சார் ” திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

Cast:

Vemal
Chaya Devi
Siraj S
Saravanan
Rama
JaiyaBalan
Vijay murugan
Saravana Sakthi
Brana
Elizabeth

Story, Screenplay & Direction: BoseVenkat

Presented by: VetriMaaran, Grass Root Film Company

Producer: Siraj S, Nilofer Siraj
Production Banner: SSS Pictures

Release by – Romeo Pictures

கதை களம்

1950 களில் படிப்பறிவில்லாத தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்று அந்த ஊரிலே கோளாச்சி கொண்டிருக்கும் உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள்
இந்த ஊரில் யாரும்

படிக்கக் கூடாது என்று கடவுள் பெயரில் ஊரை ஏமாற்றி மக்களை கொத்தடிமையாக வைத்திருக்கிறார்கள் அப்பொழுது அண்ணாதுரை என்பவர் படிப்பு தான் உங்களை திருத்தும் படிப்பு தான் உங்களை வாழவைக்கும் குத்தவைத்து உட்காராதே, சமானங்கால் போட்டு உட்காரு என்று அவர்களை நல்வழிப்படுத்தி அங்கு ஒரு அரசு தொடக்கப்பள்ளி அமைத்து, எல்லோரையும் படிக்க வைக்கிறார்

சாதி யால் தங்கள் கௌரவத்தை காத்துக் கொள்ள நினைக்கும் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த அந்த ஊரின் முக்கியமான நபர்(ஜெயபாலன் )

அந்த ஏழை மக்கள் படிக்கக் கூடாது படித்தால் நம்மை கேள்வி கேட்பார்கள் அறிவு வளர வளர கூடாது எனவே அவர்களை முட்டாளாகவே வைத்திருக்க வேண்டும் என்று அந்த பள்ளிக்கூடத்தை இடிப்பதிலேயே குறியாக இருக்கிறார் வேட்டைச்சாமி “என்ற பெயரில் சாமி ஆட்டம் போட்டுக் கொண்டு இந்த பள்ளிக்கூடத்தை இடிக்க முயற்சி செய்கிறார் அந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்ய வந்த அண்ணாதுரையை பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டி ஒதுக்கி வைக்கிறார்கள் அதன் பிறகு

1980களில் அரசன் என்ற (பருத்திவீரன் சரவணன் )தன் அப்பா தொடங்கி வைத்த அரசு பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி அந்த ஊர் மக்களுக்கு கல்வி அறிவும் வெளிச்சமும் தரம் முயற்சி செய்கிறார் அந்த ஊரிலே பஞ்சாயத்து தலைவராக இருக்கும் விஜய் முருகன் அந்த ஊர் பெரிய மனிதன் பேச்சை கேட்டு பள்ளிக்கூடம் இருக்கக் கூடாது என்று ஊர் மக்களிடம் கையெழுத்து வாங்கி அந்த பள்ளிக்கூடத்தை இடிக்க முயற்சி செய்கிறார் அதை சரவணன் தடுத்து நிறுத்துகிறார் அதன் பிறகு சரவணன் அந்தப் பள்ளியில் இருந்து ஓய்வு பெறும் போது தன் மகன் (விமல்) ராமநாதபுரத்தில் ஆசிரியராக இருந்தவரை அந்த பள்ளிக்கு மாற்றம் செய்கிறார் பெரும் போராட்டத்தில் இடையே அவரை ஏன் கொண்டு வருகிறார்? மாங்கொல்லை பொன்னரசு

சிவஞானம் என்கிற (விமல் )அந்த பள்ளிக்கு வந்த பிறகு அந்த ஊர் மக்களின் பிரச்சனையை எப்படி தீர்த்தார் ?அந்த பள்ளியில் கல்வி கற்றுக் கொடுக்கும் வள்ளி டீச்சரை(சாயாதேவி)யை எப்படி கரம் பிடித்தார்? நண்பனாக பழகி துரோகியாக மாறிய சக்தியை(சிராஜ் ) எப்படி பழி வாங்கினார்? தன் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் நேர்ந்த இந்த பைத்தியக்கார பட்டத்தை எப்படி போக்கினார்? என்பதை மிகவும் சமூக அக்கறையோடு கல்வி என்பது தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்தி செல்லும் என்ற கதையை ஒரு அற்புதமான வழிமுறை படுத்தி அண்ணல் அம்பேத்கர், காமராஜர், போன்றவர்கள் போதித்த அந்த அற்புதமான மந்திரத்தை இந்த மாங்கொல்லை கிராமத்திற்கு விமல் எப்படி கொடுத்தார் என்பது கதை

