தமிழ் சினிமாவின் ஆரம்பகால கட்டங்களில் நடிகை, தயாரிப்பாளர் என பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் அஞ்சலி தேவி, அந்தக் காலத்திலேயே அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். சினிமாவில் அவரை ‘முதலாளியம்மா’ என்று தான் அழைப்பார்கள்.
தமிழில் ஏராளமான படங்களை தயாரித்த அஞ்சலி தேவி ‘பூங்கோதை’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை எல்.வி.பிரசாத் இயக்கினார், நாகேஸ்வர ராவ் நாயகனாகவும், அஞ்சலி தேவி நாயகியாகவும் நடித்தனர். படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியானது. தெலுங்கில் படத்திற்கு ‘பரதேசி’ என்ற தலைப்பு வைத்திருந்தனர். எஸ்.வி.ரங்காராவ், டி.கே.ராமச்சந்திரன், பண்டரிபாய், சூர்யகாந்தம் உள்பட பலர் நடித்திருந்தனர், 1953ம் ஆண்டு படம் வெளியானது.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் தான் நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமானார். அதாவது இரண்டாவது நாயகனாக நடித்தார். அப்போது சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சிவாஜி, அஞ்சலியை சந்தித்தும் வாய்ப்பு கேட்க அவர் கொடுத்த வாய்ப்பு தான் இது. ஆனால் இந்த படம் வெளிவர காலதாமதம் ஆனதால் சிவாஜி நடித்த 2வது படமான பராசக்தி முதலில் வெளியாகி அதுவே முதல்படம் ஆனது. பூங்கோதை படத்திற்காக சிவாஜி வாங்கிய சம்பளம் 101 ரூபாய்.
. எம் ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அஞ்சலிதேவி 50களில் திரையுலகின் தவிர்க்கமுடியாத நாயகியானார். 50 களில் பன்முக திறைமையுடன் கலக்கிய அஞ்சலி தேவி ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
1940 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பி. ஆதிநாராயணராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஞ்சலிதேவிக்கு, 2 மகன்கள். நவரசங்களையும் தனது படங்களில் கொடுத்த நாயகி அஞ்சலி தேவி நடிகையாக மட்டுமல்லாமல் தனது கணவருடன் இணைந்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.தன் கணவருடன் இணைந்து அஞ்சலி தேவி பிக்சர்ஸ் என்ற பெயரில் பல வெற்றிகரமான தெலுங்கு படங்களை தயாரித்தார்
1950 ஆம் காலக்கட்டத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த அஞ்சலி தேவி 2016 ஆம் ஆண்டு தனது 87 வயதில் காலமானார்.
‘கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம்
நனவாகும் ஒரு தினமே!’
என்ற பாடலின் மூலம், திரையுலகில் கவிஞராக கண்ணதாசன் அறிமுகமானார்.
அடுத்து, ஆகஸ்டு 27-ல் வந்த ‘மாயாவதி’யில் அஞ்சலிதேவியும் டி.ஆர். மகாலிங்கமும் முத்தமிட்டுக்கொண்டார்கள். இளைஞர் சமுதாயம் கிறுகிறுத்துப்போனது
தமிழ் சினிமாவில் முத்தம் இட்டுக் கொள்வதெல்லாம் அப்போது பெரிய ஒரு பரபரப்பை உண்டு பண்ணியது அந்த காலத்திலேயே முத்தமிட்ட ஜோடிகள் இவர்கள்தான் என்பது அபூர்வ செய்தி
தேவலோக அழகியாக அஞ்சலிதேவி நடித்த மற்றொரு மகத்தான வெற்றிச் சித்திரம் ‘மங்கையர்க்கரசி’. செப்டம்பர் 3ல் வெளியானது.
எழிலார்ந்த பி.யூ. சின்னப்பாவின் வசீகரத்திலும் கம்பீரத்திலும் மனத்தைப் பறிகொடுத்து, அஞ்சலி அவரைத் தன்னோடு தூக்கிச் செல்வதே திரைக்கதை. கணவனைக் காணாது கண்ணீர் விட்டுக் கடைசியில் ஒன்று சேரும் கற்புக்கரசியாக கண்ணாம்பா.
