மை லார்ட்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் “மை லார்ட்”

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மை லார்ட்.” நடிகர் சசிகுமார் மற்றும் சைத்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும்
படம்”மை லார்ட் “

கதை களம்

மனித நேயம் இந்தக் காலத்தில் எவ்வளவு முக்கியமான விஷயம் ,என்பதை இந்த படம் வலியுறுத்துகிறது. வள்ளலார் போதனைகளை கருத்தில் கொண்டு வாழும் நாயகன் .

யார் பள்ளத்தில் விழுந்தாலும் அவர்களை தூக்கி விட வேண்டும் என்பது அவரது லட்சியம் .

ஆனால் சென்ட்ரல் மினிஸ்டர் சுஜாதா மோகன், கொள்கை யார் பள்ளத்தில் விழுந்தாலும் ,அது ரத்த சொந்தமாக இருந்தாலும் கை கொடுத்து தூக்கி விடாதே ,நீ அந்த பள்ளத்தில் விழுந்து விடுவாய் என்பது அவரது கொள்கை.

இருவரையும் , காலம் எப்படி சந்திக்க வைக்கிறது என்ன நடக்கிறது? என்பதுதான் கதை.

கோவில்பட்டியில், ஆதரவற்ற சிறுவன் திருநாவுக்கரசர் எடுத்து வளர்க்கும் முத்து சிற்பி, அங்கேயே வாழ்ந்து பெரியவனாகிறார் அவருடைய மகள் வள்ளலார் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் வாழும் சுசிலாவை கரம் பிடிக்கிறார்.

சுசீலாவுக்கு ஒரு ரேஷன் கார்டு வாங்கி தானும் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது ஆசை !!

பல தடைகளுக்கு பின்னால் முத்துச்சிற்பி, சுசீலாவும் ஒன்றாக இணைகிறார்கள்
திருமணம் முடிந்த பிறகு, முத்து சிப்பிக்கு விழும் பெரிய இடி, மனைவி சுசிலாவின் வயிற்று வலி, அதற்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பொழுது 30 ஆயிரம் ரூபாய் செலவு என்று வருகிறது .அங்கு நரசிம்மரிடம் கந்து வட்டிக்கு வாங்கி அது குட்டி போட்ட கடனை அடைக்க வேண்டும் என்றால் முத்து சிற்பியின் கிட்னியும், மனைவி சுசிலா கிட்னியும், கொடுக்க வேண்டும் என்று புரோக்கர் அருள் சொல்கிறார் .

இது என்னடா வம்பா போச்சு என்று!! அங்கிருந்து, தப்பி திருப்பூர் செல்கின்றார்கள்.

கடன் கொடுத்த நரசிம்மன், முத்து சிற்பியும், சுசிலாவும் இறந்து விட்டார்கள் என்று அரசாங்கத்திடம் நஷ்ட ஈடு வாங்கிக் கொள்ள, அங்கிருந்து கதை ஆரம்பமாகிறது. அதற்குப் பிறகு, முத்துச்சிப்பியும்
சுசீலாவும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்று வழக்கு தொடுத்து வெற்றி பெறுகிறார்கள்.

சென்ட்ரல் மினிஸ்டர் சுஜாதா மோகன், இரண்டு கிட்னியும் இழந்து இரண்டு இழந்து வாடுகின்றார்.

அவருக்கு கிட்னி வழங்க டோனர்களாக பீகாரில் ஒருவர் கோவில்பட்டியில் வாழும் முத்து சிற்பி ஒருவர் இந்த இருவரில் பீகாரில் இருப்பவர் கடனுக்காக இரண்டு கிட்னியும், இழந்துவிட சென்ட்ரல் மினிஸ்டர் முத்து சிற்பியின் கிட்னியை நம்பி இறக்கும் தருவாயே எண்ணி வருகிறார்.

அதற்கு பிறகு முத்து சிற்பி, சென்ட்ரல் மினிஸ்டர் சுஜாதா மோகனுக்கு கிட்னி வழங்கினாரா? அவர் பிழைத்தாரா? முத்து சிற்பியின் மனைவி சுசீலா வயிற்று வலிக்காக சென்று இடத்தில் கிட்னி திருடப்பட்டதா?

நா ,கதிரவன் எந்த வகையில் உதவி செய்தார்? இப்படி எளிய மனிதர்களின் வாழ்க்கையை அருமையாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜ்மோகன்.

இப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைப் பதிவை இயக்குனர் ராஜ் முருகன் மட்டுமே படைக்க முடியும்.

நடிகர்கள் & நடிகைகள்

முத்து சிற்பி சசிகுமார்

மனிதநேயத்தை வலியுறுத்தும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அயோத்தி படத்திலிருந்து டூரிஸ்ட் ஃபேமிலியில் இருந்து இந்த படத்தில், சசிகுமார் அற்புதமான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது.

முத்து சிற்பி தன் மனைவியை காப்பாற்ற, கந்துவட்டிக்காரனிடம் மாட்டியபின்னர்
கதை வேகமாக நகர்கிறது.

தன்னுடைய கிட்னி கொடுப்பதற்காக சென்னை செல்லும் பொழுது ஜெயிலுக்குள் சென்று நரசிம்மனை மனைவி சிரிக்கும் வரை அடிப்பது. செமையா ரசிக்க வைத்தது .

எத்தனை தடவை நான் ஏமாறுவது என்று கேட்டுக் கொண்டு ஒவ்வொரு முறையும் அவர் தப்பிப்பது படத்தின் சுவராசியம் .