அப்படி அந்த ஊர் மக்களுக்கு கல்வியை கொடுப்பதற்கு அவரது தாத்தா அண்ணா துரையும், அவரது அப்பா அரசனும் ,சிவஞானமும் என்ன விலை கொடுத்தார்கள் இந்த ஊர் மக்கள் அவர்களின் தியாகத்தை போற்றினார்களா? தூற்றினார்களா? என்பதை உணர்ச்சிமிக்க அற்புதமான கதையாக வடிவமைத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட் அவருக்கு நமது வாழ்த்துக்கள்

இதற்கு முன்பு கன்னி மாடம்

என்ற ஒரு அற்புதமான படத்தை தமிழ் சினிமா கொடுத்த இவர் தற்போது சார்” என்கிற பெயரில் கல்வியின் அருமையை சொல்கிற படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் அவரின் சமூக சிந்தனைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் காட்டும் நற் சிந்தனைக்காக அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்

விமல் சாதித்தாரா? போதித்தாரா?

ஆரம்பக் காட்சிகளில் விமல் பஸ்ஸில் செய்யும் அந்த காமெடியும் ,அதற்குப் பின் தன் நண்பன் சக்தியுடன் சேர்ந்து போடும் கரகாட்ட நடனமும், பள்ளியில் பணி புரியும் வள்ளி டீச்சரை பார்த்து சொள்ளு விட்டு அவர் பின்னாலே அலைவதும்

நான்கு மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் குளத்தில் குளிப்பதும் தன் தாத்தா கிறுக்கு என்று கலங்குவதும் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் இடைவேளை வரை காமெடி காதல் என்று சென்றாலும் இடைவேளைக்கு பிறகு தன் பொறுப்பை உணர்ந்து தாத்தா அரசு பள்ளியாக தொடங்கிய அந்த பள்ளியை தன் அப்பா நடுநிலை பள்ளியாக உயர்த்திய அந்த பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த விஜய் முருகனுடன் மோதுவதும் தன் நண்பன் சக்தியுடன் மோதுவதும் என விமல் வெளுத்து வாங்கி இருக்கிறார் அற்புதமான நடிப்பு நன்றாக நடித்துள்ளார் .

பருத்தி வீரன் சரவணன் அரசன் கதாபாத்திரத்தில் எப்படி நடித்திருக்கிறார்

பொறுப்பு உள்ள ஆசிரியராக சரவணன் நடித்திருக்கிறார் ஆசிரியர் என்றால் என்ன தெரியுமா என்று விமலிடம் கேட்கும் பொழுது பள்ளிக்கூடத்தை இடிக்க வரும் பஞ்சாயத்து தலைவரிடம் மோதும் போதும் ,பிறகு கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு பைத்தியக்காரனாக நடிக்கும் பொழுது நடிப்பில் உச்சம் தொடுகிறார் பருத்திவீரன் படத்துக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் ஒரு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு பயன்படுத்தி இருக்கிறார் கண்ணியமிக்க ஆசிரியராக வாழ்ந்து காட்டி நம் கண் முன் நல்ல மரியாதையை ஏற்படுத்திக் கொள்கிறார்

ஒரு ஆசிரியர் என்றால் எப்படி இருக்க வேண்டும் அதன் இலக்கணம் என்ன? ஏன் மக்கள் படிக்க வேண்டும் என்பதற்கு அவர் படும் துன்பம் போராட்டம் அந்த பள்ளியில் இடிக்க கூடாது என்று அவர் காட்டும் தீவிரம் தன் மகன் அந்த மாங்கொல்லை ஊருக்கு வந்து அந்த பள்ளியை மேல்நிலைப் பள்ளி யாகமாற்றுவான் என்று கனவு கண்டு எதிரிகளால் வயல் காட்டில் சூழ்ச்சி செய்யப்பட்டு மிரண்டு விழுந்து பைத்தியமாக மாறுவது இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமான நடிப்பு வழங்கி இருக்கிறார் சரவணன் இந்த படத்தின் மிகப்பெரிய பலம் சரவணன் தான்

விமல் அம்மாவாக ரமா

பருத்திவீரன் சரவணன் மனைவியாக, விமலின் அம்மாவாக, வரும் ரமா நடிப்பு அற்புதமாக இருக்கிறது இயல்பாக இருக்கிறது மகன் நீண்ட நேரம் தூங்கும் பொழுது எழுப்பி பள்ளிக்கு செல்ல வைப்பது, தன் கணவர் சரவணன் துவண்டு விழும்போது அரவணைத்து ஆறுதல் சொல்வது மகனுக்கு ஆறுதல் சொல்வது மருமகளை வரவேற்பது என்று கலக்கியிருக்கிறார் மருமகள் வள்ளி டீச்சரை பார்த்து பெருமிதத்தோடு வரவேற்பது அவர் கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்க்கிறது

