எந்த காரணத்திற்காகவும் படத்தின் கதாபாத்திரம் மற்றும் கதை லீக் அவுட்டாகி விட கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து வந்தது லியோ பட குழு, அதையும் மீறி தற்பொழுது லியோ படத்தின் கதை லீக் அவுட்டாகியுள்ளது.
லியோ படத்தில் நடிகர் விஜய் மனைவியாக திரிஷா நடிக்கிறார். இவர்களின் பெண் குழந்தையாக பிக் பாஸ் ஜனனி, மற்றும் ஒரு மகன் என ஒரு குடும்பப் பின்னணியில் இந்த கதை நகர்கிறது.
ஒரு சாதாரண காபி சாப் வைத்திருக்கும் நடிகர் விஜய், அந்த காபி ஷாப்புக்கு காபி குடிக்க வரும் இருவர் தகராறில் ஈடுபடுகிறார்கள். அந்த தகராறு உச்ச கட்டத்தை அடைந்து பெரும் மோதலாக உருவெடுக்கிறது. அப்போது ஒரு சாதாரணமாக ஒரு காபி ஷாப் நடத்தி வந்த ஹீரோவான விஜய் அங்கே தகராறில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுடுகிறார். இதை பார்த்தவுடன் விஜய் மனைவி திரிஷா உட்பட அனைவரும் ஆச்சரியத்தில் பார்க்கிறார்கள்.
இதன் பின்பு நடிகர் விஜய் மீது மனைவி திரிஷாவுக்கு சந்தேகம் வருகிறது. விஜய் பின்னணி என்ன.? இதற்கு முன்பு விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று பல கேள்விகள் திரிஷாவுக்கு எழுகிறது. ஒரு காபி ஆற்றி கொண்டிருந்தவர் எப்படி திடீரென்று ஒரு துப்பாக்கியை பிடித்து சுடும் அளவுக்கு திறன் படைத்தவராக இருக்க முடியும் என திரிஷாவுக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகிறது.
இந்நிலையில் காபி ஷாப்பில் நடக்கும் துப்பாக்கி சம்பவம் செய்தியாக வெளியே பரவுகிறது. அப்போது அது சம்பந்தமான வீடியோ கிளிப்பிங் எல்லாம் வைரல் ஆகும் பொழுது, நடிகர் விஜயை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த வில்லன் கண்ணில் அந்த வீடியோ படுகிறது. பின்பு அந்த வில்லன் விஜய் இருக்கும் இடத்திற்கு விரைகிறார்கள்.
அப்போது விஜய் நான் பழைய ரவுடிசம் எல்லாத்தையும் விட்டு விட்டேன். இப்போது ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன், என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என கேட்கிறார். ஆனால் தொடர்ந்து வில்லன்கள் விஜயை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி விஜய்யை தேடி வந்து தொந்தரவு செய்யும் வில்லனாகத்தான் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார்
இதில் நடிகர் அர்ஜுன் முகம் ஒரு பக்கம் தீயினால் வெந்தது போன்று படத்தில் வருகிறார்.
காரணம் விஜயுடன் ஏற்பட்ட மோதல்
அந்த வகையில் விஜய் நடிக்கும் லியோ படம் கதை மற்றும் அர்ஜுன் நடிக்கும் லியோ படத்தின் கதாபாத்திரங்களை வைத்து பார்க்கும் பொழுது இதற்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியானது ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்கின்ற படத்தின் கதை தான் என கூறப்படுகிறத
மற்றும் பாட்ஷா படத்தின் சாயல் தெரிகிறது எது எப்படியோ லியோ சூரில் சாதனை படைக்கும் என்பது உறுதி