பூக்கி”திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பூக்கி’.

ரொமான்ஸ் காமெடி கதையாக உருவாகியுள்ள இப்படத்தை, விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

இதில், அஜய் திஷன் ஹீரோவாக நடிக்கிறார். ஜோடியாக தனுஷா நடிக்கிறார். பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெற்றி படமாக வந்திருக்கிறது பூக்கி”

கதை களம்
ஆறு வருடமாக காதலித்து வரும் அஜய் திஷன்(கைலாஷ்) தனுஷா(ஆழி)

இருவரும் மன வேற்றுமை காரணமாக பிரேக்கப்” சொல்கிறார்கள்.

ஒரு வருடம் இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும், தங்களுக்குள் இருக்கும் காதலை அவர்கள் வெறுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

நாயகன், மனவலி போவதற்காக ஜிம்முக்கு சென்று உடல்வலியை ஏற்றுகிறார்.

நாயகி காதல் வலி போவதற்காக
விகாஸ் வைப், என்னும் யோகா சென்டர் யோகா கற்றுக் கொள்ள,
இருந்தாலும் இருவரும் தங்களது காதலை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

நாயகனுக்கு பெண் பார்க்கிறார்கள் எதுவும் செட்டாகவில்லை நாயகிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் எதுவும் செட் ஆகவில்லை.

கைலாஷ் வாழ்க்கையில் காவியா, என்ற புதிய நட்பு கிடைக்கிறது அதுவும் விலகிப் போகிறது.

ஆழியின் வாழ்க்கையில் ராகுல், என்ற நண்பன் வந்த பிறகு அவனை ஏற்காமல் ஆழி தடுமாறுகிறாள்.

இதற்குப் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? அல்லது “பிரேக்கப்” சொல்லி பிரிந்தார்களா?

என்பதை இளமை ததும்ப, புது வித ரசனையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

காதல் தோல்வி என்பது மனதளவில் ஆழ்ந்த வலியை ஏற்படுத்தினாலும், அதிலிருந்து மீண்டு விட துடிக்கும் இரண்டு உள்ளங்கள்
காதல் தோல்வியால் ஏற்படும் மன அழுத்தம், மூளையில் உடல் வலியை உணரும் பகுதியை (Anterior Cingulate Ridge) செயல்படுத்துகிறது. இதனால் அதிக தூக்கம், அதிகமாக சாப்பிடுதல் அல்லது தீவிர சோகம்
என்பது கைலாஷ் என்ற கதாபாத்திரம் ஆழி என்ற கதாபாத்திரம் அற்புதமாக படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை, காதலர்களே தான் பிரச்சனையாக இருக்கிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் உலகை மையப்படுத்தி, ஒரு இளைஞன் சந்திக்கும் பிரேக்கப் அதைத்தாண்டி அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதை, பரபரப்பான திரைக்கதையில், கலக்கலான காமெடியுடன் சொல்லும், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக ‘பூக்கி’ உருவாகியுள்ளது

நடிகர்கள் & நடிகைகள்

அஜய் திஷன், கைலாஷ் என்ற கதாபாத்திரத்தில் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக வருகிறார். தன் அப்பாவை பற்றி யார் குறை கூறினாலும், கோபம் கொள்ளும் இளைஞனாக ,தன் பொருளாதாரத்தை பற்றி யார் குறை சொன்னாலும், ஏற்றுக்கொள்ள முடியாதவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலியின் பிரிவு, அதிலிருந்து மீள துடிக்கும் நினைப்பு,
அம்மாவுடன் சொந்த பந்தங்கள் வீட்டுக்கு விஷேசத்துக்கு செல்லும்பொழுது அங்கு இருப்பவர்கள் எல்லாம் தங்கை, அக்காவாக ,அம்மா சொல்லும் போது சலித்துக் கொள்ளும் சலிப்பு, காவியாவின் அப்பா தன் அப்பா தன் வீட்டில் சாணம் அள்ளியவர், என்று சொன்னவுடன் கொதிப்பது ,
காரில் இடித்து விட்டு செல்லும் அந்த மனிதரிடம் எகிரி துடிப்பது, நாயகி ஆழியிடம் ,கோபம் கொள்வது ,என்று படம் முழுக்க தனி ராஜாங்கம் நடத்தி இருக்கிறார். அற்புதமான முகபாவனை, டயலாக் ,டெலிவரி என நடிப்பில் கொடிகட்டி பறக்கிறார்.

மார்கன் படத்தில் தனது நடிப்பால் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இவர் இந்தப் படத்தில் தனித்துவமான நடிப்பில் பாராட்டுகளை பெறுகிறார்.