கிளைமாக்ஸ் காட்சியில் தன் மகன் தன் கணவர் இருவரும் தாக்கப்படும் பொழுது துடித்து
அழுகின்ற அந்த காட்சி நிஜமான ஒரு தாயை கண் முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார்

வள்ளி டீச்சராக மாறிய சாயாதேவி

தன் அப்பாவும் அம்மாவும் சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார்கள் என்று கலங்கி, ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது தான் என் லட்சியம் என்று சொல்லும் வள்ளி டீச்சராக வரும் (சாயாதேவி) நடிப்பு அற்புதம் விமல் காதலை சொல்ல வரும் பொழுது ஒதுங்கிப் போவதும் அவரின் குறும்பத்தனத்தை ரசிப்பதும் ,வில்லன் சக்தியின் கையால் தாக்கப்பட்டு மயக்க நிலையில் கிடப்பதும் நான்கு மணிக்கு எழுந்து குளத்தில் குளிப்பதும் என வள்ளி டீச்சராக நம் மனதில் இடம் பிடிக்கிறார்

சாந்தமான முகம் அசல் டீச்சர் என்று மனதில் பதிகிறார்

மற்ற கலைஞர்கள்

மாங்கொல்லை ஊராட்சியின் பஞ்சாயத்து தலைவராக வரும் விஜய் முருகன் சரியான வில்லத்தனத்தை செய்து இருக்கிறார் ஊர் பெரியவரின் பேச்சை கேட்டு அந்த பள்ளிக்கூடத்தை இடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார் பருத்திவீரன் சரவணனுக்கும் விமலுக்கும் சரியான ஒரு வில்லனாக மிரட்டி இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

விமலின் பள்ளிக்கூடத்தில் சக ஆசிரியராக வேலை செய்யும் குட்டி புலி சரவண சக்தி ஒரு சரியான குள்ள நரி யாக அப் லாஸ் வாங்குகிறார் அதேபோல நாயகி டீச்சரின் சகத் தோழியாக வரும் பிரியாவும் நல்ல பெயரை வாங்குகிறார்

நண்பன் என்ற பெயரில் துரோகம் செய்யும் சக்தி

விமலுக்கு நண்பனாக வந்து அவருக்கு துரோகியாக மாறும் சிராஜ் நல்ல தேர்வு குள்ளநரியாக இருந்து தன் தாத்தாவுக்கு சத்தியம் செய்து கொடுத்த பேரனாக பள்ளிக்கூடத்தை இடிப்பதற்காக பல வகைகளும் சூழ்ச்சி செய்யும் அந்த கதாபாத்திரம் படத்தின் மிகப்பெரிய பலம் நன்றாக நடித்திருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் பரிதாபமாக அவரின் முடிவு உச்கொட்ட வைக்கிறது

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு விமலிடம்,பாசம் பொழிய பேசும் போதும் ,விமல் தாக்கப்படும் போது குரூரமாக சிரித்துக் கொண்டு செல்லும் போதும் ,தான் ஒரு சரியான வில்லன் என்பதை நிரூபித்திருக்கிறார் நன்றாக நடித்திருக்கிறார்
வாழ்த்துக்கள் சார்

சாமியாடியாக வரும் சாதி வெறி பிடித்த ஜெய பாலன்

சாதி வெறி பிடித்த வராக ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கிறார் அந்த ஊரில் ஏழை குழந்தைகள் படிக்கக் கூடாது பள்ளிக்கூடம் இருக்கக் கூடாது என்று சாமி ஆட்டமாடி இந்த பள்ளிக்கூடத்தை இடிப்பதிலேயே குறியாக இருக்கிறார் இப்படிப்பட்ட குள்ளநரிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தி அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்

ஏழைக் குழந்தைகள் படித்து முன்னேறினால் நம்மை மதிக்க மாட்டார்கள் என்ற சாதி திமிர் பிடித்த கதாபாத்திரம் அந்த ஊரிலே நாம் தான் பெரிய கோலச்சியாக இருக்க வேண்டும் என்ற அகம்பாவம் ஈகோவும் கொண்ட அந்த கதாபாத்திரத்தில் ஜெயபாலன் நடிப்பு நன்றாக இருக்கிறது

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஆர்ட் டைரக்டர்

சித்துக்குமாரின் பாடல்கள் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை சிறப்பாக இசையமைத்திருக்கிறார் விவேகா வின் பாடல் வரிகளில் “படிச்சிக்கிறோம் படிச்சிக்கிறோம் என்ற பாடல் அற்புதம். ஆந்தகுடி இளையராஜாவின் கரகாட்டமும் அந்த குத்துப்பாடலும் செம்மையாக ரசிக்க வைக்கிறது

ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ ஹரிஷ்

மூன்று கட்டங்களில் நடக்கும் இந்த கிராமத்து வாழ்வியலை அருமையாக படம் எடுத்திருக்கிறார்.

