவிதை போல் காட்டியது இப்படி அஜயன் பாலா ஒரு இயக்குனராக ஜெயித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு

செழியனின் ஒளிப்பதிவு, கவிதை போல ஒவ்வொரு காட்சியும் விரிகிறது.
மழை பிரதேசம், காடுகள், பறவைகள், மலர்வணங்கள், குளம் ,அழகான வீடு என எல்லா இடங்களிலும் கேமரா கவிதை பாடி இருக்கிறது.

ஸ்ரீகர் பிரசாத், படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது சிறப்பாக செதுக்கி இருக்கிறார்.

லால்குடி இளையராஜாவின் அரங்கமைப்பு அருமை.
சதீஷ், ஆடை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது
சசிகுமார், ஒப்பனையாளராக பணி புரிந்திருக்கிறார்.
காஸ்ட்யூம் டிசைனராக தாஸ்தா பிள்ளை .
தினா அண்ட் அர்ச்சனா நடன வடிவமைப்பு நன்றாக இருக்கிறது

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் இப்படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்💐

படம் இன்னும் கொஞ்சம் கிரைம், திரில்லர் ,கலந்து எடுத்திருந்தால் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கும் மொத்தத்தில் மைலாஞ்சி” மனம் கவரும் படமாக வந்துள்ளது.