இயக்குனர்

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

சராசரி இளைஞனின் காதல் தான் கதையின் அடித்தளம். உடல் அழிந்தாலும் உணர்வுகள் அழிவதில்லை என்பதையும்,
.இந்த இரண்டு பாத்திரங்களுக்கிடையே நடக்கிற சீண்டல்களும் சீற்றங்களும் மிகைப்படுத்தப்படாத கவிதையாக முன்னேறிக்கொண்டே போகிறது. பகட்டான தகுதிகள் எதுவும் இல்லாவிட்டாலும், போலித்தனங்கள் இல்லாத ஒரு ஆணை எந்தப் பெண்ணும் விரும்பத்தான் செய்வாள் என்று ஓர் இலக்கணம் சொல்லி இருக்கிறார் இயக்குநர்
பிரிவு எல்லை நோக்கிப் பயணிப்பதுபோல் லேசாக பயம் காட்டி, காதலர்கள் மனதால் கலக்கும் காட்சியை நளினமாகச் சொல்லி, பளிச்சென்று படத்தில், ஒரு திருப்புமுனையைத் தருகிறார் இயக்குநர். இயக்குநராக முதல் படத்தை இயக்க வேண்டுமென முடிவெடுத்த இயக்குனர். கணேஷ் சந்திரா யோசித்தது ஒரு காதல் கதைதான். ஆனால், அந்தக் காதல் அதற்கு முன்னர் யாருமே கண்டிராத ஒரு காதலாக . சொல்லப்போனால், மினுமினுப்புகள் சேராத, காதலின் மூல வடிவத்தில் இருந்தது. இதுதான் தனித்துக் காட்டியுள்ளார் `

நாயகி தர்ஷா அழகான வரவு இளமை துள்ளும் தென்றலான, வசந்த பூ ,காதலுக்காக காதலனுக்காக, உருகுவதும், அழுவதும், துடிப்பதும், பின் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு யோகாவில் போய் சேருவது, அப்பாவுக்காக, வேறு மாப்பிள்ளைகளை தேடுவது, காதலனை மறக்க முடியாமல், மீண்டும் மீண்டும் துடிப்பது என நடிப்பில் ரெக்கை கட்டி பறக்கிறார். பூக்கி என்று தன் காதலன் சொல்வான் என்று எதிர்பார்த்தபோது ஆழி” என்று சொன்னதும் கோபம் வருவதும், பூக்கி என்று சொன்னவுடன் காதலன் வசப்படுவதும் ,என நாயகி அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

விஜய் ஆண்டனி

தன் இசை ரசிகர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் ஆண்டனி இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாடல் வரிகள், பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை, படத்திற்கு பெரிய பலம் .
ஒரு தயாரிப்பாளராக, இன்றைய காலகட்டத்திற்கு இளைஞர்களுக்கு தேவையான கதையை தேர்வு செய்து ,தயாரித்து படத்தின் தொகுப்பாளராக தொகுத்து, ஒரு வெற்றி படமாக கொடுத்திருக்கிறார்.

இவர்களுடன்
மனநல மருத்துவர் சித்திராவாக
லக்‌ஷ்மி மஞ்சு,
நாயகனின் அப்பாவாக
பாண்டியராஜன்,
தன் மகன் தனக்காக தன் லட்சியத்துக்காக ஒரு பெரிய வீடு வாங்கி கொடுத்து விட்டார் என்று கண்கலங்கி அழும் காட்சி படம் பார்ப்பவர்களை உருக வைத்து விடும்

விகாஸ் வைப்நடத்தும்
சுனில், வரும் காட்சிகள் கலகலப்பு நாயகி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி எடுத்ததற்காக அவர் சீரும் கோபம் சிறப்பான நடிப்பு
நாயகனின் அம்மாவாக,
இந்துமதி, மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக்பாஸ் சத்யா, MJ ஶ்ரீராம், அஸ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
அனைவரும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது

தொழில்நுட்பக் குழு விபரம்
தயாரிப்பு – Vijay Antony Film Corporation
தயாரிப்பாளர்கள் – ஃபாத்திமா விஜய் ஆண்டனி

வித்தியாசமான கதை களம் எழுதி இருக்கிறார்
– புதிய பரிதி

கலை இயக்கம் : பிரகதீஸ்வரன்
ஆடை வடிவமைப்பாளர் : மாளவிகா செல்வம்
நடனம் – ஹரிகிரண்
மக்கள் தொடர்பு : சதீஷ் &சிவா(AIM)

இப்படம் வெற்றி பட்டியலில் இணைகிறது.
வாழ்த்துக்கள் உடன் கிளாசிக் சினிமா🌷