கலர் கரெக்ஷன், டி ஐ பணி செய்தவர்களும் பொறுப்பாக படத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் கள்

ஸ்ரீஜித்தின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது கதைக்கு தேவையான காட்சிகள் மட்டும் உயிர் கொடுத்து மற்றதை ஒதுக்கி தள்ளி படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு வழி வகுத்திருக்கிறது அவரின் படத்தொகுப்பு

ஆர்ட் டைரக்டர் பாரதி புத்தர் பள்ளிக்கூடத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார் மற்றும் வில்லனின் வீடு விமலின் வீடு என எல்லா இடத்திலும் அவரின் கைவண்ணம் பளிச்சென்று தெரிகிறது

சுகுணா திவாகரின் தமிழ் வசன வரிகள் ஆழமானது அற்புதமானது படத்திற்கு உயிர்நாடியை போன்றது வாழ்த்துக்கள் மேம்

Sound Mix- Siva Kumar
DI : Sarangs DI
Colorist: Sreejith Sarang
Co directors – Ganga K Mathan, Thirunavukarasu GM
Associate directors – A.Anbarasan, Premkumar Balan
Assistant directors – M.Dharman, F.A.A.S Victor, Sibi Saravanan, Arun Anbalagan
Second unit DOP – Ravin
DOP Team – Deepa.Rooban, Suman, Anish Periyanna, Umapathy, Naveen
Assistant editor K.Tharun
Manager : S. SivaKumar
VFX Studio: Pixel Light Studio
Line Producer – Dhandapani
Music Label: SSS Pictures
PRO: Sathish S2MEDIA
Marketing & Promotion: KV MOTHI – DEC
Publicity Designer: Selvaa

என இப் படத்தில் பனி புரிந்து தமிழ் சினிமாவுக்கு தேவையான ஒரு படமாக கொடுத்து கல்வியை பற்றி அருமையாக படம் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இயக்குனர் போஸ் வெங்கட்

நல்ல நடிகராக விளங்கிய இயக்குனர் போஸ் வெங்கட் தற்போது சமுதாயத்துக்கு தேவையான நல்ல கதைகளை தேர்வு செய்து இயக்கி வருகிறார்

முதல் படம் கன்னி மாடம் ஆணவக் கொலைகளை பற்றி பேசியது இப்பொழுது இந்த படம் ஏழை மக்களின் கல்வி நிலையை பற்றி பேசுகிறது உயர்ந்த சாதியினர் சாமியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி வஞ்சிக்கிறார்கள் என்பதை தன் சிந்தனையின் மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறார்

படம் எந்த இடத்திலும் கருத்து சொல்லும் ஆவணப்படம் போல் இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி படத்தில் காமெடி ,காதல், பாசம் ,தாத்தா பேரன், சென்டிமென்ட் வில்லத்தனம் என எல்லாவற்றையும் கலந்து கட்டி லாஜிக் மீறாமல் இப்படத்தை கொடுத்து இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம் இதே போன்று நல்ல படமாக தேர்வு செய்து எடுங்கள் நிச்சயம் உங்களை தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் ஆலோசனை பேரில் பல காட்சிகளையும் எடுத்திருக்கிறார்

இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் அசுரன் படத்தில் வெற்றி மாறன் அவர்கள் ,எழுதிய வசனம்

“பணம் இருந்தால் புடுங்கிக்குவாங்க நிலமிருந்தா புடுங்கிக்குவாங்க படிப்பு ஒன்று தான் நம்மை கரை சேர்க்கும் “என்ற அந்த ஒற்றை வார்த்தையை மனதில் பதிய வைத்து கல்விக்காக படம் எடுத்த இயக்குனர் போஸ் வெங்கட் அவர்களுக்கும், இதை வெளியிட்ட நல்ல மனதோடு முன்வந்த இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கும், ரோமியோ பிக்சர்ஸ் அவர்களுக்கும், தயாரிப்பாளர் சிராஜ் அவர்களுக்கும், இப்படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மக்கள் தொடர்பாளர் சதீஸ்வரன் அவர்களுக்கும், கிளாசிக் சினிமா வின் வாழ்த்துக்கள்