கிளைமாக்ஸ் காட்சியில், யாராக இருந்தாலும் மன்னித்து விட வேண்டும் பழிவாங்க கூடாது என்று வள்ளலார் போதனை அவர் கூறும் பொழுது எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் ரசிகர்கள். சசிகுமாருக்கு நந்தன், டூரிஸ்ட் பேமிலி ,அயோத்தி, மை லார்ட் ,என்று அற்புதமான படங்கள் நடித்து வருகிறார் வாழ்வியல் எதார்த்தமான கதாநாயகனாக இப்படத்தில் உயர்ந்து நிற்கிறார்

உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்போடு, காமெடி, நடனம் போன்றவற்றாலும் பலம் சேர்த்திருக்கிறார்

சுசிலா வாக சைத்ரா

கோவில்பட்டியில் வாழும் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் இருக்கும் சுசீலா கதாபாத்திரத்தில் சைத்ரா ,அற்புதமாக பொருந்தி போகிறார். வெள்ளந்தியான பேச்சும், எதார்த்தமான நடிப்பும் ,மருண்ட பார்வையும் ,தன் கணவனை பார்வையாலே கட்டுப்படுத்தும் அந்த விதமும் மிகவும் ரசிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகை ஷோபா பிறகு, அந்த இடத்தை பிடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.

குரு சோமசுந்தரம்

மக்கள் குத்து” என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தும் நா. கதிரவன் ஆக நா கா என்று படம் முழுக்க அட்டகாசமான நடிப்பில் நம்மை வியக்க வைத்திருக்கிறார்.

ஆஷா சரத்

சென்ட்ரல் மினிஸ்ட்டர் சுஜாதா மோகன்” என்ற கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார் .

தீர்க்கமான பார்வை, சென்ட்ரல் மினிஸ்டர் என்ற கம்பீரம், தன் மகள் ,மகனிடம் எந்த சூழ்நிலையிலும் பள்ளத்தில் விழுந்தவரை,
தூக்கி விடாதே என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கும் ஒரு தாயின் பாசம். இரண்டு கிட்னியை இழந்து வாடும் ஒரு நோயாளியின் பரிதாபம். இப்படி எல்லா அம்சங்களையும் கவர்ந்து நம்மை படம் பார்ப்பவர்களை ஒன்ற செய்து விடுகிறார் ஆசா சரத்

மற்றும் வள்ளலார் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் இருக்கும் பெண்களும் , வாணி அம்மாவும் புரோக்கராக வரும் அருள் ,மற்றும் கந்துவட்டி கொடுக்கும் நரசிம்மன், நீதிபதியாக வரும் ஜெயபிரகாஷ், இப்படி எல்லோரும் தங்கள் கதாபாத்திரங்கள் மூலம் இந்த படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்
தொழில் நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் ராஜ் முருகன்

இன்றைய “கிட்னி திருட்டை காட்டியதில் சமூகத்தின் பங்கு அவருக்கு இருக்கிறது என்பதை அற்புதமாக உணர்த்திருக்கிறார். எளிய மனிதர்களின் ஏழ்மையை பயன்படுத்தி, பணம் படைத்தவர்கள் கிட்னியை திருடுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறார்.
மருத்துவமனைகளில் ஏழைகளின் உயிரை புரோக்கர் மூலம் எப்படி உறிஞ்சப்படுகிறது என்பதையும் காட்டி இருக்கிறார்.

சசிகுமார் சோமசுந்தரத்துக்குமான உரையாடல்களே படத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றன.

ராஜூ முருகன் எழுதிய வசனம் பக்கபலமாக க்ளாப்ஸ் அள்ளுகிறது. செழியனின் கேமரா. பறவைப் பார்வையில் சசிகுமார் கிராமத்துக்குள் உலாவருவதைக் காண்பிப்பதிலும் ராசாதி ராசா”பாடலில் சோகம் கடத்துகிறது குறையுமிடங்களில், வசனங்கள் அந்த அலுப்பை சரிசெய்கிறது.

ஷான் ரோல்டன் இசையில், ‘ஐந்து பாடல்கள் மனதிற்கு இனிமை தருவதோடு, கதையோட்டத்திற்கும் கைகொடுத்திருக்கின்றன.

எதார்த்தமான கோணங்கள், ஃப்ரேம்கள், இயல்பான ஒளியமைப்பு, என ஆர்ப்பாட்டமில்லாத ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார்
நீரவ்ஷா.

அதற்கு கலரிஸ்ட் பங்களிப்பும் துணை புரிந்திருக்கிறது.

நிதானமான திரைமொழியோடு, உணர்வுகளைக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர்

அதற்கு கலரிஸ்ட் பங்களிப்பும் துணை புரிந்திருக்கிறது.

நிதானமான திரைமொழியோடு, உணர்வுகளைக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர்
சத்யராஜ் நடராஜன்.

முனி பவுல் ராஜ் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் அருமையாக இருக்கிறது.

Stunts : P.C. Stunts
Choreography : Sherif
Lyrics : Yugabharathi, Athipatti K. Mariyappan, Raju Murugan, Dinesh Rajendran (Rap)
Co-Director : Arunmozhi Pandian
Sound Mixing : T. Udhayakumar
Managers : D. Arumugam, Vignesh Mohan
Costumer : R. Murugan
Costume Designer : D.R.Poornima
DI : Knack Studios
Colorist : Prasath Somasekar
Stills : Suresh Durai
VFX : Sozo Studios
Poster Design : Viyaki
Olympia GM : A. Subramanian
Olympia AGM
என்று திரைக்கு முன்னாலும், திரைக்கு பின்னாலும், நிறைய தொழில்நுட்பக் கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள். படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்🌷