ராக்கெட் டிரைவர் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்துள்ள “ராக்கெட் டிரைவர்”.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்க ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக “ராக்கெட் டிரைவர்” உருவாகியுள்ளது

இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நல்ல நடிகராக வலம் வருவார் வாழ்த்துக்கள்.

கதை களம் என்ன வாங்க பார்க்கலாம்

தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர்(பிரபா), உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலாக அவரது 17-வயதில் அப்துல் கலாம் என்று சொல்லிக் கொண்டு வரும் நாக விசுவாவை சந்திக்கிறார் அவர்கள் இருவரும் படம் முழுவதும் பயணிக்கிறார்கள்

ஐயா அப்துல் கலாம் அவர்கள் 1948 காலகட்டத்தில் வருவதாக காட்டப்பட்டிருக்கிறது 1948 இல் இருந்து எப்படி 2023 வந்தார் அவர் ஏதோ பெரிய செயலை செய்ய வேண்டும் என்று நோக்கத்தோடு வந்திருக்கிறார் என்று நாயகன் நம்புகிறார்

நாயகி சுனைனாவிடம் இது பற்றி கூறுகிறார் நம்ப மறுக்கும் சுனைனா பிறகு அப்துல் கலாமாக வந்திருக்கும் அந்த சிறுவன் கொண்டு வந்திருக்கும் கடுதாசியை கண்டவுடன் நம்புகிறார்

அதற்கு பிறகு அந்த சிறுவன் பத்திரமாக ராமேஸ்வரம் செல்ல

அந்த சிறுவனை கூட்டிக்கொண்டு ராமேஸ்வரம் வருகிறார் நாயகன் பிரபா அங்கு அப்துல் கலாம் வீட்டுக்கு செல்கிறார்கள்

அந்த சிறுவனின் போட்டோ இருக்கிறது பிறகு காத்தாடி ராமமூர்த்தியை சந்திக்கிறார்கள் சாஸ்திரியாக அவர் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது டேய் சாஸ்திரி என்று நாக் விஸ்வா அழைக்க மலரும் நினைவுகளால் சாஸ்திரியும் நண்பராக நட்பு கரம் நீட்டவளர்கிறது அவர்கள் நட்பு

அதன் பிறகு என்ன நடந்தது ?கதைக்குள் அண்ணாச்சி எப்படி வந்தார்?

அப்துல் கலாம் கண்ட கனவு நிறைவேறியதா? அவர் செய்யத் தவறிய விஷயம் என்ன ?இதனால் பிரபா என்ன கற்றுக் கொண்டார்? என்பதை அற்புதமாக சொல்லி இருக்கும் படம் தான்” ராக்கெட் டிரைவர்!

பிரபா வாக விஸ்வந்த்

அறிமுக நாயகன் விஸ்வந்த் முதல் படத்திலேயே நன்றாக நடித்திருக்கிறார் இட்லி கடை வைத்திருக்கும் தன் அப்பாவை பார்த்து சின்ன மூளை சின்ன கனவு என்று சலித்துக் கொள்ளும் பொழுதும் ,படித்த பட்டதாரி யான நமக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் தான் கிடைத்தது என்று வருந்தும் பொழுதும் அப்துல் கலாமாக நாக விஸ்வாவை சந்திக்கும் பொழுதும், கிளைமாக்ஸ் காட்சியில், மனம் உருகி நமக்கு எது கிடைக்குமோ. அதான் சிறந்தது என்று திருந்தும் பொழுதும் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்

நல்ல தேர்வு எதிர்காலம் அவருக்கு பிரகாசமாக இருக்கிறது

நாக விஸால் நடிப்பு எப்படி?

இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், படத்தின் பிரதான புள்ளியாக இவர்தான் மறைந்த அறிவியல் ஆசான் அப்துல் கலாம் போன்று வருகிறார்

அப்படியே நடித்து பாராட்டை வாங்குகிறார்

தான் யார் எதற்காக சென்னை வந்தோம்! யாரும் தெரியாத ஊரில் ஆட்டோ டிரைவர் பிரபா வழிகாட்டுதலோடு மீண்டும் ராமேஸ்வரம் திரும்பவும் நாக விஷால் நடத்தும் சுவராஸ்மான பகுதி ரசிக்க வைக்கிறது

காத்தாடி ராம மூர்த்தியை பழைய நண்பனாக எண்ணி டேய் என்று அழைப்பது நல்ல சிரிப்பை வரவழைக்கிறது காமெடிக்கு அந்த போர்ஷன் நன்றாக கை கொடுத்திருக்கிறது

கலக்கல் காத்தாடி ராமமூர்த்தி

காத்தாடி ராமமூர்த்தி,

அப்துல் கலாம் அவர்களின் 1948 ஆம் வருடத்திய நண்பராக வருகிறார் அவர் வந்த பிறகு படத்தில் செம கலகலப்பு படம் விறுவிறுப்பாக போகிறது அப்துல் கலாம் அவர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக தேடும் இடம் சூப்பரா இருக்கிறது நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார் காத்தாடி ராமமூர்த்தி

சுனைனா, ஒரு சில காட்சிகள் வந்தாலும் அழகாக இருக்கிறார் நாயகனுக்கு அன்பை போதிக்கிறார்

ஜெகன் அதிக காட்சி இல்லை என்றாலும் வந்த ஒரு காட்சியிலேயே அசத்தி விட்டுப் போகிறார்

நாயகனின் தந்தையாக வரும் இட்லி கடை நடத்தி வரும் கோபால் தன் இயலாமையை எண்ணி தன் மகன் திட்டும் பொழுதும் ஏக்கத்தோடு பார்க்கும் அந்த பார்வை கடைசி காட்சியில் மகன் திரும்பி வந்து தந்தையை பாஸ்போர்ட் அழைக்கும்போது ஒன்றுமே புரியாமல் வியக்கும் அந்த நடிப்பு நன்றாக இருக்கிறது

அண்ணாச்சியாக நடித்திருக்கிறார் ஜெயக்குமார் ஓரிரு காட்சிகள் என்றாலும் படத்தில் மைய புள்ளி அவர் தான் அப்துல் கலாம் சாஸ்திரி மீது அவர் காட்டும் அன்பும் பாசமும் மெய்சிலிர்க்க வைக்கிறது
.