.
ஒரு மாதத்துக்குள் அஞ்சலி நடித்த மூன்று டாக்கிகள் வெளிவந்தது பரபரப்பை ஏற்படுத்தின. அவை மூன்றுமே வெற்றிகரமாக ஓடின. வெவ்வேறு காரணங்களுக்காகத் தமிழ் சினிமா சரித்திரத்தில் இடமும் பிடித்தன.
தென்னகத்தில் அஞ்சலியின் மார்க்கெட் சூடு பிடித்த சமயம். அவரது அரிதார வாழ்க்கையையே எரித்துச் சாம்பலாக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம்ழ மங்கையர்க்கரசி ஷூட்டிங்கில் நடந்தது.
‘தேவலோகம் பற்றி எரியும் காட்சி. நாற்புறமும் பயங்கரமாக வெப்பம் பரவியது. அப்படியும் இப்படியும் அலறியவாறு ஓட, இவர் புடைவையிலும் நெருப்புப் பிடித்துக்கொண்டது.
சுற்றிலும் செந்தழல்களுக்கு மத்தியில் அஞ்சலி தேவி சிக்கிக் கொண்டார்
. முகமெல்லாம் அக்னியின் அதிரடித் தாக்குதல். சில விநாடிகளில் கோரமாகிப்போனது முகம். தீப்பட்டுப் புண்ணான முகத்தைக் குணப்படுத்த மாதக்கணக்கானது.
கண்ணாடியைக் கண்களில் படாமல் மறைத்து வைத்தார் கணவர். வசீகரமான என் முகம் காண்போருக்குக் குரூரமாகத் தெரியப்போகிறது. இனி என் ‘நாயகி வாழ்வு கோவிந்தா’ என்று நினைத்து மனமொடிந்து போனார்.
வெங்கடாசலபதி இவரது குல தெய்வம். அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது!’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உடையவள் அஞ்சலி தேவி
திருப்பதி பெருமாள்… அந்த ஏழுமலையான் இவரைக் கைவிடவில்லை.
காயமெல்லாம் ஆறிய பின் என் முகம் அழகாக இருப்பதுபோல் தோன்றியது. எல்லா இடங்களிலும் தீப்புண் ஆறிவிட்டாலும், கரு விழிகளின் கீழ், இமையின் இரு புறமும் கந்திய கருமை இருந்தது.
அழகுச் சாதனங்களால் ஏற்படக்கூடிய செயற்கையான முக அழகை அக்னி தேவன் தந்த தாக பூரித்தார்- அஞ்சலிதேவி..
‘மறக்க முடியாத மர்மயோகி!’
‘அப்ப இவர் 21 வயசு. அந்த வயதில் வேர்விடும் கடைவாய்ப் பல் ஒன்று இவருக்கு முளைத்தது. ஒரு பக்கக் கன்னம் அப்படியே வீங்கிவிட்டது.
கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் மிகப்பெரிய அளவில் செட் போட்டு மர்மயோகி க்ளைமாக்ஸ் எடுத்தார்கள். முக வீக்கம் குறையட்டும் என்று எம்.ஜி.ஆர். இரண்டொரு நாள்கள்இவருக்காகக் காத்திருந்தார்.
என்ன சிகிச்சை மேற்கொண்டும் வலி குறையவில்லை. மர்மயோகிக்காக எம்.ஜி.ஆர். கொடுத்திருந்த தேதிகள் தீர்ந்தன.
: அஞ்சலி தேவி க்கும்சென்னை வாஹினி ஸ்டுடியோவில் ஷூட்டிங் இருந்தத, மர்மயோகி முடிந்த பிறகே ஜூபிடர் நிறுவனம் மதராஸுக்கு இடம் பெயர்ந்தது.
ஜூபிடர் எனது தாய் வீடு நிழல் தந்து என்னை வளர்த்துவிட்டது. அன்னைக்கு துரோகம் செய்வதா…!
பாழாய்ப்போன பல்வலியால் மர்மயோகியின் இறுதிக்கட்ட வேலைகள் மாதக்கணக்கில் தடைப்பட்டன.
இவருக்காகச் சென்னையில் செட் போட்டுக் காத்திருந்தனர். அந்த சினிமாவே என் கையை விட்டுப் போனாலும் போகட்டும். என்ன ஆனாலும் சரி, மர்மயோகி படத்தை முடித்துத் தராமல் புது ஒப்பந்தங்களில் நடிக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தார் அஞ்சலி தேவி
வீக்கம் அடியோடு மறைந்து முகம் பழைய நிலைக்கு வந்ததும், மர்மயோகியில் நடிக்கத் தயாரானார் எம்.ஜி.ஆர். மிக்கப் பெருந்தன்மையுடன் இவருக்காகத் தன் கால்ஷீட்டை மாற்றிக் கொடுத்து மர்மயோகி முடிவடைய பரிபூரண ஒத்துழைப்பு வழங்கினார்.
மர்மயோகியால் கிடைத்த லாபம், சென்னையில் ஜூபிடர் பிக்சர்ஸ் நிலைகொள்ளும் அளவுக்கு நிலைமையை மாற்றியது.
மர்மயோகி மட்டும் ஓடியிருக்காவிட்டால், ஜூபிடர் சென்னைக்கு வந்திருக்காது. மிகப்பெரிய அளவில் சாதனைச் சித்திரங்களைத் தயாரித்துப் புகழ் பெற்றிருக்காது.
மர்மயோகி முடிந்த பிறகு, முதலாளி பழநிக்கு அழைத்துச் சென்றார். தண்டாயுதபாணி ஸ்வாமியைத் தரிசிக்கக் கீழேயிருந்து மலைக்கு நடந்தே சென்றனர்
எம்.ஜி.ஆர்.- அஞ்சலிதேவி இணைந்து நடித்த முதல் படம் சர்வாதிகாரி. தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் முரசு கொட்டியது. மாடர்ன் தியேட்டர்ஸில் அஞ்சலியின் ஹாட்ரிக் வெற்றி! அதற்குக் காரணம் அஞ்சலியின் அபார நடிப்பு!
சர்வாதிகாரியாகத் துடிக்கும் எம்.என். நம்பியாரின் ‘கைப்பாவை மீனாவாக’ வருவார் அஞ்சலி. தளபதி சித்தூர் வி. நாகையா. அவரது மெய்க்காப்பாளன் எம்.ஜி.ஆரை மயக்குவது போல் நடிக்க வேண்டிய கட்டத்தில் நிஜமாகவே அவரைக் காதலிக்கத் தொடங்குவார். ’
சினிமாவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகி இருந்த நிலையில் அஞ்சலியின் நடிப்புக்கு பெரிய சவாலாக அமைந்தது சர்வாதிகாரி.
காதலுக்கும் கடமைக்கும் நடுவில் அவர் தவிக்கும் தவிப்பு, நடுவில் நிஜம் அறிந்த நாயகனின் புறக்கணிப்பு அத்தனையையும் தன் முகத்தில் காட்டி முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார் அஞ்சலி.
ஆடலரசி மட்டும் அல்ல. நடிப்பாற்றல் நிரம்பியவர் என்று ருசுப்படுத்தியது. தமிழகத்தில் அஞ்சலியை நிலை ப்படுத்தியது.
தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கி, எம்.ஜி.ஆருக்குப் ‘புரட்சி நடிகர்’ பட்டம் நிலைக்கக் காரணமாக இருந்த மகத்தான வெற்றிச் சித்திரங்கள் மர்மயோகியும் – சர்வாதிகாரியும்.
எம்ஜிஆர்
அஞ்சலி இணை பட முதலாளிகளின் ராசியான ஜோடி ஆயிற்று.
மக்கள் திலகம் பற்றி அஞ்சலி-
‘பெண்களை தெய்வமாக மதிப்பவர் எம்.ஜி.ஆர். சில நேரம் ஓடிக் கொண்டிருக்கும் காமிரா நின்றதும், அவர் பார்வை என் மீது படும். உடனே டைரக்டரிடம் போய், கரண்டைக் காலுக்கு மேலே புடைவை தூக்கிக்கொண்டு இருக்கிறது. சரி செய்த பிறகு திரும்பவும் அக்காட்சியை எடுங்கள் என்பார்.
அப்போது தான் எனக்கே விவரம் புரிந்தது. காட்சியின் போதான எம்.ஜி.ஆரின் கவனம் தெரிந்தது. பெண்மையை அவர் மதிக்கும் பண்பு புரிந்தது. எந்த விஷயத்திலும் உன்னிப்பான கவனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். ’
அடுத்தடுத்தத் தொடர் வெற்றிகளால் 1951 அஞ்சலியின் ஆண்டாகிப் போனது. ‘எங்கெங்கு காணினும் அஞ்சலியடா! ’ என்கிற நிலை.
தென்னகமெங்கும் எல்லா டாக்கீஸ்களிலும் வருடம் முழுவதும் அஞ்சலியின் படங்களே ஓடின. ஒரு சுவர் பாக்கி இல்லாமல் அஞ்சலி நடித்த சினிமா விளம்பரங்கள் நீக்கமற நிறைந்திருந்தன.
‘மனமோகன லாவண்யத்துக்கு மற்றொரு பெயர் அஞ்சலி. அதி அற்புத சவுந்தர்யத்துக்கு இன்னொரு பெயர் அஞ்சலி. பட உலகில் இவர் ஒரு மாயக்காரி, மயக்குக்காரி, சிங்காரி, ஸ்வப்ன சுந்தரி. ’ என்றெல்லாம் மூத்த சினிமா நிருபர்கள் அஞ்சலியைப் போற்றி 1951ல் எழுதுவார்கள்
‘கதை வசனம் – அறிஞர் அண்ணா’ என்று முதல் முறையாக விளம்பரப்படுத்திய சினிமா சொர்க்கவாசல். அண்ணாவின் பரிமளம் பிக்சர்ஸ் தயாரிப்பு.
புதுமுக நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் உச்ச நட்சத்திரம் அஞ்சலி ஜோடி சேருவாரா’ என்கிறத் தயக்கம் அண்ணா உள்பட அனைவருக்கும் இருந்தது.
அண்ணா ஓர் உபாயம் சொன்னார்.
‘தயாரிப்பு நிர்வாகிகளுடன் எஸ்.எஸ். ஆரே நேரில் சென்று, அஞ்சலியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரோடு நடிக்க அனுமதி கேட்கட்டும். அஞ்சலி எடுக்கும் முடிவே இறுதியானது. ’ என்றார்.
சேடப்பட்டி இளம் காளை! சூரிய நிறத்தில் வனப்பும் வசீகரமும் வளம் சேர்க்கத் தன் முன் பணிவாக நின்று, உடன் இணை சேர கோரிக்கை விடுத்த அதிசயத்தை முதன் முதலாகக் கண்டார் அஞ்சலி.
அண்ணாவைத் தேடி வந்து, ‘இவர் தான் என்னுடன் நடிக்கப் பொருத்தமானவர். இவரையே நடிக்க வையுங்கள்… ’ என்றார். புதுமுகம் எஸ்.எஸ்.ஆரை, நொடி நேர யோசனையும் இன்றி ஆதரித்து நாயகனாக அங்கீகரித்தார் அஞ்சலி.
கே.ஆர். ராமசாமி – பத்மினி, எஸ்.எஸ். ஆர்.- அஞ்சலி என்கிற வித்தியாசமான காம்பினேஷனில் வெளியானது ‘சொர்க்கவாசல்’.
பகுத்தறிவுப் பாசறையாகப் புகழ் பெற்று அண்ணாவின் உரிமைக்குரலை எங்கும் தமிழ் முழக்கம் செய்து வெற்றி வலம் வந்தது.
ரா.வே. என்று மிகச் சுருக்கமாக அழைக்கப்பட்ட ரா. வேங்கடாசலம் எழுதிய கதையை ஏவி.எம். ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் படமாக்கியது. (தமிழில் பெண், தெலுங்கில் சங்கம், இந்தியில் லடுக்கி)
மூன்றிலும் அஞ்சலி- வைஜெயந்திமாலா முதன் முதலாக இணைந்து நடித்தார்கள்.
அஞ்சலியின் ஜோடி ஜெமினி கணேசன். அவர் ஹீரோவாக ஒப்பந்தமான முதல் படம் பெண். அவர் முதன் முதலில் காதல் காட்சியில் நடித்ததும் அஞ்சலியுடன் தான்.
‘நான் மாடிப்படிகளில் ஏறிச் செல்வேன். என் எதிரில் அஞ்சலிதேவி மாடியிலிருந்து இறங்கி வருவார். இருவரும் முட்டிக் கொள்வோம். ’
இதுவே நான் நடித்த முதல் லவ் சீன். எம்.வி. ராமன் டைரக்ட் செய்தார். ஏவி.எம்மில் அதற்காக 40 முறை ஒத்திகை பார்த்தார்கள். காட்சியை எடுத்து முடிக்க ஏழு டேக் ஆகியது. ’ – ஜெமினி கணேசன்.
அஞ்சலியுடன் மிக அதிக வெற்றிப்படங்களில் நடித்த ஒரே தமிழ் ஹீரோ ஜெமினி கணேசன.
டி.கே.ஷண்முகம் குழுவினர் நடத்திய வெற்றிகரமான நாடகம் ஸ்ரீதரின் முதல் கதையான ரத்தபாசம்.
‘ ரத்தபாசம்’ படத்தில் நடிப்பதற்காக அஞ்சலிதேவியை அழைத்தோம். நாடகத்தைப் பார்த்த அவர், அதில் கதாநாயகியாக நடித்த எம். என். ராஜத்தின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்.
‘ராஜம் நன்றாகத்தானே நடித்திருக்கிறார். அவரையே நீங்கள் ஏன் சினிமாவிலும் பயன் படுத்தக்கூடாது? ஒரு சிறந்த கதாநாயகியை நீங்கள் அறிமுகப்படுத்தினால் உங்களுக்கும் பெருமை கிடைக்குமே! ’ என்றார் அஞ்சலி.
அவரது உள்ளம் உயர்ந்தது. சக நடிகையின் வாய்ப்பை நாம் தட்டிப் பறிக்கலாகாது என்று பெருந்தன்மையுடன் பேசினார் அஞ்சலி.
ஸ்டார் வேல்யூவுக்காக அஞ்சலி ரத்தபாசம் சினிமாவில் அவசியம் நடிக்க வேண்டும் என்று விளக்கினோம். அதன் பிறகே சம்மதித்தார்’.- டி.கே. ஷண்முகம்.
1957ன் தைத் திருநாளையொட்டி ஜனவரி 18ல் வெளியானது சக்கரவர்த்தித் திருமகள்! அஞ்சலிக்கு மற்றொரு ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்தது.
சக்கரவர்த்தித் திருமகளாக இளவரசி ‘கலா மாலினி’யாக எம்.ஜி.ஆருக்கு இணையான கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிப்பில் புகழ் கொடி நாட்டினார்.
புரட்சி நடிகருடனான அறிமுகக் காட்சியில் ஆண் உடையில் தோன்றி தன்னை‘மோகன்’ என்கிற யுவராஜாவாகக் காட்டிக் கொள்வார். வில்லியாக வரும் எஸ். வரலட்சுமியால் கடைசி வரையில் ஹீரோவை அடைய முடியாத சிக்கல்களில் அவதியுற்றுத் தவிப்பார்.
தன்னுடைய அரியணையில் எஸ். வரலட்சுமியை, எம்.ஜி.ஆரின் பட்ட மகிஷியாகப் பார்த்துப் பதறியவாறு அஞ்சலி நடிப்பில் விலாசி தள்ளி இருக்கிறார்
எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் தி.மு.க. அபிமானிகளுக்கும் ‘சக்கரவர்த்தித் திருமகள்’ என்றும் நினைத்தாலே தித்திக்கும் சர்க்கரைப்பொங்கல். காரணம் அதில் புரட்சி நடிகரின் கதாபாத்திரப் பெயர் உதயசூரியன்!
எம்.ஜி.ஆர். வேண்டுமென்றே அந்தப் பெயரை வைத்துக் கொண்டதாகப் பத்திரிகைகள் விமர்சித்தன.
மூன்று மொழிகளில் அதிரடியாக ஓடி‘கணவனே கண் கண்ட தெய்வம்’ சம்பாதித்த செல்வாக்கும் அஞ்சலிக்குத் தேடித் தந்த பேரும் புகழும் தென்னகத் திரையுலகில் ட்ரென்ட் செட்டராக அமைந்தன.
மீண்டும் மாயாஜாலப் படங்களுக்கான மவுசு கூடியது. நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம், காத்தவராயன் உள்பட ஏராளமான மந்திர தந்திரக் கதைகள் டாக்கிகளாகி அணி வகுத்து நின்றன. மற்ற படாதிபதிகள் சம்பாதிக்கும் போது அஞ்சலி பிக்சர்ஸ் மட்டும் வேடிக்கை பார்க்குமா
அவர் களும் மாயாஜாலம் நிறைந்த படத்தை தயாரித்தார்கள்
தைத்திருநாள் கொண்டாட்டம் ஸ்ரீதர் -பொன்மனச் செம்மல் முதன் முதலாக இணைந்த உரிமைக்குரல் வெற்றிச்சித்திரம்!
ஏ.நாகேஸ்வரராவ் நடித்த தசராபுல்லடு தெலுங்கு ரீமேக். அதில் ஏ.என்.ஆரின் அண்ணியாக அஞ்சலி நடித்திருந்தார்.
‘அடுத்த வீட்டுப் பெண்’ சினிமாவில் ஏற்பட்டக் கசப்பை மறந்து ஸ்ரீதர், அஞ்சலியை அதே வேடத்தில் தமிழிலும் அழ வைத்தார். அதில் அஞ்சலியின் கணவராக எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தவர் எஸ். வி. சகஸ்ரநாமம்.
உரிமைக்குரல் பட்டி தொட்டிகளில் ஓடி அஞ்சலியை மீண்டும் மக்கள் மத்தியில் பேச வைத்தது.
60: களில் முன்னணி நடிகையாக கலக்கிய அஞ்சலி தேவி, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்த நிலையில், உரிமைக்குரல் படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்திருப்பார்.
அஞ்சலி தேவி. தென்னிந்தியாவில் நடிகர் சங்க தலைவியாக இருந்த இவர், முதல் பெண் தலைவி என்ற பெருமையை பெற்றுள்ளார்
து.
சக்கரவர்த்தி திருமகள் 18 ஜனவரி 1957 அன்று வெளியிடப்பட்டது, மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஆனது மற்றும் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும். [
அடுத்து மர்மயோகி. எம்ஜிஆர் ஃபார்முலாவின் முதல் படம் எனச் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் ஃபார்முலா திரைப்படங்களில் மிகச் சிறந்த திரைப்படம் எனச் சொல்லலாம். மிகவும் இளம் வயது என்பதால், அவரது உடலும் இணைந்தே ஒத்துழைக்கிறது. மிகவும் இயல்பாக நன்றாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள், அரண்மனையின் உள்ளே இருக்கும் மேல் மாடியில் இருந்து மண்டபத்திற்கு கயிறு பிடித்து இறங்கி வரும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றன. வசனம்கூட அவ்வளவு அழகாக இருக்கிறது. அவரது திரையுலக வாழ்வின் மிகச் சிறப்பான திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.
அஞ்சலி தேவிதான் வில்லி. அப்போதைய முன்னணிக் கதாநாயகிகளுள் ஒருவராக இருந்த அவர், வில்லியாக நடித்திருப்பது வியப்புதான். இப்படி தமிழ் சினிமாவில் ஆளுமையாக இருந்து புரட்சித்தலைவருக்கு கதாநாயகி வில்லி அண்ணி என்று பல்வேறு வேடங்களை ஏற்று நடித்த பெருமை தேடித் தந்தவர் அஞ்சலை தேவி தீயில் முகம் கருகி அதோடு நடிப்பு போச்சு என்று நினைத்தவர் மீண்டும் அடிக்க வந்த கதை சிவாஜியும் எஸ் எஸ் ஆர் அஞ்சல் தேவியின் வீடு தேடி சென்று வாய்ப்பு கேட்ட கதை இப்படி நிறைய சொல்லலாம் அஞ்சலி தேவியின் வாழ்க்கையில் அஞ்சலதேவி என்றும் நம் நினைவில் இருப்பவர்